அறிகுறிகள் :வாயுமண்டலத்தின் சீரற்ற தன்மையினால் நரம்பு மண்டலம் பலவீனமடைந்து தூக்கமே இல்லாமை அல்லது எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருப்பது என்ற நிலையிலிருந்து மருந்து மாத்திரை இல்லாமல் முற்றிலும் விடுபட முடியும்
மண்டலம் – வாயு மண்டலம்
காய் – புடலங்காய்
பஞ்சபூதம் – காற்று
மாதம் – ஆடி
குணம் – தியாகம்
ராசி / லக்கினம் – கடகம்
சத்துக்கள் : புடலங்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
தீர்வு : காலை மற்றும் இரவு வேளை உணவாக புடலங்காய் (100 கிராம்), வெண்பூசணிக்காய் (100 கிராம்) இவை இரண்டையும் எடுத்து நன்றாக கழுவி தோல் மற்றும் விதையுடன் நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி (தேவைப்படுமெனில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்) உணவிற்குப் பதிலாக குடிக்கவும். அல்லது இரண்டையும் நறுக்கி நீராவியில் வேக வைத்து பொறியலாகவோ, ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால் வாயு மண்டலத்தின் சீரற்ற தன்மையினால் நரம்பு மண்டலம் பலவீனமடைந்து தூக்கமே இல்லாமை அல்லது எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருப்பது என்ற நிலையிலிருந்து மருந்து மாத்திரை இல்லாமல் முற்றிலும் விடுபடலாம். பின்பு பசித்தால் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்
வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.