30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
cancer reason
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கேன்சர் ஏன் வருகிறது? தடுக்க என்ன வழி?

கேன்சர் நோய்க்கு முக்கிய காரணம் மக்களிடையே  ஏற்பட்டுள்ள சமீப கால உணவு பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றமே. வேலையை குறைத்துக் கொள்வதற்காக எளிதாக கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவு பண்டங்களை வாங்கி பயன்படுத்துவதே.

 

அது மட்டுமில்லாமல் ரீஃபைன்ட்  ஆயில், ரீபைன்ட் சர்க்கரை, ரீஃபைன்ட் உப்பு என கெமிக்கல் கலந்த உணவுப் பொருட்களை பயன்படுத்துவதே. சாலையோர கடைகளில் திரும்பத் திரும்ப காய்ச்சும் எண்ணெய்களில் பொரிக்கப்பட்ட வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பண்டங்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  திரும்பத் திரும்ப  எண்ணெய்யைக் காய்ச்சும் போது அதில் உணவுப் பொருட்கள் திரிந்த கார்பன் அதிகமாகிறது.

 

நம் முன்னோர்கள் சின்ன சின்ன நோய்களுக்கு மருத்துவரிடம் செல்லாமல் நாட்டு வைத்தியத்தின் மூலம் குணப்படுத்தி வந்தார்கள். ஆனால்  தற்சமயம் ஜலதோஷம், இருமல் போன்றவைகளுக்கு கூட தன்னிச்சையாகவும்,  மருத்துவரை நாடி மருந்து மாத்திரை வாங்கி குழந்தைப் பருவம் முதல் அதிகமாக உட்கொண்டு உடனடியாக நிவாரணம் கிடைக்க வழி செய்து கொள்கிறோம்.  இதனால் நோய் குறைவது தவிர நோய்க்கான நச்சு வெளியேறாமல் உடலில் தங்கி பக்க விளைவுகளாக கேன்சர் மற்றும் பல வியாதிகளுக்கு காரணியாகின்றன.

 

பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் பால், தயிர் போன்றவைகள் வெகு நாள்கள் கெடாமல் இருக்க ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்ற கெமிக்கல் சேர்க்கப்பட்டு  பேக் செய்யப்படுகிறது. இது கேன்சருக்கு வழிவகுக்கும். அதே போன்று பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் உப்பில் சேர்க்கப்படும் ஃபுளூரைடு என்ற வேதிப் பொருளும்  கேன்சருக்கு வழிவகுக்கும்.

 

பிராய்லர் கோழிகள் சதைப்பற்றாக இருக்க  போடப்படும்  ரசாயன ஊசி மருந்தும் நமக்கு புற்று நோய்க்கான காரணியாகிறது. காய்கறிகள், தர்பூசணி போன்ற பழங்களின்  நிறங்கள் எடுப்பாக இருக்க ஊசிகள் மூலம் கெமிக்கல் செலுத்தப்படுகிறது. இவைகளை உணவாக எடுத்துக் கொள்ளும்போது கேன்சர் செல்கள் உருவாகின்றன.

 

மைதா மாவில் ஜவ்வு போன்ற ரப்பர் தன்மைக்காக அல்லோக்ஸின் என்ற கெமிக்கல் சேர்க்கப்படுகின்றன.  இது கேன்சர் செல் உருவாகக் காரணியாகிறது. செக்கிலிருந்து  நேரடியாக கிடைக்கும்  எண்ணெய், நாமே வீட்டில் தயார் செய்யும் பொடிகள், மசாலா பொருட்கள், வீட்டில் வேக வைத்து தயாரிக்கும் உணவு வகைகள் ஆகியவைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் கேன்சர் நோயிலிருந்து தப்பிக்க நல்ல தீர்வாக அமையும்.cancer reason

Related posts

எலும்புகளை பாதுகாக்க தினசரி இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்…

nathan

கவனம் தேவை! அடிக்கடி தொண்டையில் பிரச்சினையா?

nathan

கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகள்!!!தெரிந்துகொள்வோமா?

nathan

டெல்லி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு!!! ஆண்களை போலவே பெண்களும் நின்றவாறே சிறுநீர் கழிக்கலாம் –

nathan

வலி, வீக்கத்தை போக்கும் புளிச்ச கீரை

nathan

காதலிக்கும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

nathan

உங்களுக்கு கண் அடிக்கடி அரிக்குதா? சூப்பரா பலன் தரும்!!

nathan

செலவுகளுக்கு கடிவாளம் போடுவது எப்படி?

nathan

தெரிந்துகொள்வோமா? பாதவெடிப்பு வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

nathan