26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
2nd 1531914479
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இந்த சாறு சிறுநீரக கற்களை வேகமாக கரைக்க உதவுகிறதாமே!

நம்மில் பலர் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டு, மரண வேதனை அணுபவித்து, இதை குணப்படுத்த சரியான வழி எது என்று அறியாமல் தவித்து வருவதுண்டு. சிறுநீரக கற்களை உடனடியாக உடலில் இருந்து வெளியேற்ற, எந்த மருத்துவம் சிறந்தது, எந்த மருந்தை உட்கொள்ள வேண்டும் என பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். உங்கள் கேள்விகளுக்கெல்லாம் விடை இந்த பதிப்பில் உள்ளது. ஆம், சிறுநீரக கற்களை வேகமாக கரைத்து, வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவும் சாறு குறித்தே நீங்கள் இங்கு படித்தறியப் போகிறீர். அப்படி எந்த சாறு சிறுநீரக கற்களை அத்துணை வேகமாக கரைக்கும் என்று யோசிக்கிறீர்களா? அதை பற்றித்தான் இந்தக் கட்டுரையில் நாம் படிக்கப்போகிறோம்..

இந்த மேஜிக் சாறு குறித்து படித்தறியும் முன், சிறுநீரக கற்களை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.!

சிறுநீரக கற்கள் சிறுநீரக கற்கள் என்பவை சிறுநீரகத்தில் கரைந்துள்ள தாதுப்பொருள்கள் கட்டியாக சேர்ந்து, கற்கள் உருவாவதே! சிறுநீரக கற்கள் கால்சியம் ஆக்சலேட் எனும் தாதுவால் உருவாகிறது; இந்த கற்களின் பெரும்பகுதி கால்சியம் ஆக்சலேட் ஆகவும், மற்ற தாதுக்கள் சேர்ந்தும் இவை உருவாகின்றன.

கற்களின் அளவு: இந்த கற்கள் வடிவத்தில் வேறுபடலாம்; மேலும் இவை 30-50 வயதானவர்களில் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பாரம்பரிய முறையாக, அதாவது மரபணுக்களின் மூலமாகவும் இந்த நோய் ஏற்படலாம். முன்னோர்கள் யாரேனும் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கும் ஏற்படும் வாய்ப்புண்டு. இந்த கற்கள் கூரிய முனகள் கொண்டவை; படிகத் தன்மை கொண்டவை. சிறுநீரகக் கற்கள் கூரிய முனைகள் கொண்டிருப்பதால், இவை உடலின் உள்ளுறுப்புகளை பாதிக்கும் அபாயம் உண்டு. மேலும் இந்த கற்கள் சிறுநீரக குழாயை அடைத்து விட வாய்ப்பிருப்பதால், இவற்றை உடனடியாக நீக்க வேண்டியது அவசியம்.

எதனால் உருவாகின்றன? இந்த கற்கள் எதனால் உருவாகின்றன என்று ஆராய்ந்தால், ஒரு நாளைக்கு பருக வேண்டிய சராசரி நீரை பருகாமல் தவிர்ப்பதால் அதாவது 4 கிளாஸிற்கும் குறைவான நீர் அருந்துவதால், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். மேலும் மைக்ரைன் தலைவலிக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள், கால்சியம்,வைட்டமின் டி சத்திற்காக உட்கொள்ளப்படும் மருந்துகள் போன்றவற்றை தொடர்ந்து உட்கொண்டாலும் சிறுநீரக கற்கள் ஏற்படலாம்.

அறிகுறிகள் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகி இருப்பதை பிறப்புறுப்பிற்கு அருகே தீவிர வலி, இரத்தம் கலந்த சிறுநீர், வாந்தி, மயக்கம், குறைந்த சிறுநீர் வெளிப்படுதல், எரிச்சல் உணர்வு, அரிப்பு உணர்வு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மூலம் அறிய இயலும்.

பக்கவிளைவுகள்: இச்சிறுநீரக கற்கள் உடல் எடை அதிகரிப்பு, டையேரியா, உயர் இரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இந்த கற்களை உடலில் இருந்து நீக்க பாட்டி-வீட்டு வைத்தியமே சிறந்தது. இந்த கற்களை கரைப்பதன் மூலம், இவற்றை எளிதாக வெளியேற்றலாம். இந்தக் கற்களை கரைக்க உதவும் சாறு குறித்து அடுத்து பார்க்கலாம்.

மேஜிக் சாறு.! சிறுநீரக கற்களை கரைக்கும் அந்த அற்புத மேஜிக் சாறு – கரும்பு சாறு. கரும்புச்சாறு கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது பல மருத்துவ குணங்களை கொண்டது; கரும்பு சாறில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

சத்துக்கள் அதாவது 28.35 கிராம்கள் அளவுள்ள கரும்பு சாறில் 111.13 கிலோ ஜுல் (26.56 கிலோ கலோரிகள்) ஆற்றலும், 27.51 கிராம் கார்போஹைட்ரேட்டும், 0.27 கிராம் புரோட்டீனும், 0.37 மில்லி கிராம் இரும்புச்சத்தும், 41.96 மில்லி கிராம் பொட்டாசியமும், 17.01 மில்லி கிராம் சோடியமும் நிறைந்திருக்கும்.

நன்மைகள் இத்துணை சத்துக்கள் நிறைந்த கரும்புச்சாறை பருகுவதால், உடலுக்கு பற்பல நன்மைகள் கிடைக்கும். கரும்பு சாறு குடிப்பது உடல் உள்ளுறுப்புகளுக்கு மிகவும் நல்லது; குறிப்பாக கல்லீரலுக்கு தேவையான சர்க்கரை சத்து கரும்பு சாறில் இருந்து போதுமான அளவு கிடைக்கிறது. மேலும் கரும்பு சாறு மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது. கரும்பு சாறு மஞ்சள் காமாலை போன்ற பல உயிரைக் கொள்ளக்கூடிய நோய்களை மிக எளிதில், சீக்கிரமாக குணப்படுத்தி விடுகிறது.

உடனடி தீர்வு சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற வேண்டும் என முந்தைய பத்தியில் பார்த்திருந்தோம், அதன்படி கரும்புச்சாறினை தொடர்ந்து பருகுவதன் மூலமாக சிறுநீரக கற்களை எளிதில் குறைக்கலாம். ஆனால், இது ஒவ்வொருவரின் உடல் தன்மையை பொறுத்து மாறுபடும். ஆகையால், மருத்துவ ஆலோசனையுடன் இந்த சிகிச்சை முறையை, இந்த சாறை பருகுவது நல்லது. அவ்வப்போது பருகுவதால் அபாயமில்லை; ஆனால், கற்களை கரைக்க தொடர்ந்து பருவத்தில், ஒருமுறை மருத்துவ கலந்தாலோசிப்பு மேற்கொள்வது நல்லது. பொதுவாக சிறுநீரக கற்கள் உடலின் நீர்ச்சத்து குறைவால் ஏற்படுபவை. ஆகையால், அவற்றை அதிக நீர் பருகுதல், குளுக்கோஸ் கலந்த நீர் பருகுதல் மற்றும் தொடர்ந்து கரும்புச்சாறு பருகுதல் மூலமாக எளிதாக, விரைவாக குணப்படுத்தலாம். கரும்புச்சாறு சிறுநீரக கற்களை நீக்குவதோடு, சிறுநீரகம் சீராக செயல்பட பெரிதும் உதவுகிறது.

பிற பயன்கள் கரும்புச்சாறு பருகுவதை ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவமும் பரிந்துரைக்கிறது. ஏனெனில், சிறுநீரக கற்களின் பக்க விளைவாக கூடிய உடல் எடை மற்றும் இரத்த அழுத்தத்தை எந்த வித மாத்திரை மருந்தும் இன்றி விரைவாக குறைக்க இந்த சாறு உதவுகிறது. குண்டான தேகம் கொண்டவர்கள், உடல் எடையால் அவதிப்படுபவர்களும் அடிக்கடி அல்லது தொடர்ந்து கரும்புச்சாறு பருகுவதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

2nd 1531914479

Related posts

பல் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…விளையாட்டுக்களினால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதா?

nathan

காதலிருந்தும் பெண்கள் காதலை ஏற்க மறுப்பது ஏன்?

nathan

இரும்புச்சத்து அதிகமானால் என்ன ஆகும் தெரியுமா..?

nathan

கர்ப்பிணிகள் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்கள்

nathan

உடலில் கொலஸ்ட்ரால் குறைய நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான்!!

nathan

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பற்றிய ஒரு பார்வை

nathan

சூப்பர் டிப்ஸ்! எலுமிச்சை மற்றும் உப்புடன் இந்த பொருளை மட்டும் சேர்த்து பாருங்க…!!

nathan

முப்பது வயதிற்கு மேல் குடிப்பழக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டியதற்கான காரணங்கள்!!!

nathan