28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 1531818832
மருத்துவ குறிப்பு

நீங்கள் சைனஸால அவதிப்படறீங்களா? அப்ப இத படிங்க!

பனிக்காலங்களில், நாம் சிலரைப் பார்த்திருப்போம். குனிந்த தலை நிமிராமல், கையில் கைக்குட்டையை வைத்து மூக்கின் புருவ நுனிகளில் அழுத்தியபடி, அடிக்கடி தும்மிக்கொண்டு, மெதுவாக நடந்து கொண்டிருப்பார்கள் அல்லது சோர்ந்துபோய் மூக்கை கைக்குட்டையைக் கொண்டு துடைத்துக்கொண்டே உட்கார்ந்திருப்பார்கள்.

நமக்கு தெரிந்தவர்கள் இப்படி ஒரு நிலைமையில் இருந்தால், நாம் அருகில் சென்று விசாரிப்போம் இல்லையா? அருகில் சென்று முகத்தைப் பார்த்தால், ஒரு நிமிடம் நாம், அதிர்ந்து போவோம். முகமெல்லாம் வீங்கி, மூக்கு சிவந்து, புருவங்கள் பெருத்து, காண்பதற்கே, அச்சம் தரும் நிலையில் இருக்கும் அவர்கள் முகம்.

என்ன ஆச்சு அவர்களுக்கு? ஏன் இப்படி சோர்ந்து போய் இருக்கிறார்கள்? சைனஸ் எனும் மூக்கடைப்பு பாதிப்பால், வரும் சிரமங்களே அவை. உலகில் பதினைந்து சதவீதம் மக்களை பாதிக்கும் ஒன்றாக, சைனஸ் இருக்கிறது.

சைனஸ் பாதிப்பு. சுவாசத்தில் கலந்து வரும் கிருமிகளை, நச்சுக்களை தடுத்து, சுத்தமான காற்றை உடலுக்கு செலுத்தும் பணிகளைச் செய்யும் சுவாச ஃபில்டர்களே, சைனஸ் எனும் காற்றறைகள். இதில் நச்சு பாதிப்புகள் மற்றும் எலும்பின் வளர்ச்சிகள் கோளாறாகும்போது, ஒவ்வாமை மற்றும் கிருமித்தொற்றுகளால், தும்மல், மூக்கில் நீர் வடிதல், கண் புருவத்தில் வலி, தலையைக் குனிந்தால் கடுமையான வலி மற்றும் தலைவலி போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படும்.

வீட்டு வைத்தியம் நீண்ட கால அளவில் இயற்கை மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம், சைனஸ் பாதிப்புகளை விலக்கமுடியும். ஆயினும், பலரும், சைனஸ் தொற்று பாதிப்பு கடுமையாகும்போது மட்டுமே, நிவாரணங்களைத் தேடுகின்றனர். சைனஸ் பாதிப்பு ஏற்படப்போகிறது என்பதை நாம், சில அறிகுறிகள் மூலம் அறிந்துகொண்டு, அதற்கேற்ப சில எளிய வீட்டு மூலிகைகளை சாப்பிட்டு வந்தால், பாதிப்பிலிருந்து விலக முடியும்.

கருஞ்சீரகம் சைனஸ் காரணமாக மூக்கடைத்துக் கொண்டு, மூச்சுவிட சிரமப்படும் காலங்களில், கருஞ்சீரகத்தை சிறிது எடுத்து, மெல்லிய பருத்தித் துணியில் முடிந்து, அதை அடைத்த மூக்கில் வைத்து, உள்ளிழுக்க, உடனடி பலன் கிடைக்கும். இது மூக்கடைப்பை குணப்படுத்தும்.

நீலகிரி தைலம், நீலகிரி தைலம் அல்லது பைன் எனும் டர்பன்டைன் ஆயிலை சில துளிகள் கொதிக்கும் நீரில் இட்டு, முகத்தை துணியால் மூடி, ஆவி பிடித்து வர, உடனே, சைனஸ் மூக்கடைப்பு மற்றும் தலைவலி விலகும்.

ஆலிவ் ஆயில் அலர்ஜி காரணமாக ஏற்படும் மூக்கில் நீர் வடிதல் பாதிப்புக்கு, ஆலிவ் எண்ணையை மூக்கைச் சுற்றி தடவிவரலாம். மேலும், கண்களைச் சுற்றியும் தடவ, சைனஸ் மூக்கடைப்பு, நீர் வடிதல் குணமாகும். முக வீக்கம் மற்றும் கண் புருவ வீக்கம் போக்கும் வழிகள். சைனஸ் அலர்ஜி காரணமாக சிலருக்கு முகம், மூக்கு மற்றும் கண் புருவங்கள் வீங்கி காணப்படும். ஐஸ் அல்லது சுடுநீரில் மூக்கைச்சுற்றி ஒத்தடம் கொடுத்துவர, வீக்கங்கள் வற்றி, முகம் இயல்பாகிவிடும். மூக்கடைப்பும் சரியாகும்.

வெங்காயம் மற்றும் பூண்டு காரத்தன்மைகொண்ட பூண்டும் வெங்காயமும், சைனஸ் பாதிப்பை குணமாக்கும். வெங்காயத்தை அல்லது பூண்டை பச்சையாக அல்லது துவையல் போல செய்து சாப்பிட்டு வரலாம். தினசரி உணவில் அதிக அளவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை உபயோகிக்க, பலன்கள் விரைவில் தெரியும். மூலிகை மருத்துவத்தில் வெங்காயம் என்பது, சிறிய வெங்காயத்தையே, குறிக்கும்.

கேரட் ஜூஸ் சைனஸ் பூஞ்சைத் தொற்று பாதிப்பை குணமாக்குவதில், கேரட் சிறப்பான பங்கு வகிக்கிறது. தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கொருமுறை, கேரட் ஜூஸ் குடித்துவரலாம். தனியாகவோ அல்லது பீட்ரூட் ஜூஸ், வெள்ளரி ஜூஸ் அல்லது கீரை கடைசலுடனோ சேர்த்தும் குடித்துவந்தால், சைனஸ் பாதிப்புகள் சீக்கிரம் விலகிவிடும்.

உப்பு நீரால் மூக்கை அலசுதல் கடுமையான சைனஸ் பாதிப்புகளுக்கு, மூக்கை தினமும் உப்பு நீரால் அலசப் பரிந்துரைக்கிறார், புதுடெல்லி ஸ்ரீகங்காராம் மருத்துவமனையின் காதுமூக்கு தொண்டை சிகிச்சை நிபுணர். அரை லிட்டர் சுடுநீரில், சிறிது உப்பை சேர்த்து அத்துடன் சமையல் சோடா சிறிது கலந்து, அந்த நீரை, ஒரு மூக்கைப் பொத்திக்கொண்டு மறுமூக்கின் துவாரத்தில் இட்டு அதை நுகர வேண்டும். பின்னர் மூக்கை நன்றாக சிந்தி சளியை வெளியேற்ற வேண்டும். இதுபோல, இருபுறமும் செய்துவர, சைனஸ் பாதிப்புகள் உடனே நீங்கிவிடும்.

நீராவி பிடித்தல் வேபோரைசரில் சுடுநீரை ஊற்றி, அதன் ஆவியை அடிக்கடி சுவாசிக்க, சுவாசப் பாதை சளி அடைப்புகள் கரைந்து, மூக்கடைப்பு நீங்கி, மூச்சுவிடுவதில் இருந்த சிரமம் குறையும். சைனஸ் பாதிப்பைப் போக்கும், மிகவும் எளிமையான வீட்டு வைத்தியமாகும், இது.

மாம்பழம் சைனஸ் பாதிப்பைக் குணமாக்கும் மாம்பழம். கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் A சத்து, சைனஸ் பூஞ்சைத் தொற்றை விலக்கும் மென்படலத்தை உருவாக்கி, சைனஸ் பாதிப்பிலிருந்து காக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் தினமும் ஓரிரு முறை வெந்நீரில் இரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து குடித்துவர, சைனஸ் மூக்கடைப்பு குணமாகும்.

பூண்டு குடிநீர் சிறிது நீரில் ஒன்றிரண்டு பூண்டுப்பல்லைப் போட்டு சுடவைத்து, அதை குடித்துவந்தாலும், சைனஸ் பாதிப்புகள் விலகும்.

வெந்தயக்குடிநீர் சைனஸ் ஜுரத்தைப் போக்கும் வெந்தயக்குடிநீர். ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை கால் லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி, நூறு மில்லி நீராக சுண்டியதும், அந்த நீரை சிறிது சிறிதாக தினமும் அவ்வப்போது பருகிவர, சைனஸ் பாதிப்பால் ஏற்பட்ட ஜுரம் குணமாகும். வியர்வையை அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல்மிக்கது, வெந்தயக்குடிநீர். வீடுகளில் இருக்கக்கூடிய இதுபோன்ற எளிய சமையல் பொருட்களைக் கொண்டே, கடுமையான தொல்லைகள் தரும் சைனஸ் பாதிப்புகளை நாம் குணப்படுத்த முடியும்.

தவிர்க்க வேண்டியவை மேற்கண்ட வைத்தியம் மேற்கொள்ளும்போதும், சைனஸ் பாதிப்பு கடுமையாக இருக்கும்போதும், கீழ்க்கண்டவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவை, சைனஸ் அலர்ஜியை அதிகப்படுத்தி, உடல்நலத்தை பாதிக்கும் தன்மை மிக்கவை. சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள் சென்ட், வாசனை ஸ்பிரே போன்றவற்றை முற்றிலும் புறக்கணிக்கணும். தேவைப்பட்டால், சந்தனம் அல்லது ஜவ்வாது போன்ற இயற்கை வாசனை திரவியங்களை உபயோகிக்கலாம். மூக்கைத்துளைக்கும் வாசம்வீசும் பக்கோடா கடைப்பக்கம் போகக்கூடாது. கேக், மிட்டாய்கள் மற்றும் வறுவல்கள் போன்றவற்றை அவசியம் தவிர்க்கவேண்டும்.

பால் பொருட்கள் மற்றும் சர்க்கரையை தினசரி உணவில் இருந்து விலக்கவேண்டும். தினமும் ஒரு பெக் சாப்பிட்டால் நல்லது என்று டாக்டர் சொன்னார் என்று சொல்லி, தினமும் வீட்டில் சரக்கு அடிப்பவர்களும், சைனஸ் காலங்களில், ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்கணும். சைனஸ் பாதிப்புள்ளவர்கள் குளிர்நீரில் குளிப்பதைத் தவிர்த்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். இதன்மூலம், மூக்கடைப்பு விலகி, இயல்பாக சுவாசிக்க முடியும். இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளுடன், தினமும் நீரை அதிக அளவில் குடித்துவரவேண்டும். அத்துடன் மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சிகள் செய்துவர, தொல்லைகள் தந்த சைனஸ் பாதிப்புகள் விரைவில் விலகி, உடலும் மனமும் நலமாகும்.

1 1531818832

Related posts

இன்றைய இளம் தலைமுறையினருக்கு தற்கொலை எண்ணம் வரக்காரணம்

nathan

உயிரையும் பறிக்கும் உருளைகிழங்கு… முளைவிட்ட உருளைக்கிழங்கு ஏற்படுத்தும் ஆபத்து ?

nathan

குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்?

nathan

இடுப்பு வலி வந்தால் ஆண்களை இந்த நோய்கள் தாக்கும்

nathan

இந்த 10 வழிமுறைகள் உங்களை ஆக்கும் மாஸ்டர் மைண்ட்!

nathan

பெண்களின் உடல் பற்றிய சில ரகசியங்கள்

nathan

பிரசவத்திற்கு பிறகு பெண்களிடம் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்! தெரிந்துகொள்வோமா?

nathan

வெந்நீரே… வெந்நீரே…

nathan

இந்த அறிகுறிகள் இருந்தால்… அலட்சியம் காட்ட வேண்டாம்..!

nathan