26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
45 1
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா வீட்டிலேயே தலை முதல் கால் வரையிலான அழகை மெருகேற்றலாமே

“வேலைக்குச் செல்லும் பெண்களுக்குத் தங்களின் அழகைத் தினமும் கவனித்துக்கொள்ள நேரம் இருக்காது. பார்லர் செல்ல நேரம் இல்லாத பெண்களுக்கு, வீட்டில் உள்ள பொருள்கள் மூலமாக இழந்த அழகைத் திரும்பப் பெறலாம்.

முட்டையின் வெள்ளைக்கரு, ஆலிவ் ஆயில் இரண்டையும் சம அளவில் நன்றாகக் கலக்கி, ஸ்கால்ப்பில் தேய்த்து, மஜாஜ் செய்து அரை மணி நேரம் ஊறவிடவும். அதேபோன்று முலாம் பழம், ஆலிவ் ஆயில் 10 சொட்டு, பால் ஒரு டீஸ்பூன் மிக்ஸ் செய்து, கூந்தலில் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து, ஷாம்பு பயன்படுத்தி ஸ்கால்ப் மற்றும் கூந்தலை அலசவும். முடி வறட்சி நீங்குவதன் மூலம் இழந்த போஷாக்கைத் திரும்பப் பெறலாம்.

ஸ்கின்

அதிகப்படியான வெயிலினால் சிலருக்குக் கை கால் போன்ற இடங்களில் சருமத்தின் நிறம் மாறியிருக்கும். அதற்கு சர்க்கரை சிறந்த தேர்வு. கைகளைத் தண்ணீரில் நனைத்து, அதே ஈரத்துடன் கைகளில் சர்க்கரையைத் தொட்டுக்கொள்ளவும். இந்தச் சர்க்கரை கைகளால் கை, கால், கழுத்து போன்ற இடங்களில் லேசாக மசாஜ் செய்யவும். அதன்பின் குளித்தால், சருமத்தின் மேலுள்ள இறந்த செல்கள் நீங்கி புத்துணர்வுடன் செயல்படலாம்.

உங்கள் முகத்தை மிளிரவைக்க, ஒரு டீஸ்பூன் முல்தானிமெட்டியுடன் வாழைப்பழம் ஒரு துண்டு, ரோஸ் வாட்டர் ஒரு டீஸ்பூன், பால் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கி, முகத்தில் பேக்காகப் போடவும். 15 நிமிடத்துக்குப் பிறகு முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவவும். சோர்வுகள் நீங்கி முகம் பளிச்சென இருக்கும்.

அல்லது, பொடித்த சர்க்கரைத் தூளுடன் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடத்துக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.

கண்களுக்கு

உங்கள் முகத்தை மிளிரவைக்க, ஒரு டீஸ்பூன் முல்தானிமெட்டியுடன் வாழைப்பழம் ஒரு துண்டு, ரோஸ் வாட்டர் ஒரு டீஸ்பூன், பால் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கி, முகத்தில் பேக்காகப் போடவும். 15 நிமிடத்துக்குப் பிறகு முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவவும். சோர்வுகள் நீங்கி முகம் பளிச்சென இருக்கும்.

அல்லது, பொடித்த சர்க்கரைத் தூளுடன் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடத்துக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.

கண்களுக்கு

பயன்படுத்திய க்ரீன் டீ பேக்கை ஃபிரிட்ஜில் சிறிது நேரம் வைக்கவும். அதன்பின் அதைக் கண்களின் மீது வைத்து அரை மணி நேரம் கண்களுக்கு ஓய்வு கொடுக்கவும். அல்லது, வெள்ளரிக்காய் துருவலையும் ஒரு பையில் அல்லது காட்டன் துணியில் எடுத்து, கண்களின் மீது வைக்கலாம். அரை மணி நேரத்துக்குப் பிறகு கண்களிலிருந்து எடுத்துவிடவும். கருவளையங்கள் நீங்கும்.

கைகளுக்கு

நகங்களை வெட்டி நெயில் பஃவரால் நெயிலை ஷேப் செய்து, பாலிஸ் வைத்துக்கொண்டாலே கைகள் பார்க்க அழகாக இருக்கும்.

பாதங்களுக்கு

வாயகன்ற பிளாஸ்டிக் பாத்திரத்தில் வெந்நீரை எடுத்துக்கொள்ளவும் (வெதுவெதுப்பாக இருந்தால் போதுமானது) இத்துடன் ஒரு டீஸ்பூன் மிண்ட் சால்ட் சேர்த்து நன்றாகக் கலந்து, பாதங்களை அரை மணி நேரம் இந்தத் தண்ணீரில் வைக்கவும். அதன்பின் கால்களை ஒரு துணியில் துடைத்துவிட்டு, ஃபுட் ஃபைலால் (foot file) கால்களைத் தேய்க்கவும். கால்கள் மிருதுவாகப் பஞ்சு போன்று இருக்கும். பித்தவெடிப்பு பிரச்னைகளுக்கும் டாட்டா சொல்லலாம்.

உடல் முழுவதும்

லேசாக சூடு செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யை உடல் முழுவதையும் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தால், ஃப்ரெஷாக இருக்கலாம். அல்லது, பாலாடை 2 டீஸ்பூன், ஃபில்டர் காஃபியின் எசன்ஸ் ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாக மிக்ஸ் செய்யவும். அதை உடல் முழுவதும் தேய்த்து ரவுண்டு, ரவுண்டாக உங்களின் விரல்கொண்டு லேசான அழுத்தத்துடன் மசாஜ் செய்யவும். அதன்பின் வெந்நீரில் குளிக்க, அடுத்த வாரம் முழுவதும் ஆரோக்கியமாகச் செயல்படலாம்.

இந்தச் சின்னச் சின்ன செயல்பாடுகள் மூலம் இழந்த அழகை ஒரே நாளில் பெறலாம்.45 1

Related posts

பெண்களே தூங்கி எழும்போது அழகியாக மாற வேண்டுமா?

nathan

இளம் வயதில் முகத்தில் சுருக்கம்: இதோ சில குறிப்புகள்

nathan

வாரம் ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்துவிடும்!

nathan

இந்த ஹெர்பல் ஆவி பிடிப்பதால் என்ன பயன் தெரியுமா?

nathan

மருக்கள் உங்கள் அழகை அலங்கோலம் ஆக்குகிறதா? அப்ப இத படியுங்க…

nathan

வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து ஃபேஸ் பேக்குகளை தயாரித்துப் பயன்படுத்த இத படிங்க!…

sangika

உங்களுக்கு பிரகாசமான முகம் வேண்டுமா? ‘ஆல்கஹால் ஃபேசியல்’ முயன்று பாருங்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அவசியம் நிறுத்த வேண்டிய பொதுவான 9 மேக்கப் தவறுகள்!!!

nathan

மிருதுவான முகத்திற்கு….

nathan