29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
potatohairthinning 1
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

2 வாரத்தில் நரைமுடியில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

நரைமுடியைப் போக்க இயற்கை வழிகளை நாடுவது தான் சிறந்தது. இங்கு நரைமுடியைப் போக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் உருளைக்கிழங்கு நீர். இந்த வழியைப் பின்பற்றினால், 2 வாரத்தில் நரை முடியைப் போக்கலாம். இப்போது அந்த உருளைக்கிழங்கு நீரை எப்படி தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்று காண்போம்.potatohairthinning 1

செயல்1: முதலில் 5-6 உருளைக்கிழங்குகளை எடுத்து நன்கு கழுவி, தோலை நீக்கி, அந்த தோலைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

செயல்2: பின் உருளைக்கிழங்கு தோலை 2 கப் நீரில் போட்டு, 15-20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

செயல்3: பின்பு அந்த கலவையை குளிர வைத்து, நீரை வடிகட்டி, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். பின் அதில் சில துளிகள் ரோஸ்மேரி அல்லது லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

செயல்4: தலைக்கு ஷாம்பு போட்டு அலசி, கண்டிஷனர் போட்டு 1-2 நிமிடம் கழித்து நீரில் தலைமுடியை அலச வேண்டும்.

செயல்5:  பிறகு உருளைக்கிழங்கு நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாகஅந்நீரைக் கொண்டு மசாஜ் செய்த பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசக்கூடாது.

செயல்5:  பிறகு தலைமுடியை நன்கு உலர்த்தி, சீப்பு கொண்டு தலைமுடியை சீவ வேண்டும்.

குறிப்பு: உருளைக்கிழங்கு நீரை ப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கக்கூடாது. மேலும் இந்த சிகிச்சையை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், 2 வாரத்தில் நரைமுடியில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இயற்கை வழிகளை நாடும் போது, பொறுமை என்பது மிகவும் அவசியம் என்பதை மறவாதீர்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா மஞ்சள் நிறமுடைய பழங்களை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பட்டுப்போன்ற மென்மையான கூந்தலைப் பெற சில எளிய வழிகள்!!!

nathan

கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்

nathan

தலைமுடி பிரச்சனைகளைப் போக்க வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி?

nathan

தலைமுடியை உலர வைக்க ஹேர் டிரையர் ( Hair Dryer) ஐ பயன்படுத்துகிறீர்களா? அப்போ கட்டாயம் இத படிங்க!…

sangika

உங்களுக்கு நல்ல அடர்த்தியான முடியைப் பெற வேண்டுமா…!அப்ப இத படிங்க!

nathan

எப்போதும் இளமையாக இருக்கனுமா அப்போ இத செய்யுங்கள்….

sangika

செம்பட்டை முடியை கருகருவென மாற்ற வேண்டுமா?அற்புதமான எளிய தீர்வு

nathan

இளநரை போக்கும் கறிவேப்பிலை

nathan