சருமத்தில் சுருக்கமா..? கலை இழந்து தெரிகிறீர்களா…? முகம் பொலிவிழந்து இருக்கிறதா..? அதற்கெல்லாம் காரணம் முகம் முதிர்ச்சியடைவதே…!! இதனால் நீங்கள் வயதானவர்கள் போல் உணர்கிறீர்களா..? அதற்கெல்லாம் பல தீர்வுகள் இருக்கிறது. நம் அன்றாட வாழ்க்கை மிகுந்த வேலை சுமையும், அதிக குடும்ப சுமைகளும் நிறைந்ததாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நாம் நம்மை பற்றி அக்கறை எடுத்து கொள்வதே இல்லை .முதலில் நம்மை நன்றாக கவனித்து கொண்டால் மட்டுமே நம்மை சுற்றி இருப்பவர்களையும் நாம் நன்றாக பார்த்துக்கொள்ள முடியும்.
இன்றைய வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ ,அதே போன்றுதான் முக ஆரோக்கியமும். ஒருவரின் முக ஆரோக்கியமே அக அழகை தெளிவு படுத்தி விடும். அதற்காக தேவையற்ற வேதி பொருட்களை முகத்தில் பூசி முக பொலிவையே நாம் இன்று கெடுத்து வருகிறோம்.இதன் விளைவாக முக முதிர்ச்சி போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்.
இதோ இதற்கான காரணங்களையும்,தீர்வுகளையும் பார்க்கலாம். பொதுவாக உங்கள் சருமம், கொலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகிய ஃபைபர்களின் கூட்டு சேர்க்கையால் உருவானது . இந்த புரதங்கள் தான் உங்கள் சருமத்தை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் தோல் விரிவடைந்தால், அதை மீண்டும் அதனுடைய இடத்திற்கே கொண்டு செல்லும் வேலையை இந்த புரதங்கள் செய்கின்றன. எனினும், வயதாக வயதாக இந்த புரதங்கள் வலுவிழந்து, உங்கள் தோல் சுருங்க ஆரம்பித்துவிடுகிறது.. அவை மெல்லியதாகி கொழுப்பை இழப்பதால், மென்மையான உணர்வு நமக்கு கிடைப்பதில்லை. சரும முதிர்வு பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள வேண்டுமா? பின்வரும் கட்டுரையை படியுங்கள்.
கரும்புள்ளிகள்: பொதுவாக சூரியனில் இருந்து வெளிவரும் UV கதிர்களால் முகம் பாதிக்கப்படுவதால், கரும்புள்ளிகள் உண்டாகின்றன. UV கதிர்களால் பாதிப்படைந்த செல்கள் சருமத்தின் மேல் புறத்தில் வரும் போது கரும்புள்ளிகளாக உருவாகின்றன. இந்த கரும்புள்ளிகள் ஏற்பட UV கதிர்கள்,வெளிமண்டல மாசு காரணமாக கருத படுகிறது.தோலில் வீக்கத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் முகப்பரு கூட இந்த கரும்புள்ளிக்கு காரணமாக இருக்கலாம்.
2) முகம் பொலிவிழந்தல்:- வறண்ட சருமம் இருந்தால் முகம் பொலிவிழந்து காணப்படும். அதனால் முகம், ஒளிரும் தன்மையை இழந்து கருமையாக தெரிகிறது. மேலும் சருமத்தில் உள்ள சின்ன சின்ன துளைகளில் துகள்கள் சேர ஆரம்பித்து விடும்.இதனால் உங்கள் சருமம் இறுக்கமடையும். மேலும், சருமத்தில் புதிய செல்களின் பிறப்பு குறைந்து , உங்களின் மேல் அடுக்கு சருமம் பொலிவிழந்து காணப்படும். இதை சரி செய்ய இறந்த செல்களை முக சருமத்தில் இருந்து நீக்கினாலே போதும். சென்சிடிவான சருமம் உள்ளவர்கள் தோல் மருத்துவரை அணுகலாம் .
3)மெல்லிய தோல் :- சருமத்தின் கடைசி அடுக்கில் உள்ள எபிடெர்மிஸ் தான் செல் உற்பத்திக்கு வழி செய்கிறது.இந்த எபிடெர்மிஸ் பகுதி மெல்ல மெல்ல அதன் உற்பத்தி திறனை குறைத்து முகத்தில் சுருக்கத்தை ஏற்படுகிறது. இந்த விளைவால் சருமம் மெல்லியதாக மாறி வயதான தோற்றத்தை தருகிறது
4) தோல் தளர்வது: வயது ஆக ஆக சருமத்தின் உறுதித்தன்மை வலுவிழந்து விடுகிறது.இதனால் தோல் தளர்வாக தோற்றமளிக்கிறது. எனவே முகம் பொலிவிழந்து காணப்படுகிறது . கொலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகி இரண்டும் தான் உங்கள் சருமத்திற்கு உறுதியான, மென்மையான, மிளிர்வான தோற்றத்தை கொடுக்கிறது. 20 வயதிற்கு மேல் இவைகளின் உற்பத்தி சுழற்சி குறைவதால், உங்கள் சருமத்தின் உறுதித்தன்மை குறைகிறது, குறிப்பாக தாடை மற்றும் கன்னங்களை சுற்றி பல மாற்றங்கள் வருகிறது.
5)மங்கலான முகம்:- இதற்கு முழுக்க முழுக்க காரணம் முகத்தில் உள்ள செல்கள் சிதைவடைவதே.இதனால் பொலிவான,இளமையான முகம் கூட சோர்ந்து மங்கலாக காணப்படும். இந்த செல்கள் சிதைவடைவதால் பத்து வருடத்திற்கு ஒரு முறை 7% செல்கள் புதுப்பித்தல் நிகழ்வு நம் முக சருமத்தில் குறைந்து விடும். இதனால் முகம் மங்கலாகவே காணப்படும்.
6) தோலில் வரிகள் மற்றும் சுருக்கங்கள்: முகம் வயதானவர்கள் போல் இருப்பதற்கு முதல் காரணம் இந்த வரிகளும், சுருக்கங்களும். பொதுவாக தோலில் உள்ள கொலாஜென் இழப்பின் காரணமாக சருமத்தின் எலாஸ்டிஸிட்டி குறைந்துவிடுகிறது. இதனால் முகத்தில் கோடுகளும் சுருக்கங்களும் உண்டாகின்றன. இந்த நிகழ்வு இயற்கையான ஒன்று, அதனால் இதனை தடுக்க முடியாது . எனினும், இது இளம் பருவத்தினருக்கும் அதிக நேர சூரிய வெளிப்பாடு மற்றும் புகைபிடித்தல் போன்ற காரணங்களால் ஏற்படலாம்.
தீர்வுகள் :- பின்வரும் முறைகளை பயன்படுத்தி எளிமையாக இந்த வயதான தோற்றதை மறையவைத்து என்றும் இளமையாக இருக்கலாம்.
தீர்வு 1:- இந்த வீட்டு முறையால் மிகவும் மென்மையான மற்றும் இளமையான சருமம் உண்டாகும்.
தேவையான பொருட்கள்:- -முட்டை -தேன் -எலுமிச்சை சாறு
செய்முறை:- முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.இந்த வெள்ளை கரு, சருமத்தை திடமாக வைத்து கொள்ள உதவுகிறது. அதனுடன் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் நிறைந்த தேன் கலந்து நன்கு கலக்கவும்.அத்துடன் எலுமிச்சை சாற்றை சிறிது கலந்து மீண்டும் கலக்கவும்.பின்பு அதனை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து மிதமான தண்ணீரில் கழுவி விடவும்.இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் முகம் இளமையாகவே இருக்கும்.
தீர்வு 2:- தேவையான பொருட்கள்:- -மைசூர் பருப்பு -டீ பேக்ஸ் -அரிசி கழுவிய தண்ணீர்
செய்முறை:- ஆன்டி ஏஜிங் பொருட்கள் அதிகம் உள்ள இந்த மைசூர் பருப்பை 1/4 கப் எடுத்து கொண்டு பவுடர் ஆக அறைத்து கொள்ளவும்.அதிலிருந்து 1 டீஸ்பூன் அடுத்து கொள்ளவும்.பின்பு 1 டீ பேகில் உள்ள டீ தூளை எடுத்து அதில் சேர்த்து கொள்ளவும். பிறகு 1 மணி நேரம் அரிசியில் ஊற வைத்த தண்ணீரை அத்துடன் நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் வாரத்திற்கு 2 முறை பூசி வர முகம் மிக அழகாவும்,பொலிவுடனும் மின்னும். மேலும் இழந்த இளமை சருமத்தை பெற்று விடலாம்.