25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
Stones in the gallbladder symptoms for females
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் உண்டாவதற்கான காரணங்கள்

இன்றைய தலைமுறையில் குறிப்பாக பெண்கள் பலர், பித்தப் பையிலே கல் இருக்கு, டாக்டர் ஆபரேஷன் பண்ணணும்னு சொல்றாரு என்று என்னவோ சர்வ சாதாரணமாக சொல்ல கேட்டிருப்போம். என்னவோ வயிற்றுக்குள் ‘வைர கல்’ வைத்துள்ளதை போல் அசால்ட்டாக சொல்லுவார்கள். இந்த பித்தகற்கள் யாருக்கெல்லாம் ஏற்படுகிறது? எதனால் ஏற்படுகிறது என்பதனை பார்ப்போம்…

பித்தக் கற்கள் யாருக்கு, ஏன் ஏற்படுகின்றன?

* உடல் பருமன் உள்ளவர்களுக்கு
* கருத்தடை மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிடும் பெண்களுக்கு
* செக்ஸ் ஹார்மோன் மாற்றங்களால்
* இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு
* பரம்பரை காரணமாக
* சிறுகுடல் பாதையில் ஏற்படும் வியாதிகள் காரணமாக
* விரதம் இருப்பதால்

வேளாவேளைக்குப் போதுமான உணவு கிடைக்காத போது, பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரந்து கற்களாக உறைந்துவிடும் அபாயமிருக்கிறது. தீவிர டயட் செய்யும் இளம்பெண்களுக்குப் பித்தப்பையில் கற்கள் உண்டாவதன் காரணமே பட்டினி ஃபேஷன்தான்!

பித்தக் கற்களின் அறிகுறி என்ன?

விதவிதமான வலிகள் ஏற்படும். மாரடைப்பு வலியோ என்று கூட பயம் ஏற்படும். மார்பு எலும்புக்கும் தொப்புளுக்கும் இடையே வலிக்கும் முதுகிலும் தோள் பட்டையிலும் கடுப்பெடுக்கும் வாந்தியும் குமட்டலும் அவஸ்தை தரும். ஒரு சிலருக்கு சிறிது கூட வலி இருக்காது. ஆனால் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

தீர்வு தான் என்ன?

பித்தப்பை கற்களைக் கரைப்பதற்கென்றே மருந்துகள் உள்ளன. இவை, பித்தநீர் பைக்குள் அதிர்வலைகளைப் பாய்ச்சி, கற்களைப் பொடியாக்கி, மலத்துடன் வெளியேற்றி விடும். இம்முறை கணையத்தில் வீக்கம், பித்தப்பையில் அழற்சி உள்ளவர்களுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் ஏற்றதல்ல!
லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை முறையில் பித்தக் கற்களை, வலியின்றி மிகச் சுலபமாக நீக்கிவிடலாம். சில சமயம், குடல் ஒட்டுதல், அதிகம் இருந்தாலோ, பொது பித்த நாளத்தில் கட்டிகள் இருந்தாலோ, ஓப்பன் சர்ஜரி தேவைப்படலாம். பித்தப் பையைக் கற்களுடன் நீக்காவிட்டால், மஞ்சள்காமாலை நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

பித்தக் கற்கள் வராமலிருக்க என்ன செய்யணும்?

ரொம்ப ஸிம்பிள்! கொழுப்புக் கூடுதலாக உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். பட்டினி, விரதம் என வயிற்றைக் காயப் போடாமல், வேளா வேளைக்கு மிதமான நார்ச்சத்துள்ள உணவைச் சாப்பிட்டு, மிதமான உடற்பயிற்சி செய்து வந்தாலே கற்களுக்கு கல்தா கொடுக்கலாம்!Stones in the gallbladder symptoms for females

Related posts

உங்கள் உடல் வகை வாதமா? பித்தமா? கபமா?

nathan

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன ?

nathan

மாஸ்க் அணியும் செய்யக்கூடிய தவறுகள் என்ன ? இந்த தவறையெல்லாம் செய்யாதீங்க

nathan

உங்களுக்கு தெரியுமா கீழாநெல்லியின் முழு மருத்துவப் பயன்களும் இவை தான்….

nathan

படர்தாமரையை குணமாக்கும் சரக்கொன்றை

nathan

சிறுநீரக கற்களை கரைக்கும் கற்பூரவல்லி

nathan

தெரிஞ்சிக்கங்க…நுரையீரலில் தங்கியிருக்கும் நாள்பட்ட சளியை வெளியேற்றணுமா?

nathan

பண நெருக்கடி சுனாமியைச் சமாளிக்கும் வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்!

nathan