26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 1531287777
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா? அப்ப இத படிங்க!

வீசிங் என்பது மூச்சுத் திணறலின் ஒரு வகை. இதனை கட்டுப்படுத்த மருத்துவரின் பரிந்துரையின்படி சிலர் இன்ஹெலர் பயன்படுத்துவார்கள். ஆனால் நள்ளிரவுகளில் கூட இது நோயாளியை பாதுகாக்கும் என்பதை தீர்மானமாக கூற முடியாது. ஆகவே வீசிங் வரமால் தடுப்பது மட்டுமே சிறந்த ஒரு தீர்வாகும். ஆகவே வீசிங் வராமல் தடுப்பதற்கான சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் இப்போது காணலாம். தொடர்ந்து படித்து இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி வீசிங் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வீசிங் தடுப்பு முறைகள் மருத்துவர் உங்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது என்று அறிவிக்கும்போது அதன் உண்மையான பாதிப்பை பற்றி நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள். தண்ணீரில் இருந்து வெளியேறி வந்த மீன், துடிப்பது போல் தான், இன்ஹெலர் இல்லாமல் நீங்கள் இருப்பது. எந்த நேரத்தில் வீசிங் ஏற்பட்டாலும், உடனடியாக இன்ஹெலர் பயன்படுத்துவதால் நிலைமை கட்டுக்குள் இருக்கும். ஆனால் எல்லா நேரத்திலும் இதனை கையில் வைத்திருப்பது என்பது சாத்தியப்படாத ஒன்று. ஆகவே, இயற்கை தீர்வுகள் மூலம் இந்த பாதிப்பை முற்றிலும் போக்குவது அல்லது கட்டுக்குள் வைப்பது மட்டுமே நல்ல தீர்வாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள தீர்வுகள் அனைத்தும் நிச்சயமாக ஆஸ்துமா பாதிப்பிற்கு எதிராக போராடும் அல்லது ஒரு சில நேரங்களில் முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால் நிச்சயம் இவற்றை முயற்சிக்கலாம்.

மஞ்சள் மஞ்சள், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜெனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது என்பதை அனைவரும் அறிவோம். கூடுதலாக, மஞ்சள் வீசிங் பாதிப்புக்கு ஒரு சிறந்த சிகிச்சையையும் அளிக்கிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் அரைத்த மஞ்சள் தூளை சேர்த்து கலந்து தினமும் காலையில் குடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்வதால், வீசிங் குறைகிறது. இதனை குடிப்பதால் உண்டாகும் அறிகுறிகள் நோயாளிகளுக்கு நன்மையைத் தருவதாக அறியப்படுகிறது. ஆஸ்துமா பாதிப்பும் கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

கற்பூரம் மற்றும் கடுகு கடுகு எண்ணெய், மூக்கில் சளி சேருவதை குறைக்க உதவுகிறது. இதனால் சுவாச மண்டலம் சீராக செயலாற்றுகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்த தன்மையால் ஒரு சிறந்த நிவாரணம் கிடைக்கிறது. கடுகு எண்ணெயுடன் கற்பூரத்தை சேர்த்து பயன்படுத்துவதால் இதன் பலன் மேலும் அதிகரிக்கிறது. கடுகு எண்ணெய்யை சிறிதளவு எடுத்து சூடாக்கி, ஒரு ஜாடியில் வைத்துக் கொள்ளவும். இதனை நுகர்வதால் உங்களுக்கு ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம்.

எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றை தினமும் பருகுவதால் சளி கட்டுக்குள் இருக்கிறது. மேலும், சுவாசம் தடைபட்டு வீசிங் ஏற்படுவதை தடுக்கிறது. ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை தினமும் காலையில் பருகுவதால் வீசிங் வராமல் தடுக்கலாம். தினமும் சர்க்கரை சேர்க்காமல் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகுவதால் உங்கள் சுவாச பாதை சீராகிறது மற்றும் சளி மற்றும் இருமல் குறைகிறது.

தேன் தேனுக்கு இயற்கையாகவே குணப்படுத்தும் தன்மை உண்டு. தேனுக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண் கிருமிகள் எதிர்ப்பு தன்மை உண்டு. தேனுக்கு இருக்கும் இந்த தன்மைகள் இருமலை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. ஆஸ்துமா வீசிங்கை அதிகப்படுத்தும் அழற்சியை தடுக்க தேன் உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயக்கத்தை அதிகரிக்கவும் தேன் உதவுகிறது. ஆர்கானிக் தேனின் வாசனையை நுகர்வதன் மூலம் வீசிங்கை கட்டுப்படுத்தலாம்.

கிங்க்கோ பிலோபா வீசிங் மற்றும் மூச்சுத்திணறல் நோய் சிகிச்சைக்கு பல நூற்றாண்டுகளாக இந்த மூலிகை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நுரையீரலின் செயல்பாட்டை இது மேம்படுத்துகிறது. இந்த மூலிகையை தண்ணீரில் கொதிக்க வைத்து டீயாக பருகலாம். கொதிக்கும்போது அந்த ஆவியில் உங்கள் முகத்தையும் காட்டலாம். இது மாத்திரை வடிவத்திலும் கிடைக்கிறது. மாத்திரையில் இந்த மூலிகையுடன் பூண்டு மற்றும் இஞ்சியும் சேர்க்கப்படுகிறது.

பூண்டு ஆஸ்துமா வீசிங் போன்ற பல்வேறு வகையான நோய்களின் சிகிச்சைக்கு பயன்படும் பூண்டு, இருமல் போன்ற பக்டீரியா தொற்றையும் தடுக்க உதவுகிறது. தொற்று பாதிப்புகள் மூச்சு குழாயில் சளி உற்பத்தி மற்றும் சளி படிவதற்கு காரணமாக உள்ளது. இதுவே வீசிங்கின் மூலக்காரணம் ஆகும். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு பூண்டுகளை சாப்பிடுவதன் மூலம் கடுமையான ஆஸ்துமாவைக் கூட தடுக்கலாம். பூண்டு மாத்திரைகளும் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் அவை இயற்கை பூண்டை விட சக்தி வாய்ந்ததாக இருக்காது.

ஆளி விதைகள் ஆளி விதைகள் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டவை. மேலும் அவை ஒமேகா கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாக இருப்பவை. ஆளி விதைகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதால் வீசிங் நிச்சயம் குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆளி விதை எண்ணெய்யை எடுத்துக் கொள்வதால் நோயாளிகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு குறைவதாக அறியப்படுகிறது. தினமும் ஒரு தேக்கரண்டி ஆளி விதை எண்ணெய்யை பருகுவதால் வீசிங் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக, தினமும் அரை தேக்கரண்டி ஆளிவிதைகளையும் மென்று சாப்பிடலாம்.

1 1531287777

Related posts

வைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்பு குடிநீர்

nathan

தீக்காயங்களுக்கு……!

nathan

உங்கள் அன்புக்குரியவள் உங்களை சுற்றி வரவேண்டுமா ? இதோ சில யோசனைகள்!

nathan

தொடர்ச்சியான தும்மல் பிரச்சனையில் இருந்து, விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள்…

sangika

“வெரிகோஸ் வெயின்” (varicose veins) ” பிரச்னைக்கு தீர்வு…

nathan

உங்கள் வீட்டில் ‘ஹெல்த் கிட்’ இருக்கிறதா?

nathan

லதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்… (எந்தவிதமான பக்க விளைவுகளோ, மாத்திரைகளோ இல்லை…

nathan

இந்த உணவுகளை சாப்பிட்டா சிறுநீரகத்தில் கல் உருவாகும்…

nathan

உங்கள் மகள் காதல்வசப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?

nathan