Horse Gram Millet kanji. L
எடை குறைய

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்கும் கொள்ளு

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், டயட்டில் இருப்பவர்கள் கொள்ளு – சிறுதானிய கஞ்சியை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இன்று கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் கொள்ளு – சிறுதானிய கஞ்சி
தேவையான பொருட்கள்

கொள்ளு – 2 டீஸ்பூன்
சிறுதானியம் – 2 டீஸ்பூன் ( ஏதாவது ஒரு சிறுதானியம்)
வெந்தயக்கீரை – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி – சிறிதளவு
மோர் – 2 கப்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை :

கொள்ளு, சிறுதானியத்தை தனித்தனியாக வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

கொள்ளு ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

சிறுதானிய அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

கொத்தமல்லி, வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து பொடித்த கொள்ளு, சிறுதானிய அரிசி, தண்ணீர், வெந்தயக்கீரை சேர்த்து குக்கரை மூடி 4 விசில் போட்டு இறக்கி வைக்கவும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மோர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கஞ்சியில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

சூப்பரான கொள்ளு – சிறுதானிய கஞ்சி ரெடி.Horse Gram Millet kanji. L

Related posts

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க தக்காளி சாப்பிடுங்கள்!

nathan

திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்?

nathan

கொழுப்பைக் கரைக்கும் குளு குளு சிகிச்சை!

nathan

தினமும் தவறமல் செய்து வந்தால் நம் உடலின் பின்புற சதைகள் எளிதில் குறைந்து விடும்.

nathan

எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

கொழுப்பை குறைப்பது எப்படி?

nathan

ஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா?

nathan

உடல் பருமனை கட்டுப்படுத்தும் அக்னி முத்திரை

nathan

இந்த பழக்கவழக்கங்கள்தான் உடல் பருமனாவதற்கு காரணம்.!

nathan