25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 1530887742
மருத்துவ குறிப்பு

அவசியம் படிக்க..சிகரெட் பிடிக்கிறதுக்கும் மஞ்சள் கரு சாப்பிடறதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?

உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவு பொருட்களில் ஒன்று முட்டை. பல்வேறு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட முட்டை சில நேரங்களில் உடலுக்கு கேடு விளைவிக்கலாம். முழு முட்டைகள் அடங்கிய ஒரு உணவு, தமனிகளில் அடைப்பை உண்டாக்கலாம் என்று ஒரு இதழில் உள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.

முட்டையின் வெள்ளைக் கருவில் புரதம் அதிகம் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் துரதிஷ்டவசமாக, மஞ்சள் கருவில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் உங்கள் உடல் ஆரோக்கியத்தை சேதப்படுத்துகிறது. முட்டையின் மஞ்சள் கரு, புகை பிடிப்பதால் உண்டாகும் உடல் சீரழிவை ஒத்து இருப்பதாக ஏன் கூறப்படுகிறது?

அதிரோசெலேரோசிஸ் என்னும் தமனியில் தடிப்பு ஏற்படுவதற்கும் மஞ்சள் கருவை உட்கொள்வதற்கும் தொடர்பு இருப்பதாக, கனடாவில் உள்ள வெஸ்டர்ன் பல்கலைகழகத்தில் நடத்திய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தமனி தடிப்பு என்னும் மருத்துவ கோளாறு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக் காரணமாக இருப்பதாகும். தமனியின் சுவர்களில் படியும் கொழுப்பால் இந்த நிலை உண்டாகிறது. உயர் கொழுப்பு, உட்கொள்ளல், குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவைப் போன்ற ஆரோக்கியமான உணவு விருப்பங்களில் இருந்து பெறப்படும் தீங்கு கணக்கிடப்படவில்லை.

கனடிய வாஸ்குலர் தடுப்பு மருத்துவமனைக்கு வருகை புரியும். நோயாளிகளுக்கு மொத்த அடைப்பு பகுதி, மற்றும் அதிரோசெலேரோசிஸ் பாதிப்பால் உண்டான தமனி தடிப்பு அல்லது மற்ற காரணங்களினால் உண்டான தமனி தடிப்பு பற்றி பரிசோதிக்கப்படுகிறது. விளைவின் அளவைப் பற்றிய பார்வையை பெறுவதற்காக புகைத்தல் அளவும் கணக்கிடப்படுகிறது.

பல்கலைக்கழக மருத்துவமனையில் நோயாளிகளின் வாழ்க்கை முறை, மருந்து பயன்பாடு, புகைபிடித்தல் வரலாறு, ஒரு வாரத்திற்கு முட்டையின் மஞ்சள் கரு உட்கொள்ளல் போன்றவற்றை பற்றி கேள்விகள் கேட்டு விசாரிக்கின்றனர். 1262 நோயாளிகளை பரிசோதித்ததில், 40 வயதிற்கு பிறகு கரோடிட் ப்ளேக் அளவு, நிலையான வேகத்தில் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் புகை பிடிப்பது மற்றும் தொடர்ந்து முட்டை மஞ்சள் கரு உட்கொள்ளல் போன்றவற்றால் இதன் வளர்ச்சி அதிவேகமாக அதிகரித்தது. முட்டின் மஞ்சள் கரு உட்கொள்ளல் புகை பிடிக்கும் அளவை 2/3 பங்கு விளைவைத் தருகிறது என்று அறியப்படுகிறது.

புகை பிடிப்பதால் இரத்தக் குழாயில் பாதிப்பு மற்றும் ப்ளேக் உருவாக்கம் என்பது நேரடி விளைவாகும். ஆனால், ஒட்டு மொத்த இரத்த கொலஸ்ட்ரால் அளவில் பாதிப்பு ஏற்படுவது இதன் மறைமுக பாதிப்பாகும். உயர் இரத்த கொலஸ்ட்ரால் அளவு, தமனிகளில் படிந்து தமனி அடைப்பு ஏற்பட உதவுகிறது. முட்டை உட்கொள்ளல் தவிர மற்ற காரணிகளும் உயர் கொலஸ்ட்ரால் அளவிற்கு காரணமாக இருக்கின்றன. அவை, உணவு அட்டவணை, எடை, உடல் செயல்பாடுகள், மரபணு போன்றவையாகும்.

முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்வதால், இதய நோய் உண்டாவதற்கான அபாயம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், பல்வேறு முயற்சிகளும், ஆய்வுகளும் இதனை உறுதி செய்ய தேவைப்படுகின்றன.

முட்டையை சாசேஜ் மற்றும் க்ரிடுடன் இணைத்து உட்கொள்வதால் அதிக உடல் பிரச்சனை ஏற்படுகிறது. ஆனால், முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தேர்ந்தெடுத்து உட்கொள்வதால், கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உட்கொள்ளல் குறைகிறது. இதனால் இதய நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது.

வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்பதற்காக முட்டையுடன் சாசேஜ் சேர்த்து சாப்பிடுவதற்கு முன் ஒரு முறை யோசிக்கவும். முட்டையின் மஞ்சள் கருவை தொடர்ந்து உட்கொள்வதால் உண்டாகும் உடல் தீங்கை பற்றி அறியாதவர்கள் உணவு நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து ஒரு முடிவிற்கு வரவும். முட்டை உட்கொள்வதின் நன்மை தீமைகளை ஆராய்ந்து அதிக அளவு எடுத்துக் கொள்வதைப் பற்றி ஒரு முடிவிற்கு வரவும்.

1 1530887742

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த 6 மூலிகைகளை வீட்டில் வளர்த்தால் ஒரு நோயும் உங்களை நெருங்காது!

nathan

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?? இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்..!!

nathan

உங்களுக்கான தீர்வு கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை சரிசெய்வது எப்படி?

nathan

தோல் நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்பை வருவதற்கு இவை தான் காரணம்

nathan

இந்த ஒரு பொருள் ஆஸ்துமா பிரச்சனைக்கு குட்-பை சொல்ல வைக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க… ஆண்களைத் தாக்கும் இரைப்பை ஏற்றம்.. இதை கண்டு கொள்ளாமல் விட்டால் சந்திக்கும் அபாயம் என்ன தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா ஊமத்தைங்காய் கொண்டு எத்தனை விதமான நோய்கள் குணமாக்கலாம்?

nathan

உங்களுக்கு சும்மா குதிரை மாதிரி பலம் வரணுமா? இந்த சூரணத்த தேன் கலந்து சாப்பிடுங்க

nathan