25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
benefits 1530784795
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இரவில் நட்ஸ் சாப்பிடலாமா கூடாதா?

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சீரான இரவுத் தூக்கம் அவசியம் என்று அடிக்கடி சொல்லப்படுகிறது, இந்த தூக்கத்தை அதிகரிக்கவும், தூக்கத்திற்கு எந்த இடைஞ்சலும் வந்துவிடாமல் தவிர்க்கும் விதமாகவும் பல நேரங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இரவு நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுக்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால் தான் இரவுகளில் ஹெவியான உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறப்படுகிறது. அதோடு இரவு எந்த உடல் உழைப்பும் இன்றி இருப்பதாலும் செரிக்க மிகவும் எளிதான உணவாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது.

கலோரி : தேவையின்றி உடலில் அதிகப்படியான கலோரிகள் சேர்வதற்கு இரவில் நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவே முக்கிய காரணியாக இருக்கிறது. அதிகமான கலோரிகளை மட்டும் தொடர்ந்து எடுத்துக் கொண்டு அதற்கேற்ப உடல் உழைப்பு செய்யவில்லை என்றால் அவை அப்படியே கொழுப்பாக சேர்ந்திடும். அதனால் தான் இரவு உணவை அதிக ஜாக்கிறதையாக எடுத்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது.

ஸ்நாக்ஸ் : இரவு நீங்கள் ஓய்வாக இருப்பதினால் உங்களுடைய உள்ளுறுப்புகளும் ஓய்வாக இருக்கும் என்று அர்த்தமன்று அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கும். அந்த இயக்கத்திற்கு அவசியமான சத்துக்களை நீங்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பசியுணர்வை தூண்டிவிட அதனால் தூக்கம் கெடுவது, அல்லது நொறுக்குத் தீனிகளை உட்கொள்வது ஆகியவை நடைபெறும்.

கவனம் : நீங்கள் ஓர் விளையாட்டு வீரர், அல்லது உடல் உழைப்பு குறைவாக செய்பவர்கள், உங்களுக்கு சர்க்கரை நோய் பிரச்சனை இருக்கிறது இப்படி உங்களது உடல் தேவைகளை பொறுத்து இரவு உணவினை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உடல் உழைப்பு அதிகம் செய்பவர்களாக இருந்தால் இரவு உணவில் அதிகப்படியான ப்ரோட்டீன் சேர்த்துக் கொள்ளலாம். கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை எடுத்துக் கொண்டால் உங்கள் உடலில் ரத்தச் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

நொறுக்குத்தீனி : இரவில் நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கம் இன்று பலருக்கும் இருக்கிறது. இரவு உணவு எடுத்துக் கொண்ட பிறகு நீண்ட நேரம் இரவில் முழித்திருப்பது அந்த நேரத்தில் பசிக்கும் என்பதற்காக நொறுக்குத் தீனிகளை எடுத்துக் கொள்வது வாடிக்கை. சிலர் உணவு விஷயத்தில் கண்டிப்பாக இருக்கிறேன் என்று சொல்லி இரவில் தூங்குவதற்கு முன்னால் பழங்களையும் நட்ஸ் வகைகளையும் சிநாக்ஸாக எடுத்துக் கொள்வார்கள். பழங்களும் நட்ஸும் ஆரோக்கியமானது தான். ஆனால் இவற்றை இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்பாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானதா?

நட்ஸ் : நட்ஸ் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் உடல் எடையை குறைக்க நட்ஸ் பெருமளவு பங்கு வகிக்கிறது என்று சொல்கிறார்கள். பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட்,கிஸ்மிஸ்,அக்ரூட் பருப்பு போன்ற பருப்புகளை நட்ஸ்வகையாக குறிக்கிறார்கள். சமைக்க, அல்லது தோல் சீவுவது நறுக்குவது போன்ற எந்த வேலையும் இல்லை. அப்படியே எடுத்து சாப்பிடலாம்.

சத்துக்கள் : இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இதிலிருக்கும் நியூட்ரிசியன்கள் உங்களுக்கு எளிதாக எனர்ஜியை கொடுத்திடும். அதோடு சில நட்ஸ்களில் அதிகப்படியான கலோரி மற்றும் கொழுப்பு இருப்பதினால் ஒரே நேரத்தில் அதிகப்படியாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டியது அவசியம். நட்ஸ் தொடர்ந்து உங்களது அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துவர இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது.

இரவில் : நட்ஸ் ஆரோக்கியமானது தானே என்று சொல்லி இரவில் டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுகிறார்கள். இது தவறான பழக்கம். நட்ஸில் கொழுப்பு இருப்பதால் அவை தொடர்ந்து எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரித்திடும். அதோடு இவை உணவு செரிமானத்தையும் தடை செய்யும். இதனால் இரவில் வயிற்று வலி உட்பட செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்.

உணவில்லாமல் : தொடர்ந்து ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை உங்கள் உடலுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவை தூக்கத்தில் கிடைக்காது. இந்த நேரத்தில் உள்ளுறுப்புகள் தானாகவே தங்களுக்கு தேவையான எனர்ஜியை எடுத்துக் கொள்ளும். சத்தான உணவு என்று சொல்லப்படுகிற எதுவும் இரவில் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அவை ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். பகலிலேயே அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவு இரவில்???

அரை மணி நேரம் : எந்த உணவாக இருந்தாலும் அது இரவு உணவாக இருந்தாலும் சரி, அல்லது ஸ்நாக்ஸாக இருந்தாலும் சரி இரவு படுக்கைக்கு செல்வதற்கு அரை மணி நேரம் முன்பாக எடுத்துக் கொள்ளுங்கள். அவையே இரவு முழுவதும் உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கிடும்.

வறுத்த நட்ஸ் : இரவு ஒரு வேலை நட்ஸ் சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் வறுக்கபாடத நட்ஸ் தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக குறைந்தது அரை மணி நேரம் முன்பாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் வறுக்கப்பட்ட நட்ஸில் ஆரோக்கியமான கொழுப்புகள் எல்லாம் குறைந்திருக்கும். அதோடு சுவைக்காக இனிப்பு, காரம், உப்பு என ஏதேனும் கூடுதல் பொருட்கள் சேர்க்க அவையும் உடலில் சேரும். இவற்றை தவிர்ப்பது நல்லது.

benefits 1530784795

Related posts

மாத்திரைகள் ஏன்? எதற்கு? எப்படி?

nathan

நன்மைகள் ஏராளமாம்! 1 டம்ளர் துளசி பாலை தினமும் காலையில் குடிச்சு பாருங்க…..

nathan

பெண் கருவுறா மைக்கு தடையாக இருக்கும் எட்டு விஷயங்கள்?

nathan

ஆரோக்கியத்தில் மலத்தின் பங்கினை பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!!!

nathan

பயணத்தின் போது குமட்டல், தலைவலியை தவிர்ப்பதற்கான ஈசி வழிகள்!!தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களின் தாழ்வுநிலைக்கு அவர்களே காரணம்

nathan

பெண்களை தொடரும் பாலியல் தொல்லைகள்

nathan

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்

nathan