26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 1530776254
மருத்துவ குறிப்பு

இதயம் பலவீனமா இருக்கான்னு கண்டுபிடிக்கும் எட்டு அறிகுறிகள் இதுதான்

நமது நவீன அவசரமயமான வாழ்க்கையினால் நமது உடல் நலம் பலவிதங்களில் பாதிக்கப்படுகிறது என்பது நாம் அறிந்த ஒன்று தான் என்றாலும் நமது இதயத்தின் ஆரோக்கியமும் பெருமளவு பாதிக்கப்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது. அதனால் இந்த 8 அறிகுறிகள் ஏற்படும் போது நாம் கொஞ்சம் உஷார் ஆகிவிடுவது நல்லது.

இதய கோளாறால் பலர் உயிரை விடுவது இந்த நவீன சமூகத்தின் அவலம். அமெரிக்காவில் மட்டுமே 6,10,000 மக்கள் அளவுக்கு அதிகமாக மயோ மற்றும் சீஸ் சாப்பிடுவதால் இதய கோளாறு ஏற்பட்டு இறக்கின்றனர். இதற்கு இவர்களின் நவீன வாழ்க்கைமுறையும், உடல் நலத்தில் அக்கறையின்மையும் காரணமாகிறது.

காரணங்கள் இந்த இதய நோய்க்கு பல காரணங்கள் உதாரணமாக சமூக, அரசியல், பொருளாதர, சமுதாய மாறுதல்கள் போன்றவை ஆனாலும், பொதுவாக மிகவும் எளிமையாக சொல்லப்போனால் நமது சோம்போறி தனமான வாழ்க்கை முறைதான் முக்கிய காரணம் என்று சொல்லி விடலாம். வெப்மெட் அளிக்கும் அறிக்கையின்படி, ஒரு சில அறிகுறிகள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் இதயத்திற்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை முன் கூட்டியே அறியலாம்.

அறிகுறிகள் உடலில் ஏற்படும் சின்ன சின்ன மாற்றங்கள் முதல் பெரிய மாற்றங்களை ஆரம்பத்திலே கவனத்தால், நம் இதயத்தின் ஆரோக்கிய குறைபாடுகளை அறியலாம். இந்த அறிகுறிகள் தென்படவில்லை என்றாலும் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனென்றால் நிலைமை நம் கட்டுபாட்டை மீறி போய் விட்டால் பாதிக்கப்படுவது நாம் தானே. கீழ் காணும் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உங்கள் இதயம் சரிவர செயல்படவில்லை என்று கொள்ளலாம்.

கைகளுக்கு பரவும் வலி இதயம் சரிவர இயங்காத போது பெரும்பாலும் ஆண்களுக்கு இடது கை வலிக்கும். ஆனால் பெண்களுக்கு இரு கைகளும் வலிக்குமாம். மேலும் இதயகுறைபாட்டால் மாரடைப்பு ஏற்பட்டால், பெண்களுக்கு வலது கை முழங்கையில் இனம்புரியாத வலி ஏற்படலாம். இதயத்தின் வலி முதுகு தண்டுவடம் மூலமாக பரவுகிறது. முதுகு தண்டுவடத்தில் வலியை உணர்த்தும் நரம்புகளின் கடைசிபகுதி உள்ளது. தண்டுவடம் தான் லட்சகணக்கான நரம்புகளுடன் தொடர்பை கொண்டுள்ளது. இதன் காரணமாக நரம்பு மண்டலத்தின் மூலமாக மூளையை அடைந்து வலி கையில் அடிபட்டது போல உணர்வை தரும்.

தொடர் இருமல் தொடர் இருமல் பலவிதமான உடல் உபாதைகளின் அறிகுறி என்றாலும் இதய நோயும் ஒருகாரணமாக இருக்கலாம். தொடர் இருமலுடன் இளம் சிவப்பான இரத்ததுடன் கூடிய திரவமும் வாயின் மூலம் வந்தால் அது கட்டாயம் இதய நோயை குறிக்கும். பயந்துடீகங்களா? இதய நோய் அப்படின்னா இதயம் அப்படியே நின்று விட்டது என்று அர்த்தமில்லை. ஏதோ பிரச்சினை இருக்குன்னு அர்த்தம். அதாவது இதயம் என்பது உடல் முழுதும் இரத்தம் பாய்ச்சும் மோட்டர் தானே. அது அளவுக்கு அதிகமான வேகத்தில் இரத்ததை பாய்ச்சுகிறது என்று அர்த்தம். இதனால் உடல் திசுக்களுக்கு போதுமான அளவு பிராணவாயு கிடைக்காமல் குறையவாய்ப்புள்ளது. நீண்ட காலமாக தொடர் இருமல் இருந்தால், மூச்சடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

பாதம், கணுக்கால், கால் வீக்கம் இதயத்தின் செயல்பாட்டில் குறைபாடு காரணமாக கால் பகுதிக்கு கிடுகிடு என்று இறங்கும் இரத்தம் திரும்ப மேல் எழுந்து செல்வதற்கான வேகத்தை புவி ஈர்ப்பு தடை செய்வதால் பாதம், கணுக்கால் மற்றும் கால் பகுதிகளில் இந்த வீக்கம் ஏற்படுகிறது. இதை மருத்துவ ரீதியாக “பெரிபெரல் எடிமா” என்று ஹார்வேர்டு மருத்துவத்துறை கூறுகிறது. இந்த வீக்கம் இதய குறைபாடு மட்டுமில்லாமல் கல்லீரல் குறைபாடு, மகப்பேறு தருணம், அடிபடுதன் காரணமாகவும், அதிக உயரத்தில் இருக்கும் போது ஏற்படும் உடல் நலகுறைப்பாடு காரணமாகவோ அல்லது சும்மாவே உட்கார்ந்து கொண்டே இருப்பதாலும் ஏற்படலாம். ஆனாலும் இந்த அறிகுறியை அலட்சிய படுத்தக்கூடாது.

குமட்டல் மற்றும் பசியின்மை பொதுவாக இதயசெயல்பாட்டில் குறைபாடு உள்ளவர்களுக்கு பசியிருக்காது. குமட்டிக்கொண்டு வரும். சமயத்தில் கம்மியாக சாப்பிட்டாலும் இந்த அறிகுறிகள் இருக்கும். இதற்கு காரணம் கல்லீரல் மற்றும் குடலில் அதிகபடியான நீர்மம் சுரந்து விடுவதால் ஜீரணம் பாதிக்கப்படும். சரியாக யூகித்து விட்டீர்கள்… இந்த இரண்டும் தனியாக ஏற்படுவதில்லை கூடவே மேல் வயிற்று பகுதியில் வலி, வயிறு உப்புசம், வயிறு அப்படியே இழுத்துபிடித்து கொஞ்ச நேரம் வலிக்கும் அப்புறம் தானாக சரியாகி விடும். ஆனால் இது ஹார்ட் அட்டாக் வரும் முன் ஏற்படும் அறிகுறியாக கூட இருக்கலாம். அதனால் உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் காண்பியுங்கள்.

படபடப்பாகவே இருத்தல் AHAன் ஆய்வு சிறுவயது முதலே எதிலும் படபடப்பாகவே இருப்பவர்களுக்கு இருதய இரத்த குழாயில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது. படபடப்புக்கு காரணம் மன அழுத்தம், அடிக்கடி ஆபத்தான சூழ் நிலையில் சிக்கிக்கொள்வது, அவர்களுடைய தனிப்பட்ட ஆளுமைத்தன்மை, செய்ததையே திரும்பத் திரும்ப செய்வது மற்றும் காராணமே இல்லாமல் பயப்படுவது என்றும் சொல்லலாம். இதன் காரணமாக இதயத்திற்கு அதிவேகமாக துடிப்பது (டாசிகார்டியா) என்ற நோய் ஏற்படுகிறது. இந்த நோயின் காரணமாக மாரடைப்பு ஏற்படலாம்.

தோல் வெளிறி போதல் பொதுவாக யாருக்காவது தோல் வெளிறி போனால் அது கண்டிப்பாக இதயகுறைபாடு காரணமாக இருக்கலாம். இதயம் சரியாக வேலை செய்யாததால் இரத்த ஓட்டம் குறைந்து தோல் வெளிறி போகிறது. தோலின் திசுக்களுக்கு போதுமான அளவு இரத்தம் கிடைக்காததால் தோலின் நிறம் வெளுத்து போகிறது. அது போக திடீரென்று அதிர்ச்சிக்கு உள்ளாவதாலும் இரத்த ஓட்டம் குறைந்து தோல் வெளுத்து போகும். இதயம் நோய் உள்ளவர்களுக்கும் இந்த காரணத்தால் தோல் வெளுத்து போகும். திடீரென்று அதிர்ச்சிக்கு ஆளானவர்களுக்கும் உடல் முழுவதுமோ அல்லது தோலின் ஒரு சில பகுதிகளிலோ வெளுத்து போகும். ஆனால் வேறு சில காரணங்களாலும் அதாவது இரத்தச்சோகை, இரத்த செல் எண்ணிக்கை குறைதல் காரணமாகவும் தோல் வெளுத்து போகும். உங்களுக்கு இந்த பிரச்சனை சமீபத்தில் ஏற்பட்டிருந்தால் உடனே காலம் தாழ்த்தாமல் மருத்துவரை பாருங்கள்.

தோல் சிவந்து போதல் “ஒவ்வாமை மற்றும் கிளினிகல் நோய் எதிர்ப்புசக்தி படிப்பு” வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் யாருக்கு மிக அதிகமாக எஸிமா எனும் தோலில் சொரி சிறங்கு மற்றும் ஸிங்கல்ஸ் எனும் குளிர் ஜூரம் ஏற்படுகிறதோ அவர்களுக்கு இதய நோய் இருக்க வாய்ப்புள்ளது என்று வெளியிட்டுள்ளார்கள். எஸிமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 48 % பேர் உயர் இரத்த அழுத்த நோயாலும், 28 % அதிக கொலஸ்ட்ரால் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதே போல் ஸிங்கல்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 59% மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அடிக்கடி சோர்வடைவது. மாரடைப்பு ஏற்படும் முன் ஏற்படும் முக்கிய அறிகுறி இந்த சோர்வு. இந்த சோர்வு நிலை நிரந்தரமாக இருந்தால் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் பொதுவாக பெண்கள், தான் சோர்வடைந்து இருப்பதை வெளியே சொல்லாமல் விட்டுவிடுவதால் 70% மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சோர்வு கடுமையான மன உளைச்சலாலோ அல்லது கடுமையான உடல் உழைப்பாலோ ஏற்படுவதல்ல. இந்த சோர்வு, இதய கோளாறால் ஏற்படுகிறதா என்று எப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால் இரவு ஆக ஆக சோர்வு மிக அதிகமாகிவிடும். சின்ன சின்ன வேலைகள் உதாரணமாக குளிப்பதற்கோ ஏன் படுக்கையை விட்டு எழுவதற்கு கூட முடியாமல் சோர்ந்து விடுவார்கள். மேலே சொல்லப்பட்டவை எல்லாம் இதய நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தான் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் இந்த மாதிரியான அறிகுறிகளை அலட்சியம் செய்து கொண்டு இருக்கிறீர்களா?

2 1530776254

Related posts

முதுகு வலி, இடுப்பு வலி இன்றி, இனி நிம்மதியாக வேலை செய்யலாம்!!!

nathan

தாய்ப்பால் சுரக்கலையா? தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா?இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்…

nathan

உங்களது பெருங்குடல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

nathan

மலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்!

nathan

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாமா?

nathan

காதலிக்கும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

nathan

மருத்துவ பண்புகள் நிறைந்த வெங்காயம் மோர்!…

sangika

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மூன்று முடிச்சு போடுவது ஏன்?என்று தெரியுமா?

nathan