24.5 C
Chennai
Wednesday, Dec 25, 2024
08 1512728693 1 lemonpeel
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுனா, முதுகு மற்றும் மூட்டு வலியில் இருந்து முற்றிலும் விடுபடலாம்!

புவியில் உள்ள ஆரோக்கியமான பழங்களில் ஒன்று தான் எலுமிச்சை. மஞ்சள் நிறத்தில் புளிப்புச் சுவையைக் கொண்டிருக்கும் இப்பழத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்துக் கொள்ள உறுதுணையாக இருக்கும்.

எலுமிச்சையில் வைட்டமின்களான ஏ, சி, பி1, பி6, கனிமச்சத்துக்களான கால்சியம், பாஸ்பரஸ், பெக்டின், மக்னீசியம், போலிக் அமிலம், பயோ-ப்ளேவோனாய்டுகள் மற்றும் பொட்டாசியம் போன்றவை அடங்கியுள்ளன. இச்சத்துக்கள் உடலைத் தாக்கும் நோய்கள் மற்றும் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். இத்தகைய எலுமிச்சை தற்போது பெரும்பாலானோர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியைப் போக்க உதவும் என்பது தெரியுமா? அதுவும் அதற்கு அதன் தோல் மட்டுமே போதுமானது. இக்கட்டுரையில் மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்க எலுமிச்சையை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டள்ளது.

எலுமிச்சை தோல் எலுமிச்சையின் தோலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் வளமான அளவில் உள்ளது. இது இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் வலியைப் போக்கும் திறன் கொண்டவை. அதோடு மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்குவதிலும் சிறந்தது. அதற்கு எலுமிச்சைத் தோலை கீழே கொடுக்கப்பட்டுள்ள 2 வழிகளின் மூலம் தீர்வு காணலாம்.

வழி #1 10 எலுமிச்சைகளை எடுத்து நீரில் கழுவி, பின் அந்த எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்துக் கொண்டு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து மூடி, 15 நாட்கள் ஊற வையுங்கள். பின் அந்த எண்ணெயை ஒரு துணியில் நனைத்து வலியுள்ள மூட்டு மற்றும் இடுப்பு பகுதிகளில் வைத்துக் கட்டி, இரவு முழுவது ஊற வைக்க வலி மாயமாய் மறையும்.

வழி #2 எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, துணி பயன்படுத்தி கட்டி, சில மணிநேரம் ஊற வைப்பதன் மூலமும் மூட்டு மற்றும் இடுப்பு வலி குறையும். எலுமிச்சையின் தோலை சீவி எடுத்த பின், எஞ்சிய எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து ஜூஸ் தயாரித்து குடித்தால் சில நன்மைகள் கிடைக்கும். அந்த நன்மைகளை கீழே காண்போம்.

நன்மை #1 எலுமிச்சையில் உள்ள ப்ளேவோனாய்டுகள், பல்வேறு வகையான புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கும். எனவே முடிந்தால் தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

நன்மை #2 எலுமிச்சை ஜூஸ் செரிமான பிரச்சனைகளான வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். ஆகவே வயிற்று பிரச்சனைகள் வராமல் இருக்க எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள்.

நன்மை #3 எலுமிச்சை ஜூஸின் முக்கிய நன்மை, அது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும். அதோடு, இந்த ஜூஸ் கல்லீரலில் பித்த நீரின் உற்பத்தியை அதிகரித்து கொழுப்புக்களை எளிதில் கரைக்கச் செய்யும்.

நன்மை #4 எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். எனவே சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளைத் தடுக்க எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள். இதனால் சிறுநீர் பாதையில் தொற்றுகள் ஏற்படாமலும் இருக்கும்.

நன்மை #5 உடலில் போதுமான அளவு பொட்டாசியம் இல்லாத போது, உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். எலுமிச்சையில் பொட்டாசியம் போதுமான அளவு இருப்பதால், இதன் ஜூஸை அடிக்கடி குடிக்க உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்கலாம்.

நன்மை #6 எலுமிச்சை ஜூஸ் பல் வலி மற்றும் ஈறு நோய்களில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, வாயை புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக, இந்த ஜூஸைக் குடித்தும் பற்களைத் துலக்க வேண்டாம். இதனால் அதன் முழு நன்மையையும் பெற முடியாமல் போகும்.

நன்மை #7 எலுமிச்சையில் வளமான அளவில் பெக்டின் நார்ச்சத்து உள்ளது. இதனால் அடிக்கடி பசி ஏற்படும் உணர்வு தடுக்கப்பட்டு, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து, உடல் எடை குறைய உதவும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள்.

08 1512728693 1 lemonpeel

Related posts

உங்களுக்கு நம் உடலில் இருக்கும் அமிலங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் தெரியுமா!!

nathan

காய்ச்சல் மற்றும் சளியை தவிர்க்க நீங்கள் பின்பற்ற வேண்டியவை!

nathan

கவலை வேண்டாம்… வழுக்கை தலையில் கூட முடி வளர செய்ய வேண்டுமா?

nathan

இதயநோய்க்கு குட்பை சொல்லனுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

nathan

கருத்த‍டை மாத்திரைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் பழக்க‍ம் வழக்கம் ஆக்கி கொண்டீர்களா?

sangika

பதினாறு செல்வங்களில் முக்கியமானது குழந்தைச் செல்வம்….

sangika

சூப்பர் டிப்ஸ்! தினமும் நைட் 2 கிராம்பு சாப்பிட்டா உடம்புக்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு தெரியுமா?

nathan

கைக்குழந்தை விடாமல் தொடர்ந்து அழுதால் .

nathan

எச்சரிக்கை! பானைப் போன்ற தொப்பை இந்த 10 நோய்களை உண்டாக்கும் என்பது தெரியுமா?

nathan