30.6 C
Chennai
Saturday, Jun 28, 2025
உடல் பயிற்சி

இதய நோயாளிகள் ஏரோபிக் பயிற்சி எவ்வாறு செய்ய வேண்டும்

இதய நோயாளிகள் ஏரோபிக் பயிற்சி எவ்வாறு செய்ய வேண்டும்
இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஏரோபிக் பயிற்சி எனப்படும் விரைவாக நடத்தல், சைக்கிள் சவாரி, நீச்சல், கைப்பந்து, டென்னிஸ் போன்றவற்றைச் செய்யலாம்.• லேசான பயிற்சிகளில் ஆரம்பித்து படிப்படியாகப் பயிற்சி நேரத்தை அதிகரிக்கலாம்.• உடற்பயிற்சி செய்யும் போது சிரமம் இல்லாமல் பேச வேண்டும். அப்படி முடியாவிட்டால், உடனடியாகப் பயிற்சியின் அளவு மற்றும் வேகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

• இந்தப் பயிற்சிகளால் ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் அடைப்பு அதிகம் ஆகாமல் தடுக்கப்படும்.

• அடைப்பு இருந்தால் அதன் அளவும் குறையும்.

• உடலில் கொழுப்பின் அளவும் குறையும். நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இன்சுலின் ஏற்புத்தன்மை அதிகரிக்கும்.

• உடற்பயிற்சியின்போது நெஞ்சுவலி அல்லது தலைச்சுற்றல் ஏற்பட்டால், உடனடியாகப் பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரைத் தொடர்புகொள்ளவும். மாரடைப்புக்குப் பிறகு உடற்பயிற்சியை மெதுவாகவும் சீராகவும் கூடுதலாக்கிக் கொள்ளலாம். முதல் ஒரு வார கால ஓய்வுக்குப் பிறகு தினமும் ஐந்து நிமிடங்கள் நடக்க முயற்சிக்கலாம்.

Related posts

புதியவர்கள் செய்யும் வொர்க் அவுட் தவறுகள்

nathan

நீரிழிவு நோயிலிருந்து விடுபட 4 உடற்பயிற்சிகள்

nathan

வயிற்று கொழுப்பை குறைக்க விதவிதமான உடற்பயிற்சிகள்

nathan

முதுகுவலியை போக்கும் அபானாசனம்

nathan

ஸ்லிம்மான தொடை பெற-இதோ!!

nathan

உடற்பயிற்சி என்பது உடலை கஷ்டப்படுத்துவதா?

nathan

சிரமப்படும் அம்மணிகளுக்கு சில சிம்பிள் உடற்பயிற்சிகள்

nathan

சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் இருக்க‍ வேண்டுமா?

nathan

கால்கள், இடுப்புக்கு வலிமை தரும் பத்ம சயனாசனம்

nathan