பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் நீரினால் வாயை கொப்பளிக்காமல் இருப்பதால் பாக்டீரியாக்கள் சேர்ந்து பற்களை சொத்தையாக்கிவிடும்.
இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.
இதனை சரிசெய்ய உண்ணும் உணவினை கவனமாக மேற்கொள்ளவது நல்லது. ஒருசில உணவு பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் எளிமையாக தடுக்கலாம்.
நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளித்து வந்ததால் வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறுவதுடன், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்.