மேக்கப் போடும் முன்பு சில டிப்ஸ்
முகத்தை கழுவி நன்றாக துடைத்துவிட்டுதான் மேக்கப் போடவேண்டும்.
நிறைய பேர் டால்கம் பவுடரை முகத்திற்கு போடுகின்றனர். முகத்திற்கு முக்கியமாக பெண்கள் face Powder தான் உபயோகப்படுத்தவேண்டும். எமது நிறங்களுக்கு ஏற்ற ஷேடுகளை பயன்படுத்துவது சிறந்தது.
சில Moisturising Lotion முகத்தில் எண்ணெய் பசையை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க Moisturising Lotion உடன் சேர்ந்து வருகின்ற பவுண்டேஷன்களை பயன் படுத்தலாம்.
Foundation தேர்ந்தெடுக்கும்போது அதை கையில் போட்டுப் பார்த்து தேர்ந்து எடுக்காமல் முகத்தில் போட்டுப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேக்கப் போடும் போது முகம்,கழுத்து இரண்டுக்கும் போடுங்கள்.இல்லாவிடில் முகம் தனியாக தெரியும்.
லிப் பென்சிலும் லிப்ஸ்டிக்கும் ஒரே நிறத்தில் இருதால் நல்லது.வயதானவர்களுக்கும் இந்த நிறங்கள் நன்றாக இருக்கும்.அவர்கள் சிறிது குறைத்துப் போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
வயதானவர்கள் ஐ லைனர்,மை போட வெட்கப்படுவார்கள்.அவர்கள் மஸ்காரா மட்டும் போட்டுக் கொண்ள்ளலாம். ஐ ஷேடோ வும் பிங்க் நிறத்தில் போடாமல் Light Brown நிறத்தில் போடலாம். கண்கள் அழகாகவும் பெரிதாகவும் தெரியும்.
கண் இமையில் குறைவான முடி உள்ளவர்கள். Lash Fantasy mascara வை பயன்படுத்தினால் இமை இயற்கையாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.
சிம்பிளான மேக்கப்புக்கு தேவையான அடிப்படை பொருட்கள்
மாய்ஸ்சுரைஸிங் லோஷன்
ப்வுண்டேஷன் – சரும நிறத்துக்கு ஏற்ப
பேஸ் காம்பாக்ட் பவுடர்
ஐ ஷேடோ
மஸ்காரா
லிப் பென்சில் மற்றும் லிப்ஸ்டிக்
மேக்கப் போடும் முறை
1)முதலில் மாய்ஸ்சுரைஸிங் லோஷன் அல்லது பேஸ் கிரீமை படத்தில் காட்டியுள்ளவாறு முகம்,கழுத்தில் தடவிக் கொள்ளவும்.
2)பவுண்டேஷனை ஒரு விரலால் தொட்டு முகத்தில்,கழுத்தில் புள்ளியாக வைத்து ஒவ்வொரு இடமாக நன்றாக தேய்த்துவிடவும்.பவுண்டேஷன் லைட்டாக போட்டுக் கொண்டால் போதும்.ஒரு 5 நிமிடமாவது காத்திருக்கவேண்டும்.உடனடியாக பவுடர் போட்டால் நன்றாக இருக்காது.பவுண்டேஷன் முகத்தில் பரவ வேண்டும்.
3)இப்போது பேஸ் பவுடரை பிரஷ்ஷிலோ அல்லது பஃப்பிலோ எடுத்து முகத்தில் apply பன்னவும்.
4)ஐ ஷேடோவை பிரஷ்ஷில் எடுத்து புருவத்திற்கு அடியில் உள்ள இடத்தில் ஆரம்பித்து இமை முடி ஆரம்பிக்குமிடம் வரை போடவும்.
5)மஸ்காரா போடவும்.
6)லிப் பென்சிலால் உதடுகளின் வடிவத்தை சீராக படத்தில் காட்டியுள்ளவாறு வரையுங்கள்.
7)பிறகு அந்த கோடுகளுக்கு உட்பட்ட பகுதியில் லிப்ஸ்டிக் தடவுங்கள்.
மேக்கப் முடிந்தது.7-10 நிமிடங்கள் தான் ஆகும்.ரூஜ் தடவுவதாக இருந்தால் முக நிறத்திலேயே கன்னத்தின் பக்க வாட்டில் தடவுங்கள்.இந்த மேக்கப் முறையில் சிம்பிளாக போட்டுக் கொண்டால் யாருக்கும் நீங்கள் மேக்கப் போட்டிருப்பது தெரியாது.பளிச்சென்று உங்கள் முகம் இருக்கும்.