26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
08 1515389565 2
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் உடலில் நிகழும் மாற்றம் குறித்த ரகசியங்கள்!

மருத்துவ உலகில் எண்ணற்ற புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் மனிதனை அச்சுருத்தும் நோய்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது . இதனை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதை எதிர்காலத்தில் வைத்து விடலாம். இப்போது ஆண் பெண் பற்றிய ஓர் கேள்வி…. இருவருக்கும் என்ன வித்யாசம்? இந்த கேள்வி உங்களுக்கு வேடிக்கையாக தெரியலாம் ஆனால் சற்று நிதானமாக யோசித்துப் பாருங்களேன்.. இந்த கேள்விக்கு உங்களால் அறிவியல் பூர்வமாக விடை கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து அவன் ஆண் என்றும் இவள் பெண் என்றும் சொல்வது மிகவும் எளிது. ஆனால் மருத்துவ ரீதியாக உடலியக்கங்கள் ஒவ்வொன்றின் செயல்பாடுகளை வைத்து ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படி செயல்படுகிறது என்ற வித்யாசங்களை பிரித்துணர முடியுமா?

இதை சாத்தியப்படுத்த நினைத்த உலகம் முழுவதிலிருந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுப்பட்டது. அவற்றின் பலனாக ஆண்களின் உடலிலும் மூளையும் ஏற்படுகிற சில முக்கிய ரகசியங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

ரகசியம் 1 : ஓர் ஆண் கவனிக்கும் போது அவனுடைய பாதி மூளையைத் தான் எப்போதும் பயன்படுத்துகிறான். ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கும் போது இன்னொன்றைப் பற்றி சிந்திப்பது, முடிவெடுப்பது போன்ற வேலைகளை ஆண்கள் சர்வ சாதரணமாக செய்து விடுகிறார்கள். ஆனால் பெண்கள் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் மட்டுமே கவனத்தை செலுத்துகிறார்கள்.

ரகசியம் 2 : கேட்பதும்,நுகர்வது,சுவையறிவது போன்ற உணர்வுகள் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருக்கிறது. ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு மிகவும் நுண்ணிய பார்வை இருக்கிறது என்கிறது ஆராய்ச்சி. ஏனென்றால் ஆண்கள் வேட்டைக்காரராக இருந்தவர்கள் அவர்கள் விலங்குகளின் நடமாட்டத்தை மிகவும் நுணுக்கமாக கவனித்து வளர்ந்தவர்கள் என்பதால் வழி வழியாக இந்த ஜீன் ஆண்களிடத்தில் இருக்கிறதாம்.

ரகசியம் 3 : பெண்கள் இருட்டிலும் எளிதாக சற்று கணிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அருகில் என்ன பொருள் இருக்கிறது அவை எப்படி பயன்படுத்த வேண்டும் போன்ற புரிதல் பெண்களிடத்தில் இருக்கிறது. ஆண்களுக்கு இந்த யுக்தி எப்போதும் இருப்பதில்லை. ஆனால் அவர்களிடத்தில் இருக்கிற ஓர் குணாதிசயம் என்ன தெரியுமா? பெண்களைக் காட்டிலும் தொலைவில் இருப்பதையும் மிக எளிதாக யூகித்து பார்த்து விடுவது தான்.

ரகசியம் 4 : உடலுழைப்பு சார்ந்த விஷயங்களில் ஆண்கள் தான் டாப். சராசரியாக ஓர் ஆண் தன்னுடைய எடையை விட 8- 10 சதவீதம் எடையை எளிதாக கையாள்கிறார்கள். இதற்கு காரணம் ஆண்கள் உடலில் இருக்கக்கூடிய ஹீமோகுளோபின் தான். பெண்களைக் காட்டிலும் ஆண்களின் உடலில் அதிக ஹீமோகுளோபின் சிவப்பு ரத்த அணுக்கள் இருக்கின்றன. இவை ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்துகிறது.

ரகசியம் 5 : ஆண்களுக்கு அதிகமாக செல்லுலாய்ட் தாக்குவதில்லை. இதற்கு காரணம், பெண்கள் மற்றும் ஆண்கள் உடலில் இருக்கக்கூடிய தசைகளின் சதவிகிதம் வேறுபடுகிறது. அத்துடன் அவற்றில் இருக்கும் திசுக்களும் வேறுபடும். ஆண்களுக்கு பிறக்கும் போது சற்று வளர்ந்த நிலையில் தான் தசைகள் இருக்கும். அதே நேரத்தில் அவர்கள் சருமத்தில் அதிகப்படியான கொலாஜன் இருக்கிறது.

ரகசியம் 6 : பெண்களைக் காட்டிலும் ஆண்கள் மிக வேகமாக தூங்குவது, அதே நேரத்தில் விரைவில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுவதுண்டு. தூங்கும் போது எழுபது சதவீத ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும் போது தான் பெண்கள் தங்களது பத்து சதவீத தூக்கத்தை கடந்திருப்பார்கள்.

ரகசியம் 7 : பெண்களை விட ஆண்கள் உடல் எடையை மிகவும் எளிதாக குறைத்து விடுவார்கள் . ஆண்கள், தசைகளுக்கும், பிற உறுப்புகளுக்கும் எனர்ஜி வழங்க அதிகப்படியான கலோரி எரிக்கப்படுவது அவசியமாக இருக்கிறது. அதே நேரத்தில் ஆண்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு பெண்களைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாக இருக்கிறது. இது ஆண்களின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

ரகசியம் 8 : நிலையான ஒரு பொருளோ அல்லது உருவமோ பெண்களுக்கு எளிதாக பார்க்க முடிவது போலயே… அசைந்தாடும், வேகமாக நகரும் பொருட்கள் ஆண்களால் எளிதாக பார்க்க முடியும். அதோடு நகரும் பொருட்களின் மீது ஆண்களுக்கு ஓர் ஈர்ப்பும் உண்டு.

ரகசியம் 9 : ஆண்களுக்கு தொப்பை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. இதற்கு காரணம் பெண்களுக்கு இருப்பது போல அவர்களது உடலில் கொழுப்பு சருமத்திற்கு அடியில் படிவதில்லை. வயிற்றுப் பகுதியில் மட்டுமே அதிகமாக சேரும் என்பதால், ஆண்களுக்கு தொப்பைப் பிரச்சனை எப்போதும் இருக்கும். உடலை எப்போதும் கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

ரகசியம் 10 : ஆண்களுக்கு பெண்களைக் காட்டிலும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் உடலில் அதிகப்படியான டெஸ்டிரோன் இருப்பது தான். இவை இன்ஃப்லமேஷன் குறைத்திடும். இதனால் உடலில் குறைந்த அளவிலான ஆண்ட்டிபாடி மட்டும் உற்பத்தியாகிறது.

08 1515389565 2

Related posts

காது குடையும் பழக்கம் நல்லதா?

nathan

மார்பு சளி குறைய யூகலிப்ட்ஸ் தீர்வு

nathan

ஒருதலை காதலர்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி?

nathan

பிரிந்த காதலர்கள் மீண்டும் ஒன்றுசேரும் போது ஏற்படும் மாற்றங்கள்

nathan

இரவில் தாமதமாக உணவு சாப்பிடுபவரை தாக்கும் நோய் – தெரிந்துகொள்வோமா?

nathan

உட்கார்ந்தே இருந்தால் ஏற்படும் உபாதைகள்

nathan

ஆஸ்துமா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா?

nathan

மதுவை மறக்க ஹோமியோவில் முடியமா ?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பகப் புற்றுநோய் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

nathan