24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
3 1525443106
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ஆண்மையை அதிகரிக்கும் அம்மான் பச்சரிசி இலை.

காய்கறிகள், பழங்களை காட்டிலும் பல மடங்கு நன்மைகளை தருவது இந்த கீரை மற்றும் மூலிகை வகைகள் தான். நமது முன்னோர்கள் அதிகளவில் கீரை மற்றும் மூலிகையை உணவில் சேர்த்துக் கொண்டதனால் தான் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் நாம் இந்த நவீன காலத்தில் பாஸ்ட் புட் மயக்கத்திலயே நம் வாழ்நாளை கொன்று கொண்டு இருக்கிறோம். ஏன் நம் பிள்ளைகளுக்கு கூட எந்தவொரு கீரையின் பெயரோ மூலிகையின் பெயரோ கூட தெரியாமல் வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களாகிய நமக்கு கூட சில கீரை மற்றும் மூலிகை வகைகளின் நன்மைகள் கூட தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். அப்படிப்பட்ட சில அற்புதமான நன்மைகளை அள்ளித் தரும் மூலிகை வகைகளைப் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

அம்மான் பச்சரிசி இது பூண்டு வகை குடும்பத்தை சார்ந்தது. இதில் இரண்டு வகைகள் உள்ளன. பெரிய அம்மான் பச்சரிசி தாவரம் மற்றும் சிறிய பச்சரிசி தாவரம். இவை பார்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

காணப்படும் இடங்கள் நடைபாதை, சாலையோரங்களில், நீர் ஆதாரங்கள் உள்ள இடங்களான கிணறுகள், ஈரப்பதமான நிலம் போன்றவற்றில் காணப்படுகிறது.

அடங்கியுள்ள பொருட்கள் இதிலிருந்து வரும் பால் மருத்துவ துறையில் பெரிதும் பயன்படுகிறது. இதில் அஸ்ட்ரிஜெண்ட் , மெழுகு, டோனிக், உயர் கால்சியம் மற்றும் குளிர்ச்சியான தன்மை போன்றவை உள்ளன.

பெயர்கள் தாவரவியல் பெயர்கள் :யூபோர்பியா ஹிர்தா, யூபோர்பியா பிலுஃபெரா தமிழ் : அம்மான் பச்சரிசி ஆங்கிலம் : கார்டன் பர்ச், ஸ்நேக் வீட், பில் பியரிங் பர்ச், ஆஸ்துமா பிளாண்ட், ஹைரி பர்ச் குஜராத் : டுடேலி சமஸ்கிருதம் : டுக்திக்கா ஹிந்தி : டுதி, பாரிடுதி, டுத் கோஸ் தெலுங்கு : ரெட்டின் ரரோலு, ரெட்டிவரி நனபாலு மலையாளம் : நீல பாலை

பயன்கள் இந்த கீரை வகை ஆஸ்துமா, மூச்சுப் பிரச்சினை, இரத்தத்தை சுத்தப்படுத்துதல், உடல் வலிமை, நீண்ட நாள் காயங்கள் போன்ற நன்மைகளை அள்ளித் தருகிறது.

உடல் சூடு மற்றும் மலச்சிக்கல் அம்மான் பச்சரிசி இலைகளை பூண்டு மற்றும் வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்கி சட்னி தயாரிக்க வேண்டும். இதை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடம்பு ரெம்ப நேரம் குளிர்ச்சியாக இருப்பதோடு மலச்சிக்கலை தடுக்கிறது.

வீக்கம் மற்றும் கொப்புளங்கள் வீக்கம் மற்றும் கொப்புளங்கள் உள்ள இடத்தில் இந்த இலைகளை அரைத்து பற்று போட்டு வந்தால் 5 நாட்களில் எல்லாம் குணமாகி விடும்.

வாய் மற்றும் குடல் அல்சர் பாசி பருப்புடன் இந்த இலையை சேர்த்து நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் குடல் அல்சர் குணமாகும்.

வறண்ட உதடுகள் இதன் பால் வறண்ட உதடு, நாக்கு புண், வாய்ப்புண் போன்றவற்றிற்கு உதவுகிறது. கருத்த தோல் மற்றும் மருக்கள் கருத்த சருமத்தில் இதன் பாலை தடவி சில நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் சருமம் பழைய நிலையை அடையும். இதை குணமாகும் வரை பின்பற்ற வேண்டும்.

தாய்ப்பால் சுரப்பு சுத்தமான மாட்டுப் பாலுடன் இதன் பூவை நன்றாக கழுவி அரைத்து கொள்ளவும். கொஞ்சமாக பாலுடன் இதை சேர்த்து காலையில் 18 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

லுகோரோருவா, கருவுறுதல் இதன் இலைகளை பட்டர் மில்க் உடன் அரைத்து பயன்படுத்தி வந்தால் லுகோரோருவா குணமாகும். இந்த இலைகளை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்பட்டு கருவுறுதல் எளிதாகும்.

விந்து பிரச்சினைகள் ஸ்டோன் பிரேக்கர் இலைகள் மற்றும் அம்மான் பச்சரிசி இலைகளை சம அளவு எடுத்து அரைத்து பாலில் கலந்து 21 நாட்களுக்கு காலையில் குடித்து வர ஆண் இனப்பெருக்க மண்டலம் மேம்பட்டு ஆண்மை பிரச்சினைகள் சரியாகும்.

இரத்தம் சுத்தப்படுத்துதல் 3 வேப்பிலைகள், மிளகு, அம்மான் பச்சரிசி இலைகள் சேர்த்து அரைத்து காலையில் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.

மரு உதிர லெமன் அளவு இந்த இலைகளை எடுத்து அரைத்து சாப்பிட்டு வர வாத நோய்கள் காணாமல் போகும். எவ்வளவு பெரிய மருவாக இருந்தாலும் இந்த அம்மான் பச்சரிசி செடியின் பாலை மரு மீது வைத்து வந்தால், சருமத்தில் இருந்த இடம், தழும்பு இல்லாமல் மருவை உதிரச் செய்யும் ஆற்றல் கொண்டது.

3 1525443106

Related posts

தெரிஞ்சிக்கங்க… உயிர் போகும் காது வலியா? இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்….

nathan

காய்ச்சல் இருக்கும்போது செய்யக்கூடாதவை என்ன தெரியுமா….?தெரிஞ்சிக்கங்க…

nathan

புதினா… மணத்துடன் மருத்துவ குணமும்

nathan

பித்தப்பை கல்லை அகற்ற புதிய சிகிச்சை

nathan

ஆண்மை பிரச்சனைகளை தீர்க்கும் இயற்கை வயாகரா அமுக்கிராகிழங்கு

nathan

கண்புரை என்றால் என்ன?

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?

nathan

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் உடனடி மரணமா?

nathan

தொட்டினால் ஒட்டும் தொடாமலும் தொற்றும் கண்நோய்

nathan