24.9 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cover 1524808251
மருத்துவ குறிப்பு

எவ்வளவு சாப்பிட்டாலும் உங்க உடம்பு தேறமாட்டேங்குதா? அப்ப இத படிங்க!

நீங்கள் நோஞ்சான்களின் லிஸ்ட்டில் இருப்பின், உடல் எடையை அதிகரித்து அந்த லிஸ்டை விட்டு வெளியேற வீட்டு வைத்தியம் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இது எளியது , பயனுள்ளது மற்றும் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத உணவே மருந்தாகும் மருத்துவ முறையாகும்.சிறப்பு என்னவென்றால், இதில் குறிப்பிட்டுள்ள பல வழிமுறைகளை எளிதாக நீங்கள் பயன்படுத்தலாம்.

அதற்காக வழக்கமான உங்கள் நடைமுறைகளை பெரிதாக மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. எனவே , எடையைக் கூட்ட வீட்டு வைத்தியங்களே சிறந்த வழியாகும். அதிகமான முயற்சி இல்லாமல் எளிதாக உங்கள் எடையை அதிகரிக்க உதவும் 10 வீட்டு வைத்தியங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன

வெண்ணை (பட்டர்) மற்றும் சர்க்கரை • ஒரு தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட வெண்ணை மற்றும் சம அளவு சர்க்கரையைச் சேர்த்து நன்றாக கலக்குங்கள். powered by Rubicon Project • உங்கள் உணவை சாப்பிடுவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்தக் கலவையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். • இந்த கலவையை சாப்பிட ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே வியக்கவைக்கும் முடிவுகளை நீங்கள் காணலாம்.

மதிய உறக்கம் • மதிய நேரங்களில் சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்கு குட்டித்தூக்கத்தை போடுங்கள். • இது எடையைக் அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், இரவில் நிம்மதியாகத் தூங்கவும் உதவும். எடையை வேகமாகக்கூட்ட இந்த முறையான வீட்டு வைத்தியம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

மாங்காய் மற்றும் பால் • ஒரு மாம்பழத்தை (பழுத்த) ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடலாம். • மாம்பழத்தைச் சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் சூடான பால் குடிப்பதை உறுதி செய்யுங்கள். • நல்ல முடிவுகளை ஒரு மாதம் கழித்து நீங்கள் காண்பீர்கள்.

அத்தி மற்றும் உலர்ந்த திராட்சை • உலர்ந்த அத்தி மற்றும் திராட்சை கலோரிகளின் சொர்க்கபுரியாகும், எனவே அவைகள் உங்கள் உடலின் எடையை அதிகரிக்க எளிதாக உதவுகின்றன. • 6 உலர்ந்த அத்தி மற்றும் சுமார் 30 கிராம் உலர்ந்த திராட்சையை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும் . • அடுத்த நாளில் அவைகளை இரண்டு பகுதிகளாகச் சாப்பிடுங்கள் . • பெரும்பாலான மக்கள் 20 முதல் 30 நாட்களில் சாதகமான முடிவுகளைக் காண்கிறார்கள்.

வேர்க்கடலை வெண்ணெய் வேர்க்கடலை வெண்ணெய் அதிக கலோரிகளைக் கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனவே உடல் எடையைக் கூட்ட சரியான வீட்டுத் தீர்வு இதுவேயாகும். உங்கள் எடை என்ன வேகத்தில் அதிகரிக்கிறது என்பதை வேர்க்கடலை வெண்ணெயை உங்கள் ரொட்டி அல்லது பேக்கல் மீது தாராளமாகப் பயன்படுத்திப் பாருங்கள்.

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்குகள் கார்போஹைட்ரேட்டுகளால் நிரம்பியுள்ளன. எனவே அவற்றைச் சாப்பிடுவது உங்கள் உடல் எடையை அதிகரிக்க உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. கிரில் அல்லது பேக்கிங் உருளைக்கிழங்கு , அல்லது பிரஞ்ச் பிரையாக மேலும் நீங்கள் விரும்பினால் கூடுதல் விர்ஜின் எண்ணெயைப் பயன்படுத்தி எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் பிரஞ்ச் பிரையாக சாப்பிட்டால், நுகர்வை ஒரு வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் என கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள் .

கொட்டைகள் பாதாம், அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற கொட்டைகள் கலோரிகளால் நிரம்பியுள்ளன எனவே அவற்றை உங்கள் உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான நட்ஸ் சுவை, ஊட்டச்சத்து மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவற்றை அனுபவிக்க உதவும் ஒன்றாகவே உள்ளன. ஆரோக்கியமான கொழுப்பைக் கொண்டுள்ள இந்த நட்ஸ் , உங்கள் எடையை ஆரோக்கியமான வழியில் அதிகரிக்க எளிதாக உதவுபவை. இருப்பினும், அதையே தொடர்ந்து சாப்பிடாதீர்கள் பிறகு பசியை உணர மாட்டீர்கள்.

மன அழுத்தம் மன அழுத்தம் ஒருவரது உடல் எடையைக் குறைப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் . நீங்கள் வேலையில் அல்லது வீட்டில் ஒரு மன அழுத்தம் தரும் நிலைமையைக் கையாள்கிறீர்கள் என்றால், அதைப் போக்க உதவும் யோகா அல்லது மாஸ்டர் மூச்சுப் பயிற்சி நுட்பங்களைப் பயன்படுத்துங்கள் .நீங்கள் மன அழுத்தத்தைப் போக்கும் முறையைக் கற்று செயல்படுத்தும்பொழுது உடல் எடை சீராக அதிகரிப்பதைப் பார்க்கலாம்.

வாழை மற்றும் பால் வாழைப்பழங்கள் கலோரிகளால் நிரம்பியுள்ளன என்ற ரகசியத்தை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இவைகள் உடனடியான எனர்ஜி லிப்ட் கொடுக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. இதனால்தான் டென்னிஸ் வீரர்கள் பெரும்பாலும் தங்கள் விளையாட்டின் இடைவெளியில் பழம் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். தினமும் காலையில் ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்த மித சூட்டிலுள்ள பாலை அருந்துங்கள்.

பாதாம் பால் பாதாம் பாலும் சில பவுண்டுகள் எடையைக் கூட்ட உதவும் சிறந்த வழியாகும்.பாதாம், உலர்ந்த அத்திப்பழம் மற்றும் பேரிச்சையைச் சேர்த்து பாலைக் கொதிக்க வைக்கவும். ஒரு மாதம் வரை ஒவ்வொரு நாளும் ஒரு வேளைக்கு இந்தப் பாலை அருந்துங்கள் . வேகவைத்த பாதாம், அத்திப்பழம் மற்றும் பேரீச்சையை எறியாமல் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் எடையை அதிகரிக்க மேலுள்ள பல்வேறு வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பும் எடையை அடையும் வரை இந்த மகத்தான வீட்டு வைத்தியங்களைத் தொடருங்கள் .உங்கள் எடையை அதிகரிக்க உதவுவதற்கு ஆரோக்கியமான, சிறந்த மற்றும் எளிமையான வழிகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த சிறந்த 10 வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்…

cover 1524808251

Related posts

டீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்

nathan

பெண்களின் அந்த ஆசையை குறைக்கும் தைராய்டு

nathan

அதிகமாக கணினி உபயோகப்படுத்துவதனால் ஏற்படும் மோசமான உடல்நலக் கோளாறுகள்!!!

nathan

உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால் இந்த 4 உணவுகளை உடனே சாப்பிடுங்கள்

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் ! ஆண்மையை அதிகரிக்கும் ஏலக்காய் மருத்துவம்..!!

nathan

மாஸ்க் அணியும் செய்யக்கூடிய தவறுகள் என்ன ? இந்த தவறையெல்லாம் செய்யாதீங்க

nathan

இதோ இருமலை உடனடியாக போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள்!…

sangika

சைலன்ட் மாரடைப்பு என்றால் என்ன?

nathan

வாட்ஸ்-அப் மொழியின் பின்விளைவு

nathan