30.5 C
Chennai
Sunday, Jun 30, 2024
Hot Ginger Tea
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ஆதிகாலத்தில் இருந்தே நம் உடல் சார்ந்த பல வகையான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக தேன் பயன்படுகிறது.

தேனில் நம் உடல் ஆரோக்கித்திற்கு தேவையான சத்துக்களும், விட்டமின்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

வெந்நீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

. நாம் தினமும் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால், சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விடுபட்டு தொண்டையில் புண் மற்றும் வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

. தேன் கலந்த சுடுநீரை தினமும் குடித்து வந்தால், நம் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, செரிமான மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

. தேன் கலந்த நீரில் நொதிகள், விட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடமிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.

. வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து தொடர்ந்து குடித்து வருவதால், நம் உடம்பில் ஏற்படும் அலர்ஜி போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.

. தேன் கலந்த நீரில் உள்ள சத்துக்கள் நம் உடலின் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வராமல் தடுக்கிறது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.Hot Ginger Tea

Related posts

உடல் எடையை குறைக்கும் போது தலைவலியை போக்க 5 வழிகள்

nathan

தினமும் செய்யுங்க… தசைப் பிடிப்புக்கு வீட்டிலேயே நிவாரணம் பெற வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கருப்பைக் கோளாறுகளை சரிசெய்யும் அசோக மரப்பட்டை

nathan

மலச்சிக்கல் தீர்க்கும் கடுக்காய்ப் பொடி

nathan

தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!

nathan

தீக்காயங்களுக்கு……!

nathan

உங்களுக்கு மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

எச்சரிக்கை! தும்மல் போட்டாலே கருப்பை இறங்குமா?

nathan

மாதவிடாய் பிரச்சனைகள்… உடல் எடை அதிகரிப்பும், காரணங்களும்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan