23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
3tomatopulp 07 1499426067
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா வெரிகோஸ் நரம்பை குணப்படுத்தும் பச்சை தக்காளி வைத்தியம்!

இந்த உலகத்தில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றனர். ஒருத்தர் தங்களுக்கு வயதாகுவதை நினைத்து பயப்படுகின்றனர். மற்றவர்கள் அந்த வயதாகும் நிலையை ஏற்றுக் கொள்கின்றனர்.

மக்கள் தாங்கள் வயதாவதை நினைத்து பயப்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. எங்கே நம்ம இளமை போய்விடுமோ, நம்ம எனர்ஜி போய்விடுமோ, நாம இறந்து விடுவமோ அல்லது தனிமைப்படுத்தப்பட்டு விடுவமோ, நம்மளுக்கு நிறைய நோய்கள் வந்து சேர்ந்திடுமோ என்று நிறைய காரணங்களை நினைத்து கவலை படுகின்றனர்.

ஆனால் உண்மை என்ன? நம் பிறப்பிலிருந்து இறப்பு வரை எப்போது வேண்டுமானாலும் நோய் தாக்கலாம், இது எல்லாருக்கும் பொதுவானது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

நாம இளமையாக இருக்கிறோம் ஆனால் நம்ம நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் என்ன வாகும். மைக்ரோபியல் போன்ற நோய்கள் நம்மளை தாக்கத் தான் செய்யும்.

நாம வயதாகுகிறோம் என்றால் நமது உடல் மெட்டா பாலிசத்தின் வேகம் மெதுவாகி விடும், செல்கள் எல்லாம் ரிஜெனரேட் ஆகும். உங்கள் முழு உடலும் வயதாகுவதற்கான மாற்றங்களை ஏற்படுத்தும் அல்லவா.

டயாபெட்டீஸ், ஹைபர் டென்ஷன், இதய நோய்கள், மூட்டு வலி,ஆர்த்ரிடிஸ் போன்றவை பொதுவாக வயதான பிறகு வருகின்ற பிரச்சினைகள் ஆகும். ஆனால் இப்பொழுது 50 வயதானவர்களை வெரிகோஸ் வெயின் தாக்குகிறது. இது பாலினத்தை பார்த்து வருவதில்லை. இருப்பினும் பெண்களை அதிகமாக தாக்குகிறது என்கின்றனர்.

வெரிகோஸ் வெயின் என்பது நமது உடலில் உள்ள இரத்தம் வேற பகுதிக்கு செல்ல முடியாமல் இரத்த நரம்புகளிலே தங்குவதால் நரம்புகள் புடைத்து மற்றும் விரிவடைவதாகும். இதை குணப்படுத்துவதற்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும். இந்த வெரிகோஸ் வெயின் வருவதற்கு முக்கிய காரணம் அதிகமான உடல் எடையால் இரத்த அழுத்தம் அதிகமாவது ஆகும் இதுவரைக்கும் இதை குணப்படுத்தவே முடியவில்லை .

அறுவைச் சிகிச்சை செய்து அதை சரி செய்ய மட்டுமே செய்கின்றனர். ஆனால் இந்த வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குறைக்க இங்கே ஒரு இயற்கை முறை கொடுக்கப்பட்டுள்ளது . இது கண்டிப்பாக உங்களுக்கு நல்ல பலனை தரும். சரி வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் பச்சை தக்காளி – 2 மீடியம் ஸ்சைஸ் தேன் – 1டேபிள் ஸ்பூன்

செய்முறை பச்சை தக்காளி பழங்களை எடுத்து அதனுடன் தேன் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். நன்றாக தண்ணீர் பதம் வரும் வரை அரைக்கவும் . இந்த ஜூஸை தினமும் காலையில் காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டும். மேலும் இந்த தக்காளி பழங்களை தோலை உரித்து விட்டு வெரிகோஸ் வெயின் ஏற்பட்ட இடத்தில் தேய்க்கவும் செய்யலாம்.

இந்த இயற்கை முறை வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்துகிறது என்பது நீருபிக்கப்பட்டுள்ளது. இதை தினமும் சரியான அளவில் எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இதனுடன் சேர்த்து உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். உடற்பயிற்சியுடன் இந்த முறையை பயன்படுத்தினால் விரைவில் வெரிகோஸ் வெயின் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்

வெரிகோஸ் வெயின் சிகிச்சை எடுக்கும் போது உங்கள் மருத்துவரிடம் டயாபெட்டீஸ், ஹைபர் டென்ஷன் இருக்கா என்பதை அறிந்து கொள்வது நல்லது. பச்சை தக்காளியில் உள்ள அல்கலாய்டு சோலனின் இயற்கையாகவே நமது உடலில் இரத்தம் கட்டுதலை குறைக்கிறது. இது உங்கள் நரம்புகளின் சுவர்களை வலிமையாக்குகிறது. எனவே எளிதாக வெரிகோஸ் வெயினை குணப்படுத்துகிறது.
3tomatopulp 07 1499426067

Related posts

பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தமும்… அதனை தடுக்கும் வழிமுறைகளும்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குதிக்கால் வலியை போக்கும் மருத்துவ குறிப்புகள்

nathan

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இதோ சில வழிகள்! !

nathan

இந்த உணவு முறையை பின்பற்றினால் மாரடைப்பு வரவே வராது!

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கர்ப்ப கால நீரிழிவு பற்றி உண்மைகள்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்

nathan

சிறுநீரக கற்களை நீக்க அல்லது வெளியேற்ற, சரிசெய்ய நவீன சிகிச்சைகள்…

sangika

சோம்பு நீரின் மருத்துவ குணங்கள்

nathan