25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ITihUw0
மருத்துவ குறிப்பு

உங்க இரத்த அழுத்த பிரச்சனைக்கு தீர்வு தரும் நாட்டு வைத்தியங்கள்

உடலில் இதயம் மிகவும் முக்கியமான உறுப்பு. இத்தகைய உறுப்பு நம் உடலினுள் மிகவும் பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறது. ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்களாலும், மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும் இதய பிரச்சனைகள் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனைகளால் ஏராளமானோர் கஷ்டப்படுகின்றனர்.

முக்கியமாக நாம் உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள், இதய நாளங்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி இதயத்திற்கு சரியாக இரத்தம் செல்லாமல் தடுத்து, இதய பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

ஒருவரது உடலில் இதயத்திற்கு சரியாக இரத்தம் செல்லவில்லையெனில், ஒட்டுமொத்த உடலுக்கும் வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல், உடலுறுப்புக்களின் இயக்கமும் பாதிக்கப்படும். எனவே ஒருவருக்கு இதய ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது.

அதற்கு உடலில் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். ஒருவேளை இவற்றில் பிரச்சனைகள் இருந்தால், அதற்கு மருந்து மாத்திரைகளின் மூலம் தீர்வு காண்பதற்கு பதிலாக, நம் நாட்டு வைத்தியங்களின் மூலம் தீர்வு காண நினைத்தால், பிரச்சனைகள் நீங்குவதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

சரி, இப்போது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கும் சில நாட்டு வைத்தியங்களைக் காண்போம்.

மார்பு முடக்குவலிக்கான சில வைத்தியங்கள்!
மார்பு முடக்குவலி என்பது கரோனரி இதய நோயால் மார்பு பகுதிகளில் வலி அல்லது மிகுந்த அசௌகரியத்தை உணரும் நிலையாகும். இந்த பிரச்சனை இதய தசைகளுக்கு போதுமான இரத்தம் கிடைக்காத போது உண்டாகும். பெரும்பாலும் இதயத்திற்கு செல்லும் தமனிகள் குறுகியோ அல்லது அடைப்பு ஏற்பட்டோ இருந்தாலும் ஏற்படும். இப்போது இதற்கான சில நாட்டு வைத்திய முறைகளைக் காண்போம்.

ஒரு சிறிய பௌலில் 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெயை மார்பு பகுதியில் காலையிலும், மாலையிலும் நன்கு மென்மையாக தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், மார்பு வலியில் இருந்து விடுபடலாம்.

மற்றொரு அற்புதமான வழி, 1 1/2 கப் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 1 டீஸ்பூன் வெந்தய விதைகளைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் அதில் 2 டீஸ்பூன் தேனை சேர்த்து கலந்து, தினமும் இரண்டு வேளை இந்த பானத்தைக் குடித்து வர வேண்டும்.

குறைவான இரத்த அழுத்தம்
சிலருக்கு குறைவான இரத்த அழுத்த பிரச்சனை இருக்கும். இப்பிரச்சனை இருப்பவர்கள், தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை அடிக்கடி சந்திப்பார்கள். இப்பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகளின் மூலம் மட்டுமின்றி, சில நாட்டு வைத்தியங்களின் மூலமும் தீர்வு காண முடியும். கீழே அந்த வைத்தியங்களைக் காண்போம்.

தினமும் காலையில் துளசி இலையை அரைத்து சாறு எடுத்து, அதில் தேன் கலந்து குடியுங்கள். இந்த சாற்றினை குறைவான இரத்த அழுத்தம் கொண்டவர்கள் தினமும் குடித்து வந்தால், இரத்த அழுத்தம் சீராகிவிடும்.

#2
ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி, அதில் 3/4 கப் அதிமதுர வேரைத் தட்டிப் போட்டு 2 மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின் அதை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, 6 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் அந்நீரை குளிக்கும் நீருடன் சேர்த்து கலந்து குளிக்க வேண்டும்.

#3
இரத்த அழுத்தம் குறைவாக உள்ளதா? எளிய வழியில் குறைவான இரத்த அழுத்தத்தை சரிசெய்ய வேண்டுமா? அப்படியானால் தினமும் சிறிது உலர்ந்த திராட்சையை இரண்டு வேளை சாப்பிடுங்கள். இதனால் இரத்த அழுத்தத்தை சரியாக பராமரிக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தானது. இது தான் ஆபத்தான இதய நோய்க்கு வழிவகுக்கிறது. தற்போது உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் ஏராளமானோர் கஷ்டப்படுகின்றனர். இதற்காக பலர் தினமும் மாத்திரைகளையும் எடுத்து வருகிறார்கள். ஆனால் இந்த பிரச்சனைக்கு நாம் நாட்டு வைத்தியங்களின் மூலமே தீர்வு காண முடியும்.

#1
ஒரு பௌலில் 1 டீஸ்பூன் இஞ்சி சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வர, உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

#2
முக்கியமாக உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், அன்றாட உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். குறைந்தது 2 லிட்டர் நீரைத் தவறாமல் குடிக்க வேண்டியது அவசியம்.

#3
உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் தினமும் சாத்துக்குடி, ஆரஞ்சு, பீச், ப்ளம்ஸ் போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. முக்கியமாக தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், அது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

#4
உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வெள்ளை சாதத்தை தவிர்த்து, கைக்குத்தல் அரிசி சாதத்தை சாப்பிடுவது நல்லது. இந்த அரிசியில் சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவு. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் உப்பு இல்லாத டயட்டை மேற்கொள்ளும் போது இந்த கைக்குத்தல் அரிசி சாதத்தை சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

#5
உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கொத்தமல்லி ஜூஸை தினமும் மூன்று வேளை குடித்து வர வேண்டும். இப்படி குறைந்தது 10-12 நாட்கள் ஒருவர் தொடர்ந்து குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் நன்கு குறைந்து இருப்பதைக் காணலாம்.

#6
அக்காலத்தில் எல்லாம் காலையில் எழுந்ததும் அருகம்புல் ஜூஸ் குடிக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டிருந்தார்கள். இத்தகைய அருகம்புல் ஜூஸை ஒருவர் தினமும் காலையில் 1/2 கப் குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

#7
ஒரு கையளவு கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு, 1 டம்ளர் நீர் ஊற்றி அரைத்து வடிகட்டி, அத்துடன் 1 எலுமிச்சையைப் பிழிந்து தினமும் 3 முறை என 1-2 மாதங்கள் குடித்து வர வேண்டும். அதன்பின் ஒருவேளை, அதுவும் காலையில் வெறும் வயிற்றில் மட்டும் குடித்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனை சரியாகும்.

உயர் கொலஸ்ட்ரால்
தற்போது பலர் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். இதனால் உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவு குறைந்து, கெட்ட கொழுப்புக்களின் அளவு அதிகரித்து, அதுவே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை வந்துவிட்டால், இதய பிரச்சனை விரைவில் வந்துவிடும். இத்தகைய உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு சில நாட்டு வைத்தியங்கள் தீர்வளிக்கும்.

#1
சூரியகாந்தி விதைகளில் உள்ள லினோலிக் அமிலம், தமனிகளின் சுவர்களின் தேங்கிய கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். எனவே சமையலில் சூரியகாந்தி விதை எண்ணெயை பயன்படுத்துங்கள். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

#2
உயர் கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, 1 கப் மோரில் கலந்து, அதில் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் தவறாமல் குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

#3
ஒரு கப் நீரில் 2 டீஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடியுங்கள். இப்படி உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், காபி, டீக்கு பதிலாக, மல்லி டீயைக் குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தடுக்கலாம்.ITihUw0

Related posts

தெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்!

nathan

தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு கீரை மட்டும் போதும்!…

sangika

டான்சிலுக்கு ஆபரேஷன் அவசியமா?

nathan

கருச்சிதைவு அபாயத்தை எது அதிகரிக்கிறது

nathan

விவாகரத்தை தடுக்க முடியுமா?

nathan

உங்க கால் விரல் சொத்தையா? குணப்படுத்த சூப்பர் டிப்ஸ்..

nathan

திருமணத்திற்கு தயாரா?அப்ப உடனே இத படிங்க…

nathan

பொருளாதார விஷயத்தில் உதவ வேண்டியது பிள்ளைகளின் கடமை

nathan

தெரிஞ்சிக்கங்க…அதிகமாக மவுத்வாஷை பயன்படுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா?

nathan