28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
cover 18 1503034571
எடை குறைய

உங்களுக்கு தெரியுமா இதை ஒன்றை விழுங்கினால் 15 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம்!

குளோபல் வார்மிங் பிரச்சனைக்கு அடுத்து, நம் உலகில் பெரிய பிரச்சனையாக திகழ்ந்து வருவது இந்த உடல் எடை பிரச்சனை தான். ஆண், பெண் பேதமின்றி, நாடுகளின் எல்லைகளை கடந்து பரவலாக காணப்படும் இந்த பிரச்சனையால் பல உடல்நல கோளாறுகள், அசௌகரியங்கள் உண்டாகின்றன.

இதற்கான தீர்வுகள் என பல டயட்டுகள், பயிற்சிகள், சிறப்பு முகாம்கள் என எத்தனை வழிகள் கண்டுபிடித்தாலும், உடல் எடை மட்டும் குறைந்தபாடில்லை. இந்த வகையில் புதியதாக தலைத்தூக்கி இருக்கும் சிகிச்சை முறை கேஸ்ட்ரிக் பலூன் சிகிச்சை. கடந்த ஓரிரு ஆண்டுகளால் இதை பலரும் பின்பற்றி வருகிறார்கள். இதன் மூலம் ஒரு நபர் 15 – 30 கிலோ உடல் எடை வரை குறைக்கலாம்.

கேஸ்ட்ரிக் பலூன் என்றால் என்ன? கேஸ்ட்ரிக் பலூன் என்பது மிருதுவான சிலிகான் பலூன் ஆகும். இதை வயிற்றின் உள்ளே செலுத்துவார்கள். செலுத்திய பிறகு காற்றை நிரப்பி சற்று பெரிதாக்குவார்கள். இதனால் வயிறு எப்போதும் நிரம்பியிருப்பது போன்ற உணர்வு இருக்கும்.

செயல்முறை! வாய் வழியாக தான் இந்த கேஸ்ட்ரிக் பலூன் செலுத்தப்படுகிறது. என்டோஸ்கோப் முறையில் இதை செயல்படுத்துகிறார்கள். இதை செய்யும் போது அசௌகரியங்கள் ஏற்படும். சிறியளவி வலி இருக்கும். இந்த செயற்முறை 15 நிமிடங்களில் முடிக்கப்பட்டுவிடும். ஒரே நாளில் வீடு திரும்பி விடலாம். அதிகபட்சம் ஆறு மாதங்களில் இந்த பலூனை அகற்றி விடுவார்கள். இந்த முறையால் சராசரியாக ஒரு நபரின் உடல் எடையில் 20 – 30% வரை உடல் எடை குறைக்கக் முடியும் என கூறப்படுகிறது. அதாவது நூறு கிலோ எடை கொண்டிருக்கும் ஒரு நபரின் உடல் எடையை 70 – 80 கிலோ வரை குறைக்க செய்யலாம். இது ஒவ்வொரு நபரிடமும் வேறுப்பட்ட பலனையும் அளிக்கலாம்.

புதிய டெக்னிக்! கேஸ்ட்ரிக் பலூனின் புதிய டெக்னிக் தான் கேஸ்ட்ரிக் பலூன் பில் காப்சூல். இதை விழுங்க செய்து, ஒரு சன்னமான டியூப் மூலமாக அதை வயிற்றில் வைத்து, பிறகு காற்றை நிரப்புகிறார்கள். பிறகு இந்த டியூப் அகற்றப்படும். அதிகபட்சம் மூன்று பலூன்கள் வரை வைக்கப்படலாம். இதை 12 வாரங்களில் அகற்றிவிடுவார்கள்

யாருக்கு சரியானது? 27 – 35 பி.எம்.ஐ அளவு கொண்டுள்ள யார் வேண்டுமானாலும் இந்த கேஸ்ட்ரிக் பலூன் சிகிச்சை எடுத்துக் கொண்டு உடல் எடையை குறைக்கலாம். இது அறுவை சிகிச்சை போன்றதல்ல என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த சிகிச்சையின் மூலம் அடையும் பலன்கள் இரண்டு, ஒன்று குறைந்த நேரத்தில் செய்து முடித்து விடலாம். மற்றொன்று இது மிகவும் விலை குறைந்த சிகிச்சை ஆகும்.

ஆபத்து? பெரும்பாலும் யாரும் இதன் மூலம் பாதிப்படைந்தது இல்லை எனிலும், சிலருக்கு பலூன் அகற்றப்படும் போது இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. கேஸ்ட்ரிக் பலூன் அகற்றிய பிறகு ஒருசில நாட்கள் வயிறு மந்தமாக இருப்பது போல ஒரு உணர்வு இருக்கும். எதுவாக இருந்தாலும் தகுந்த மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு மேற்கொள்வது தான் சிறந்தது.

தயாராவது எப்படி? இந்த கேஸ்ட்ரிக் பலூன் சிகிச்சை மேற்கொள்ளும் முன்னரே மருத்துவர்கள் கூறும் டயட்டை பின்பற்ற வேண்டும். இந்த சிகிச்சை மேற்கொள்ளும் முன்னர் 12 மணிநேரம் எதையும் சாப்பிட்டிருக்க கூடாது., செய்த பிறகு 6 மணி நேரம் எதையும் குடிக்க கூடாது. சிகிச்சை செய்த பிறகு மருத்துவர்கள் கூறும் டயட்டை சரியாக பின்பற்ற வேண்டும். சில பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதை சரியாக செய்து வந்தாலே உடல் எடையை சரியாக குறைத்து விட முடியும்.

நீக்கம்! இந்த கேஸ்ட்ரிக் பலூனை வாய் வழியாக தான் வெளிய எடுக்கப்படும். இதை எடுத்த பிறகு மீண்டும் பழையப்படி கண்டதை சாப்பிட துவங்கினால், உடல் எடை மீண்டும் அதிகரிக்க தான் செய்யும். எனவே, இந்த சிகிச்சை முடிந்த பிறகும் கூட ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற வேண்டியது அவசியம்.

cover 18 1503034571

Related posts

உடல்பருமன் குறைக்க உதவும் சுரைக்காய் ஜூஸ், சீரக டீ, திரிபலா பொடி!

nathan

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்

nathan

உடல் எடையை குறைக்கும் சீரகம்

nathan

இவ்வளவு எளிதாக எடையைக் குறைக்க முடியும்…..

sangika

உடல் எடையை குறைக்க இதை குடிங்க!….

sangika

கொழுப்பை குறைப்பது எப்படி?

nathan

உடல் எடை குறைத்து, ரத்த‍ அழுத்த‍தை சீராக்கும் பால் கலக்காத டீ (பிளாக் டீ)

nathan

இதை சாப்பிட்டு தொபையைப்க் குறைக்கலாம்!…

sangika

அழகை பதிக்காமல் உடல் எடையை குறைப்பது எப்படி

nathan