23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
08 1504861860 3
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ் கொழுப்பு எனர்ஜியாக மாறனுமா? அப்ப இத படிங்க!

உடல் ஆரோக்கியத்திற்கு என்று சொல்லி சொல்லியே பல உணவுகளை நாம் ஒதுக்கி விடுகிறோம். உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும் அதனை தவிர்த்து வருகிறோம். உடல் நலனில் அக்கறை கொண்டிருப்பவர்களை பயமுறுத்தும் ஒரு விஷயம் கொழுப்பு. இதில் கொழுப்பு அதிகம் என்று சொன்னாலே வாழ்நாள் முழுக்க அந்த உணவுப்பக்கமே செல்லாத அளவிற்கு கொழுப்பின் மீது அதீத பயம் உண்டு நமக்கு. பால் பொருட்களில் சுவையானதும் அதே போல வாசமும் கொண்டது நெய். வெண்ணெயை உருக்கி செய்யப்படும் நெய் சாப்பிடக்கூடாது அது கொழுப்பு என்று ஒரங்கட்டப்படுகிறது.அப்படி ஓரங்கட்டத் தேவையில்லை, நெய் உங்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது நெய் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நெய் உருக்கும் முறை : வாணலியில் வெண்ணையைப் போட்டு குறைவான தீயில் வைக்கவும்.வெண்ணை உருகி பிரவுன் நிற நுரை மேலே வரும். வெண்ணை காயும் போது அதை கரண்டி அல்லது ஸ்பூன் கொண்டு கிளறக் கூடாது.நுரையை வெளியில் எடுக்கவும் கூடாது.   Loading ad நுரை கொஞ்சம் கொஞ்சமாக கெட்டிப் பட்டு வாணலியின் அடியில் போய் தங்கிவிடும். வெண்ணெய் கொஞ்ச கொஞ்சமாக நிறமாறி கொதிக்க ஆரம்பிக்கும். வெண்ணெய் முழுவதும் உடைந்து சின்ன சின்ன குமிழ்களாக வந்ததும் அடுப்பை அணைத்துவிடலாம். அதனை நன்றாக ஆறவைத்து பயன்படுத்தலாம்.

நன்மைகள் : சுவை மிக்க நெய் கண்களை ஒளிபெறச் செய்கிறது.கண் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து நெய் சாப்பிடலாம். உடலுக்கு வலிவையும் பொலிவையும் தந்து நோய் பலவற்றிலிருந்து காக்க வல்லது. நினைவாற்றலையும், வாழ்நாளையும் உயர்த்தவல்லது.இன்றியமையாத கொழுப்பு அமிலமான லினோலிக் அமிலம் நெய்யில் 4 _ 5% வரை காணப்படுகிறது. இது ஒழுங்கான உடல் வளர்ச்சிக்குத் துணை புரிகிறது.உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது. நெய்யில் இருக்கும் விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்.

யாகத்தில் : பசுநெய்யை ஹோமத்தில் விடும் போது, அதனால், காற்றில் உள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த அரிசியை ஹோமத்தில் போடுவதால், அதில் இருந்து அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்கள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு ஏற்படும் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடல் தொடர்பான நோய்கள் என பல நோய்களை தீர்க்கும் .

கொலஸ்ட்ரால்: கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம். வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும். நெய் சாப்பிட்டவுடன் கொழுப்பாக உடலில் தங்குவதில்லை மாறாக எனர்ஜியாக எரிக்கப்படுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.

நல்ல கொழுப்பு : நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள்.உடலுக்கு ஒரு சில கொழுப்புகளானது மிகவும் அவசியமானது. ஏனெனில் அந்த கொழுப்புகள் தான் செரிமான மண்டலத்தில் இருந்து வெளிவரும் ஆசிட், குடல் வாலை பாதிக்காமல் தடுக்கிறது.

கருகாது : சமையலில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை விட நெய் மிகவும் சிறந்தது. ஏனெனில் அந்த எண்ணெய்கள் அதிக வெப்பத்தில் கருகிவிடும். ஆனால் நெய்யானது அவ்வாறு இல்லை, அது எவ்வளவு வெப்பத்திலும் வாசனையுடன் இருக்குமே தவிர, கருகாமல் இருக்கும்.08 1504861860 3

Related posts

பல்வலிக்கு உடனடி நிவாரணம்: இதை செய்திடுங்கள்!

nathan

தைராய்டு ஆபத்தை அதிகரிக்கும் உங்களின் ஐந்து உடல்நல கோளாறுகள்!

nathan

இரத்த குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பை அகற்ற காலையில் இந்த ஜூஸ் குடிங்க! சூப்பர் டிப்ஸ்…..

nathan

இதோ எளிய நிவாரணம்! சிறுநீரக தொற்று பாதிப்பா? இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் உடலில் ஆக்ஸிஜன் மிகக் குறைவு என்று அர்த்தமாம்.

nathan

முதுகுவலியால் அவஸ்தை படுகின்றீர்களா?… உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

எண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் அதிகம் பகிருங்கள்

nathan

குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் இதெல்லாம் இருக்கலாமே

nathan

ஆயுர்வேத விதிப்படி உங்க குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan