25 C
Chennai
Wednesday, Nov 13, 2024
1 16 1516088465
மருத்துவ குறிப்பு

உடைந்த எலும்பை விரைவில் இணைக்க இப்படி ஒரு மூலிகை இருக்கு தெரியுமா ?இத படிங்க!

நாம் வசிக்கும் இடங்களில் நம்மைச் சுற்றி பரவலாக நிறைய மூலிகைச்செடிகள், தானே வளர்ந்திருந்தாலும், சில பயன்தரும் மூலிகைகள் அவ்வாறு இல்லாமல், நாம் அவற்றின் விதைகளையோ அல்லது செடியின் கன்றுகளையோ வாங்கிவந்து, வீடுகளில், தோட்டங்களில் நட்டு வளர்க்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு செடிதான், அருகாம்பச்சை என்றும் சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி.

மேலைநாடுகளில் இருந்து, நமது தேசத்துக்கு வந்த செடிவகைகளில், இந்த மூலிகைச் செடியும் ஒன்று. அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள இந்தச்செடி, மூன்றடி உயரம் வரை மட்டுமே வளரும், சிறு செடியினமாகும். இலைகள் முருங்கை இலைகள் போல, சிறிதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். மஞ்சள் நிறத்தில் சிறிய பூக்கள் இருக்கும்.

அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் வளரும் தன்மையுள்ள இந்தச்செடிகள், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையவை. இதன் இலைகள், வேர்கள், மற்றும் காய்கள் மருத்துவப்பலன்கள் மிக்கவை.

வீடுகளில், பூங்காக்களில் பசுமைப் புத்துணர்வு அளிக்கும், அருவதா செடிகள்…

அருவதாவை, வீடுகளில், வணிக நிறுவனங்களில் அழகுக்காக வளர்க்கிறார்கள். இந்தச் செடி இருக்கும் இடத்தில், நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற வீட்டு விலங்குகள் நெருங்காது என்பதுடன் ஈக்களும் அணுகாமல் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக்கும் என்று அறியப்படுகிறது.

முதுகுத் தண்டு பாதிப்பை குணமாக்கும் :
முதுகு தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளை குணமாக்கும். உடைந்த எலும்புகளை விரைவில் சேர வைத்து, எலும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றல் மிக்கவை அருவதா மூலிகையின் இலைகள். சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் எரிச்சலைப் போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும்.

கருப்பை பாதிப்புகளை குணப்படுத்தும்:
சதாப்பு இலைகள் எனும் அருவதாவின் இலைகள், மூட்டு வலிகளை குணப்படுத்தும் தன்மைமிக்கது. மன அழுத்த பாதிப்புகளால் ஏற்படும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி, இரத்தத்தை தூய்மைப்படுத்தி, வயிற்றுப் புழுக்களை அழிக்கும். இதன் எண்ணை, பெண்களின் கருப்பை பாதிப்புகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

சுளுக்கை சரி செய்யும் :
சுளுக்கு, தசைப்பிடிப்பு மற்றும் எலும்பு முறிவுகளை சரிசெய்யும், உடல் வலிகள் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு தீர்வாக அமைகிறது. மூல வியாதிகளை சரிசெய்யும், உடல் அணுக்களை பாதிக்கும் புற்று வியாதிகளை சரிசெய்யும் இயல்புடையது, அருவதா மூலிகை. இளம்பிள்ளைகளின் செரிமானமின்மை பாதிப்புகளுக்கு மருந்தாகிறது. கண் வியாதிகளைப் போக்கும்.

சுவாச பாதிப்புகளை குணப்படுத்தும் :
சதாப்பு இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப்போல கடைந்து, உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதன் மூலம், மூட்டு வலிகள், சிறுநீர்ப்பை அடைப்புகள், சுவாசத்தில் ஏற்படும் பாதிப்புகளான மூச்சுத்திணறல் கோளாறுகளை சரிசெய்து, இதயத்தைக் காக்கும்.

உடல் சூட்டைத் தணிக்கும் :
சதாப்பு இலைகளை நிழலில் உலர்த்தி, இடித்துப் பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிமதுரப்பொடி, சதகுப்பை, கருஞ்சீரகம் மற்றும் இலவங்கப்பட்டை இவற்றைப் பொடியாக்கி, அனைத்தையும் ஒன்று கலந்து, அதில் சிறிதளவு எடுத்துக் கொண்டு அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, உடலில் உள்ள சூடு தணியும்.

மன அழுத்த பாதிப்புகளை சீராக்கும் :
சதாப்பு இலைகளை சிறிது எடுத்து, நன்கு மையாக அரைத்து, அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, மன அழுத்த பாதிப்புகள் விலகி, மனநிலை இயல்பாகும். சதாப்பு இலைச்சாற்றை, தேனில் குழைத்து சாப்பிட்டும் வரலாம்.

குழந்தைகளின் உடல் நலம் காக்கும் மருந்து;
சதாப்பு இலையை நன்கு அரைத்து அந்த விழுதை, மிளகுத்தூள் சேர்த்து, சிறிதளவு எடுத்து, தாய்ப்பாலில் கலந்து, குழந்தைகளுக்கு சங்கில் இட்டு வாயில் புகட்டி வர, குழந்தைகளின் நெஞ்சு சளி தீரும்.

ஜுரம், இருமல் போக்கும் சதாப்பு இலை :
சதாப்பு இலைகளுடன் சிறுநாகப்பூ விதைகளைச் சேர்த்து அரைத்து, அதில் சிறிதளவு எடுத்து தினமும் சாப்பிட்டு வர, விட்டுவிட்டு வரும் ஜுரம் மற்றும் இருமல் பாதிப்புகள் விலகும்.

அதிமதுரம், பேரரத்தை,வசம்பு மற்றும் சதாப்பிலை இவற்றை சேர்த்து, தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை வடித்து தினமும் பருகி வர, ஜுரம் மற்றும் உடல் வலிகள் தீரும்.

பக்கவாத பாதிப்புகளை குணமாக்கும் :
பாரிச வாயு எனும் பக்கவாதத்தின் பாதிப்பால் உடல் நலமின்றி, சிலர் வீடுகளிலேயே இருப்பார்கள். இந்த பாதிப்புகளுக்கு நிவாரணமாக, சதாப்பிலை திகழும்.

சதாப்பிலைகளை நன்கு அரைத்து, உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவி வர, சிறிது சிறிதாக பாதிப்புகள் விலகி, செயல்பட ஆரம்பிக்கும். வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் குணமாகும் தன்மை மிக்கது.

சதாப்பிலை குடிநீர் தரும் அரிய நன்மைகள் :
சதாப்பிலைகளை சேகரித்து, அவற்றை சிறிது நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீர் சுண்டி வந்ததும், ஆற வைத்து, தினமும் இரு வேளை அல்லது மூன்று வேளை பருகி வர, மூட்டு வலி சரியாகும். குடல் புழுக்கள் அழியும். உடல் இரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்புகள் நீங்கி, உடல் உறுப்புகளின் இயக்கம் சீராகும்.சதாப்பிலை குடிநீர், கீழ்க்கண்ட வியாதிகளின் பாதிப்பையும் போக்கும்…

ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் :
முகம் மற்றும் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். தொண்டை வலி மற்றும் நாக்கின் சுவையின்மை கோளாறை சரி செய்யும்.ஞாபக ஆற்றலை அதிகரிக்கும், மன அழுத்தம், மனச் சோர்வை நீக்கி, மனதை உற்சாகமாக செயல்பட வைக்கும்.

‘சதாப்பிலை மூலிகை சாம்பிராணி :
கடுமையான ஆஸ்துமா, சளி இருமல் பாதிப்பு உள்ளவர்கள் மூச்சு விடுவதில், சுவாசத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு, இரவில் உறங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவார்கள். அவர்களின் இந்த பாதிப்புகள் நீங்கி, சுவாசம் சீராகி, உடல் நலம் மேம்பட்டு நல்ல உறக்கத்தை அடைய, சதாப்பிலை உதவிசெய்யும்.

இலைகளை நன்கு உலர்த்தி, தூளாக்கி வைத்துக்கொண்டு, தூபக்காலில் உலர்ந்த தேங்காய் மூடிகளை வைத்து, தணலை உண்டாக்கி, அதில் உலர்ந்த சதாப்பிலை தூளையோ அல்லது உலர்ந்த இலைகளையோ இட, எழும் புகையை, தினமும் ஆஸ்துமா மற்றும் இருமல் பாதிப்புள்ளவர்கள் நன்கு சுவாசிக்க, சளியின் கடுமை படிப்படியாகக் குறையும். நல்ல உறக்கமும் வரும். இந்தப் புகையை, காக்கா வலிப்பு உள்ளவர்களும் சுவாசிக்க, பாதிப்புகள் விலகும்.

* தகவலை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தயவுசெய்து அதிகமாகப் பகிருங்கள்…1 16 1516088465

Related posts

காசநோய் பிரச்னைக்கு புதிய தீர்வை கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்!

nathan

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது ஏன்?

nathan

தெரிஞ்சிக்கங்க…இரட்டையர்களுக்கு வெவ்வேறு தந்தை கூட இருக்கலாம் என தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரியுமா?

nathan

கிட்னி பிரச்சினை வராமல் இருக்க வேண்டுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் பலமுறை சிசேரியன் செய்தால் உடலில் ஏற்படும் விளைவுகள்

nathan

மூளை, நுரையீரல், இதயம், சருமம்… நலம் காக்கும் எலுமிச்சைத் தண்ணீர்!

nathan

இளம் பெண்களை வாட்டும் வாழ்வியல் பிரச்சினைகள்

nathan

தரமான சானிட்டரி பேட் பயன்படுத்துங்கள்

nathan