பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
பெரும்பாலானவர்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட ‘பிரட்” டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.
இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது. பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடன் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.
ஒரு சிலருக்கு தர்பூசணி பழம் எடுக்கும்போதெல்லாம் ஏப்பம் வரும், இன்னும் சிலருக்கு துரியன் பழம் சாப்பிட்டால் வயிறு ஊதிக் கொள்ளும் என இன்னும் பல … உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது.
உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது.
நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவையெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால் தடுக்கப்படும்.
பழச்சாறு அருந்தும் போது, புதிதான பழச்சாறுகளையே அருந்த வேண்டும். (டின், பாக்கெட் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது)
சூடாக்கப்பட்ட பழச்சாறுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணக்கூடாது. ஏனென்றால் அவற்றிலிருந்து எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது. சமைத்த பழங்களில் அதிலுள்ள வைட்டமின்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன.
பழச்சாறு குடிக்கும்போது வேகமாக குடிக்காமல், மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்த வேண்டும். அப்போது தான் பழச்சாறு விழுங்குவதற்கு முன், வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பப்படும்.
உடல் உறுப்புக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும் வாரத்தில் 3 நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.