அழகு குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா திருமணத்தின் போது மருதாணி வைப்பதில் இவ்வளவு இரகசியம் உள்ளதா?

திருமணத்தின் போது நடத்தப்படும் முக்கியமான சடங்குகளில் மெஹந்தி எனும் மருதாணி வைக்கும் முறை பிரபலமான ஒரு விழாவாகும்.

அப்படி உள்ள இந்த மெஹந்தி விழாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் ரகசியம் என்னவென்பது உங்களுக்கு தெரியுமா?

மெஹந்தி விழாவின் ரகசியம் என்ன?

மருதாணி வைக்கும் மணமகளின் கையில் எவ்வளவு அதிகமாக சிவக்கிறதோ, அது அவளின் வருங்கால கணவர் மீதுள்ள அன்பைக் குறிக்கிறது.

அதுவே மணமகளின் கையில் மருதாணி நீண்ட நாட்கள் அழியாமல் இருந்தால், அது அவளது மாமியார் அவளை பாராட்டுவார் என்பதைக் குறிக்கிறது.

மணமகளின் கையில் உள்ள மெஹந்தியின் வடிவமைப்புகள் அனைத்துமே வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களின் அடையாளமாக வரையப்படுகிறது.

அதாவது, மலர்கள், மொட்டுகள், பட்டாம்பூச்சிகள், பறவைகள், மணமகன் மற்றும் மணமகள் போன்ற மெஹந்தியின் வடிவமைப்புகள் அனைத்துமே பொதுவானவை.

மணமகளின் உள்ளங்கையின் பின்புறம் போடும் வடிவமைப்பு அவளது வாழ்க்கையின் கவசம் மற்றும் பாதுகாப்பையும், உள்ளங்கையில் போடுவது பிரசாதத்தையும், மலர்கள், சந்தோஷம் மற்றும் இதயத்தின் அறிகுறியையும், மொட்டுகள் வாழ்க்கையின் புதிய ஆரம்பத்தையும் குறிக்கிறது.

திருமணத்தின் போது மருதாணி போடுவது ஏன்?

மருதாணி ஒரு சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகை என்பதால், இது அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற ஒருவித பயமான உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

எனவே இதனால் திருமணத்தின் போது மணமகளின் கையில் மருதாணி போடுவதால், அவளுக்கு திருமணத்தினால் ஏற்படும் பதட்டத்தை குறைத்து, உடல் மற்றும் நரம்பின் நுனிகளை குளிர்விக்க உதவுகிறது.

அதுவே மணமகனுக்கு போடுவது, அந்த மருதாணியின் நறுமணம் ஒரு பாலியல் உணர்வை தூண்டும் என்பதால், திருமணத்தின் போது, அவர்களின் வாழ்க்கையை இனிதே தொடங்குவதற்கு பயன்படும் வகையில் மணமகனுக்கு மருதாணி போடுவார்கள்.

கீழே உள்ள காணொளியில் இலகுவாக மருதாணி வைக்கும் முறை கொடுக்கப்பட்டுள்ளது. காணொளியை பார்வையிடவும்..Arabic Mehandi Designs 6

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button