27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
20180301 200510
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் இவைதான்..

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது
போன்ற உணர்வு அடிக்கடி
உங்களுக்கு ஏற்படுமாயின்,
உங்களுக்கு சர்க்கரை நோய்
இருக்கக்கூடும். சர்க்கரை
அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு,
இரத்த ஓட்டத்தில் காணப்படும்
திரவங்களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ்மொலாலிட்டியை
அதிகரிக்கும்.

20180301 200438 1024x868

இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் செய்யும். இதனாலேயே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர்
கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை
தூக்குகிறது.

அதீத தாகம்
சர்க்கரை நோயாளிக்கு எப்போதும்
அடங்காத தாகம் இருப்பது போன்ற
உணர்வு எழும்.

உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப்படுவதினால், அந்த நீர்இழப்பை ஈடுகட்ட வேண்டியது
அவசியமாகிறது. பொதுவாக, அதீத
தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர்
கழித்தல் ஆகிய இரண்டு
அவஸ்தைகளும் இருப்பின், அது
சர்க்கரை வியாதி இருப்பதற்கான
உறுதியான அறிகுறிகளாகக்
கருதப்படுகின்றன.

மங்கலான கண் பார்வை
அதிக அளவிலான குளுக்கோஸ்,
சர்க்கரை நோயாளியின் இரத்தம்
மற்றும் திசுக்களில் இருந்து
திரவத்தை வெளியேற்றுவதினால்,
அது அவரின் கண் பார்வையை மங்கச்
செய்யும்.

மேலும் இது கண்களின்
கூர்ந்து நோக்கும் திறனை
பாதிக்கும். சர்க்கரை வியாதிக்கு
சரியான மருத்துவ கவனிப்பு
இல்லாமல் போகும் பட்சத்தில், அது
கண் பார்வை குறைவை உண்டாக்கும்.
ஏன் சில சமயங்களில் கண் பார்வையை
கூட பறித்து விடும்.

எடை குறைதல்
இது டைப்-1 சர்க்கரை நோயின் மிகப்
பொதுவான அறிகுறியாகும்.

உயிரணுக்களுக்கு தேவையான
குளுக்கோஸ் கிடைக்காததனால், உடல்
தனக்கு தேவையான சக்தியை
கொழுப்பு நிறைந்த திசுக்களை
உடைத்து எடுத்துக் கொள்ள
தலைப்படும். இதனால் தான் எடை
குறைவு ஏற்படுகிறது.

20180301 200426

சோர்வு
சர்க்கரை நோயாளியின் உடல்,
சர்க்கரையை உபயோகித்து தனக்குத்
தேவைப்படும் சக்தியைப் பெற்றுக்
கொள்ள இயலாது.

இதனால்,அந்நோயாளி உடற்சோர்வு, அசதி
போன்ற தொல்லைகளுக்கு ஆளாக
நேரிடும். உயிரணுக்களால், இரத்த
ஓட்டத்தில் இருக்கக்கூடிய
குளுக்கோஸை, இன்சுலினின்
உதவியின்றி உறிஞ்ச இயலாது.
அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து
காணப்படும்.

கைகள் மரத்துப் போதல்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு
அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம்
குறிப்பிடத்தக்க அளவிலான
பாதிப்புக்கு ஆளாகும். சர்க்கரை
நோய் நீண்ட காலம் வரையில்
கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும்
பட்சத்தில், அது கைகளில் அடிக்கடி
சிலிர்ப்பது போன்ற உணர்வைக்
கொடுக்கும் அல்லது உணர்வுகள்
ஏதுமின்றி மரத்துப் போகச்
செய்யும்.

சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள்
போன்றவை மெதுவாகவே
குணமாகும்இது சர்க்கரை நோய்க்கான மிகப்பொதுவான அறிகுறிகளுள்
ஒன்றாகும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், உடலின் நோய் எதிர்ப்பு மையமானது, சீராக இயங்கும்
ஆற்றலை இழந்துவிடும்.திசுக்களில் காணப்படும் சீரற்ற நீர் சமன்பாடு, வெட்டுக்காயங்கள் மற்றும் புண்கள் குணமடைவதை தாமதப்படுத்தும்.

சரும வறட்சி
புறநரம்பு மண்டல கோளாறு
காரணமாக,வியர்வை சுரப்பியின்
சுழற்சி மற்றும் இயக்கம்
பாதிக்கப்படும்.இதன் காரணமாக
மேற்புற சருமம் வறட்சியடைந்து,
அரிப்பு ஏற்படும்.

எப்போதும் பசி இருப்பது போல்
தோன்றும் நீங்கள் எவ்வித கடின உடற்பயிற்சியை மேற்கொள்ளாத போதும் அல்லது நிறைவாக சாப்பிட்டிருந்தாலும்
கூட, எப்போதும் பசிப்பது போன்ற
உணர்வு எழுந்தால், அது சர்க்கரை
நோயின் அறிகுறி தான்.

ஏனெனில் சர்க்கரை நோய், குளுக்கோஸை
உயிரணுக்களுக்குள் செல்ல விடாமல் தடுக்கும். இந்நிலையில்நீங்கள் உண்ணும் உணவை ஆக்க சக்தியாக மாற்றும் திறன் உங்கள் உடலுக்கு இல்லாமல் போய்விடும்.
அதனால் உங்கள் உயிரணுக்கள் பட்டினி
கிடக்க வேண்டிய நிலை
உருவாகும்.

வீக்கமடைந்த ஈறுகள் கிருமிகளில் பெரும்பாலானவை வாய் மூலமாகவே உடலுக்குள் நுழைகின்றன.

சர்க்கரை நோய் இத்தகைய கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை குறைக்கும்.
இந்நோய், வலியும் வீக்கமும் மிகுந்த
ஈறுகள், தாடை எலும்புகளின்
தேய்மானம் மற்றும் நாளடைவில்
பற்சிதைவு போன்ற வாய் தொடர்பான
ஏராளமான பிரச்சனைகளை
உண்டாக்கும்.

சில சமயம் வாய்க்குள் புண்களையும் உண்டாக்கும்.சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான
கோளாறுகள் இருந்தால், அத்தகைய
பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த
பின் மேலும் பல மோசமான
பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

* தகவலை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தயவுசெய்து அதிகமாகப் பகிருங்கள்…

Related posts

பச்சிளம் குழந்தைக்கு ஒரு நாளைக்கு தாய் எத்தனை முறை, எந்த அளவு பாலூட்ட வேண்டும்?தெரிந்துகொள்வோமா?

nathan

மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளை மட்டும் சப்பிட்டு விடாதீர்கள்! ஏன் தெரியுமா?

nathan

கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக தெரிவதற்கான காரணங்கள்!!!

nathan

தூதுவளையை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்திவர கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்…

sangika

தெரிந்துகொள்வோமா? கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் சந்திக்கும் உடல் நல பாதிப்புகள் என்னென்ன?

nathan

தீராத சளித் தொல்லைக்கு நிவாரணம் !சூப்பர் டிப்ஸ்…

nathan

எப்படியெல்லாம் நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம்

nathan

தூக்கமின்மையால் ஏற்படும் நோய் பாதிப்புகள் : அவதானம்…!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan