24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
p60b 15076 16008
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முகத்தில் எண்ணெய் அதிகமாக வடிகிறபோது ஃபேஸ் பேக்குகள் மூலம் கட்டுப்படுத்தலாம்

* முகத்தில் எண்ணெய் அதிகமாக வடிகிறபோது, குழாய்த் தண்ணீரை கைகளில் பிடித்து, முகத்தில் வேகமாக அடித்துக் கழுவி, அழுத்தமாகத் துடைத்தெடுங்கள். சோப், ஃபேஸ்வாஷ் எதுவும் வேண்டாம். இப்படி வேகமாக அடிக்கிறபோது, சருமத்தில் இருக்கும் துளைகளுக்குள் நீர் சென்று, அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கிவிடும்.

p60b 15076 16008

* முகத்தை வாஷ் செய்துகொள்ளுங்கள். பிறகு, உங்கள் டோனருடன் குளிர்ச்சியான மினரல் வாட்டரைக்கலந்து, முகத்தில் ஸ்பிரே செய்துகொண்டால், அடுத்த 3 மணி நேரத்துக்கு முகத்தில் எண்ணெய் வழியாது.

* மேக்கப் கட்டாயம் போடக்கூடிய வேலையில் இருப்பவர்கள், ஐஸ் க்யூபை மெல்லிய காட்டன் கர்ச்சிப்பில் சுற்றி, முகம் முழுக்க வட்ட வட்டமாகத் தேயுங்கள். சருமத் துவாரங்கள் அடைபட்டு, எண்ணெய் வழிவது கட்டுப்படும்.

* ஈரமான டிஷ்யூவில் ஐஸ் கியூபைச் சுற்றி, முகத்தில் தேய்த்தாலும் எண்ணெய் சருமத்துக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

* வெயில் காலத்தில் முகத்துக்கு எந்த வகை பேக் போடுவதாக இருந்தாலும், கொரகொரப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து கொரகொரப்பான பேக்குகளைப் போடுவதால், முகம் முதிர்ச்சியாக, வயதானதுப் போன்ற தோற்றத்தை உண்டாக்கும்.

* வெயில் காலங்களில் பாசிப்பருப்பு மாவு, கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் முகத்தில் அப்ளை செய்வதைத் தவிர்க்கவும். இவை இரண்டுமே, வெயில் காலங்களில் பெரிதாகத் திறந்துகொண்டிருக்கிற சருமத் துவாரங்களை அடைத்து, முகத்தில் சின்னச் சின்ன கரும்புள்ளிகளை ஏற்படுத்திவிடும்.

 

* அரிசி மாவுக்கு எண்ணெய் வழிவதைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. அதனால், ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன், ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர், வெண்ணெய் இல்லாத மோர் சேர்த்துக் குழைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பசையை முகத்தில் தடவி, அரை மணி நேரம் காயவிடுங்கள். காய்ந்தப் பிறகு, தண்ணீரைத் தொட்டுத் தொட்டு முகம் முழுக்கத் தடவி, ஈரத் துணியால் துடைத்து எடுங்கள். குறைந்தது 3 மணி நேரத்துக்கு எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி முகம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

* விழாக்களுக்குச் செல்ல வேண்டும். 5 மணி நேரத்துக்கு முகத்தில் எண்ணெய் வழியக் கூடாது என்பவர்கள், சிறிதளவு சோளமாவில், விதையில்லாத தர்பூசணித் துண்டுகள் மற்றும் 5 சொட்டு லைம் ஆயில் சேர்த்து, குழைத்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு, ஐஸ் வாட்டரால் முகத்தைக் கழுவுங்கள். விழா முடியும் வரை பளிச் முகத்துடன் இருப்பீர்கள்.

 

* சம்மரில் சிலருக்கு முகத்தில் திட்டுத்திட்டாக கறுத்துவிடும். இவர்கள், ஒரு பன்னீர் ரோஜா, 5 தாமரை இதழ்கள், ஒரு டீஸ்பூன் கடலை மாவு அல்லது அரிசி மாவு இவற்றுடன் தேவையான அளவு காய்ச்சாத பால் சேர்த்து மிக்சியில் அரையுங்கள். இதை, முகத்தில் பேக்காகப் போடுங்கள். தாமரைப்பூ கிடைக்காதவர்கள் அதற்குப் பதில், லோட்டஸ் ஆயில் வாங்கிப் பயன்படுத்தலாம்.

* மஞ்சள்பூசணியுடன் தேங்காய்ப்பால், ஒரு டீஸ்பூன் ஜவ்வரிசி மாவு சேர்த்து அரைத்து, தொடர்ந்து முகத்தில் பேக்காகப் போட்டுவந்தால், முகம் பாலீஷ் போட்டதுபோல மாற ஆரம்பிக்கும். எண்ணெய் வடிவதும் கட்டுப்படும்.

Related posts

அழகு குறிப்புகள்:மேனியை மெருகூட்ட!

nathan

வெளியே அழகு… உள்ளே ஆபத்து!

nathan

சூப்பர் டிப்ஸ் உதட்டை சுற்றியுள்ள கருமையை போக்க வேண்டுமா?

nathan

முகப்பருவினால் ஏற்படும் கரும் புள்ளிகள் மற்றும் கரும்திட்டுகள், சரும வறட்சி நீங்கி சருமம் பட்டுப்போல் ஒளிர மஞ்சள் ஃபேஷ் பேக்…

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…அழகாகவும் அட்டகாசமாகவும் இருக்க ‘இத’ செஞ்சா போதுமாம்…!

nathan

பெண்களுக்கு தொந்தரவு தரும் ‘விசித்திரமான’ ஆண்கள்!…

sangika

வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே!

nathan

இவ்வாறான காரணங்களினால் தான் முகம் முதுமைத் தோற்றத்தை அடைகின்றது!…

nathan

முயன்று பாருங்கள்..முழங்கை, முழங்கால்களில் கருமை நீங்க..

nathan