பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில், தோன்றும் ஒருசில அறிகுறிகளை எப்போதும் அலட்சியப்படுத்தவே கூடாது. அந்த வகையில் சிறுநீரகம் மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் இதோ..
சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் என்ன?
சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படுவது, நுரையுள்ள சிறுநீர் வெளியேற்றம், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது அழுத்தத்தை உணர்வது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் சிறுநீரகக் கோளாறு உள்ளது என்று அர்த்தம்.
சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்தால் உடலின் நீர்மம் வெளியேற்றப்படாமல் உடலிலேயே தேங்கி இருக்கும். இதனால் உடலின் பல்வேறு இடத்தில் வீக்கத்தை உண்டாக்கும்.
ரத்தத்தில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, வாய் துர்நாற்றத்தை உணரக்கூடும். அதுவே சிறுநீரக பிரச்சனை முற்றிய நிலையில் இருந்தால், உணவின் சுவையை உணர முடியாமல், பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
Anxious young businessman working on his laptop at home[/caption]
ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும் ஹார்மோனின் அளவு குறைந்து, உடல் செல்களுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருந்தால், மிகுந்த சோர்வை உணரக் கூடும். இது அப்படியே நீடித்தால், அது சிறுநீரக நோயின் அறிகுறியாகும்.
முதுகின் மேல் பகுதியில் அதிக வலியை உணர்ந்தால் அது சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரகங்களில் நோய்த் தொற்றுகள் உள்ளது என்பதை குறிக்கிறது.
சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைத்து, மூச்சுவிடுவதில் அதிக சிரமத்தை சந்திக்க நேரிடும்.
ரத்த சோகை, தலைச்சுற்றல் மற்றும் ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் மூலம் அதிக அவஸ்தைகளை சந்திக்க நேரிட்டால் சிறுநீரக பாதிப்பு மோசமாக உள்ளது என்று அர்த்தம்.
உடலில் கழிவுகளின் தேக்கம் மற்றும் ரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, சருமத்தில் கடுமையான அரிப்பு போன்ற சருமப் பிரச்சனையை சந்திக்க நேரிட்டால், அது சிறுநீரக செயல்பாடு குறைந்துள்ளது என்பதை குறிக்கிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.