நமது உடல் 64 % நீரினால் ஆனது. மீதி கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு மற்றும் சிறிதளவு மினரல் ஆகியவற்றால் ஆனது.ஒட்டுமொத்த உடலின் இயக்கங்களும் நீர் மிக மிக அவசியமானது. ஆனால் போதிய அளவு நாம் நீர் குடிப்பதேயில்லை.நம்மில் நிறைய பேர் தாகம் வந்தால் மட்டுமே தண்ணீர் குடிப்பார்கள். நீர் வற்றிப் போய் வேலையை செல்கள் செய்ய முடியாமல் திணரும்போதே தாகம் எடுக்கும். அந்த அளவிற்கு நாம் தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மிகவும் தவறு. அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில் 2 டம்ளர் நீரை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு நீர் குடிக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் உண்டாகும் எனத் தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.
உயர் ரத்த அழுத்தம் :
ரத்தம் 92% நீர்தன்மை கொண்டது.நீர் வற்றும்போது அதன் அடர்த்தி அதிகமாகி ரத்த ஓட்டம் தடைபடும். இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கொழுப்பு :நீர் சரியாக குடிக்காத போது, கொழுப்பு செல்கள் குடல் மற்றும் இதய சுவர்களில் படிந்துவிடும். இது கொழுப்பு கல்லீரல், இதய நோய் ஆகியவற்றிற்கு காரணமாகிவிடும்.
சருமம் பாதிக்கும் :உங்கள் சருமத்தில் இறந்த செல்கள் அழுக்குகள் வெளியேற நீர் அவசியம் தேவை. இல்லையென்றால் அவை டெர்மிஸ் அடுக்குகளிலேயே தங்கி வயதான தோற்றத்தை உருவாக்கிவிடும்.
மலச் சிக்கல் :நீர் பற்றாக்குறையினால் வரும் மிக முக்கியப் பிரச்சனை மலச்சிக்கல்தான். மலச்சிக்கல் வந்தால் மூலம் மற்றும் மலக் குடல் சம்பந்தமான வியாதிகள் வர நேரிடும்
ஜீரணம் பாதிக்கப்படும் :நீர் போதுமான அளவு இல்லாதபோது வயிற்றில் சுரக்கப்படும் என்சைம் சரியாக சுரக்காது. உணவுகள் ஜீரணிக்கப்படவும் நீர் தேவை. ஜீரண மண்டலம் பாதிக்கப்படும். இதனால் அதோடு அல்சர், அஜீரணம், நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படும்.
நரம்பு மண்டலம் பாதிப்பு :நீர் பற்றாகுறையின் போது போதிய அளவு மினரல் இல்லாததால், நரம்பு மண்டலத்திற்கு தேவையான தகவல்கள் பரிமாற்றத்தில் பாதிப்புகள் உண்டாகும். நரம்புப் பிரச்சனைகள் உருவெடுக்கும்.
சிறு நீரகப் பிரச்சனைகள் :போதிய நீர் இல்லாது போனால் சிறு நீரகத்தில் கழிவுகள், நச்சுக்கள் வெளியேறாமல் தங்கிவிடும். இதனால் சிறு நீரக தொற்று, கற்கள் ஆகியவை தோன்றி சிறுநீரக கோளாறை உண்டு பண்ணிவிடும்.
வாய்துர் நாற்றம் :நீர் பற்றாகுறையின் போது எளிதில் காற்றின் மூலமாக தொற்றுவியாதிகள் பரவிவிடும். இதனால் அலர்ஜி எளிதில் உண்டாகும். வாய்துர் நாற்றம் ஏற்படும்.