இந்தியாவுடன் ஒப்பிடும் போது வெளிநாடுகளில் பற்களை பராமரிக்க மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வார்கள். பற்களை சுத்தம் செய்து பளிச்சிட செய்ய அதிகமாக செலவிட வேண்டும். இந்த செலவு பர்ஸை பதம் பார்த்துவிடும். எனவே எளிய பாதுகாப்பான முறையில் வீட்டிலேயே பற்களை வெண்மையாக்குவது எப்படி என்று பார்ப்போம். பற்களை வெண்மையாக்கும் போது ஆசிட் பற்களின் பலத்தை குறைத்து விடும். எனவே சமையலறையில் பொருட்களே போதுமானது.
தேவையானவை:
எலுமிச்சை பழம்
சோடா உப்பு (பேக்கிங் சோடா)
பேக்கிங் சோடா இயற்கையாக பற்களை வெண்மையாக்கும் பிளீச் என்று எல்லாருக்கும் தெரியும். இதனுடன் எலுமிச்சை சாறு சேரும்போது அதன் தன்மை கூடுகின்றது.
ஒரு கண்ணாடி பௌலில் கால் கப் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளவும். அத்துடன் அரை எலுமிச்சை பழத்தின் சாறு பிழிந்து சேர்த்து கலக்கவும். வீடியோவில் செய்முறையை காணவும்.
இந்த கலவையை பற்களில் தேய்த்து மூன்று நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யவும். இதை பற்கள் வெண்மையாகும் வரை தினமும் செய்யலாம்.