25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
maxresdefault 1
தலைமுடி சிகிச்சை

இங்கு நரைமுடியைப் போக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது

நரை முடியைப் போக்க மார்கெட்டில் ஏராளமான டைகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவை ஸ்கால்ப்பில் பட்டால், தலைமுடி உதிர்வால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.எனவே நரைமுடியைப் போக்க இயற்கை வழிகளை நாடுவது தான் சிறந்தது. இங்கு நரைமுடியைப் போக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது.

அது தான் உருளைக்கிழங்கு நீர். இந்த வழியைப் பின்பற்றினால், 2 வாரத்தில் நரை முடியைப் போக்கலாம். இப்போது அந்த உருளைக்கிழங்கு நீரை எப்படி தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்று காண்போம்.
maxresdefault 1
செயல்1: முதலில் 5-6 உருளைக்கிழங்குகளை எடுத்து நன்கு கழுவி, தோலை நீக்கி, அந்த தோலைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

செயல்2: பின் உருளைக்கிழங்கு தோலை 2 கப் நீரில் போட்டு, 15-20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

செயல்3: பின்பு அந்த கலவையை குளிர வைத்து, நீரை வடிகட்டி, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். பின் அதில் சில துளிகள் ரோஸ்மேரி அல்லது லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

செயல்4: தலைக்கு ஷாம்பு போட்டு அலசி, கண்டிஷனர் போட்டு 1-2 நிமிடம் கழித்து நீரில் தலைமுடியை அலச வேண்டும்.

செயல்5:  பிறகு உருளைக்கிழங்கு நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாகஅந்நீரைக் கொண்டு மசாஜ் செய்த பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசக்கூடாது.

செயல்5:  பிறகு தலைமுடியை நன்கு உலர்த்தி, சீப்பு கொண்டு தலைமுடியை சீவ வேண்டும்.

குறிப்பு: உருளைக்கிழங்கு நீரை ப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கக்கூடாது. மேலும் இந்த சிகிச்சையை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், 2 வாரத்தில் நரைமுடியில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இயற்கை வழிகளை நாடும் போது, பொறுமை என்பது மிகவும் அவசியம் என்பதை மறவாதீர்கள்.

Related posts

ஒரு ஹேர் பின் வச்சு சூப்பரா எப்படியெல்லாம் உங்கள் கூந்தலை எப்படி எல்லாம் அழகுபடுத்தலாம்?

nathan

பொடுகை அகற்ற

nathan

தலைக்கு குளிக்க நேரமில்லையா? உங்க தலை கப்பு அடிக்குதா? இதோ சில டிப்ஸ்…

nathan

கரிசலாங்கன்னியை பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை தூண்டுவாதற்கு !

nathan

ஒரு வாரம் உருளைக்கிழங்கு சாற்றினை தலையில் தேயுங்கள்!!நடக்கும் அற்புத மாற்றங்கள் இதோ!!

nathan

ஆயுர்வேத முறையை நீங்கள் பின்பற்றும் போது உங்கள் முடியை அடர்த்தியாகவும் மென்மையாகவும் மாற்றி ஈரப்பதத்துடன் வைத்து முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

nathan

சூப்பர் டிப்ஸ்! முடியின் அடர்த்தி குறைவதை தடுக்க வேண்டுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க… முடி கொட்டுவதைத் தவிர்க்க என்ன சாப்பிடலாம்?

nathan

இளநரையை போக்கும் மருதாணி:-சூப்பர் டிப்ஸ்

nathan