அலங்காரம்மேக்கப்

மேக்கப் போடுவதில் செய்யும் தவறால் ஏற்படும் சரும பாதிப்புகள்

 

winter-makeup-tips_thumb3மேக்கப்பை விரும்பாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் பெண்களுக்கு அலாதி பிரியமாகும்.  மேக்கப் போடுவது பெண்களுக்கு அழகை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கருவளையங்கள், நிறமூட்டல் போன்ற சரும பிரச்சனைகளை மறைத்து, அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் அளிக்கும்.

மேக்கப் போடும் போது செய்யும் சில தவறுகளால் உங்கள் சருமத்தின் மீது மோசமான விளைவுகளையும் அது ஏற்படுத்திவிடும். அவை என்னவென்று பார்க்கலாம்.

• படுக்க போகும் முன்னால் மேக்கப்பை நீக்க மறந்து வீடாதீர்கள். அப்படி மேக்கப்பை கலைக்க மறந்து விட்டால் உங்கள் சருமம் விரைவில் சொரசொரப்பான, வறண்ட மற்றும் வயதான தோற்றத்தை அடைந்து விடும். சருமத்தின் துவாரங்களில் மேக்கப் நுழையக் கூடும். இதனால் துவாரங்களின் அளவு பெரிதாகும். எண்ணெயும் அழுக்கும் இந்த துவாரங்களை அடைத்து, அதனால் அடிக்கடி பருக்கள் ஏற்படும்.

• வெதுவெதுப்பான நீர் மற்றும் குழந்தைகளின் ஷாம்பு சிறிதளவை ஒன்றாக கலந்து, அதில் உங்கள் மேக்கப் பிரஷ்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் கழுவ வேண்டும். அழுக்கு படிந்த பிரஷ்களைப் பயன்படுத்தினால், அதில் ஏற்கனவே படிந்துள்ள மேக்கப்கள் உங்கள் சரும துவாரங்களை அடைக்கும். இதனால் நீங்கள் புதிதாக செய்யும் மேக்கப் கூட கோரமாகி விடும். மேலும் அழுக்கு பிரஷ்களைப் பயன்படுத்தும் உங்கள் முகத்தில் தொற்று ஏற்படும் இடர்பாடும் உள்ளது.

• பொதுவாக கண்களில் செய்யப்பட்டுள்ள மேக்கப்பை ஈரமான பஞ்சுருண்டையை கொண்டு முரட்டுத்தனமாக துடைக்க பல பெண்கள் முற்படுவார்கள். கண்களை சுற்றியுள்ள சருமம் மிகவும் மென்மையானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அங்கே சுலபமாக சுருக்கம் ஏற்பட்டு விடும். மேலும் கண்களில் இப்படி கடுமையான முறையில் நடந்து கொண்டால், இமைகளின் அடர்த்திக்கு தீங்கு உண்டாகும்.

• அளவுக்கு அதிகமாக ஃபவுண்டேஷன் பயன்படுத்தினால் உங்கள் முகம் பார்ப்பதற்கு பேய் போல் தெரியும். அளவாகவும், மிதமாகவும் இருந்தால் மேக்கப் போட்டால் தான் பார்ப்பதற்கு உண்மையாக தெரியும். ஃபவுண்டேஷனை அதிகமாக போடுவதால் உங்கள் சருமத்தின் நிறமும் செயற்கையாக தெரியும். ப்ரான்ஸர் போல ஃபவுண்டேஷனையும் கழுத்து மற்றும் சருமங்களில் பூசாமல் லேசாக முகத்தில் மட்டும் போட்டுக் கொள்ளுங்கள்.

Related posts

பயணத்தின் போது கொஞ்சமா மேக்கப் போடுங்க

nathan

பார்ட்டிக்கு போறீங்களா? அப்ப இத படிங்க

nathan

திருமணத்திற்கு முன்…

nathan

பண்டிகைகள் மற்றும் விழாக்களில் ஆண்களுக்கான அழகிய ஆடை எது தெரியுமா?..

sangika

இப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான்!…

sangika

அவசியம் படிக்க..பெண்கள் விரும்பும் அத்தியாவசியமான பொருட்கள்

nathan

ஒப்பனை தூரிகை வழிகாட்டி

nathan

அழகு படுத்துவதற்கான எளிய குறிப்புகள் (Skin Care Tips In Tamil)

nathan

கண்கள் மிளிர.

nathan