23.2 C
Chennai
Saturday, Dec 13, 2025
cover 1520334743
மருத்துவ குறிப்பு

ஒரு ஸ்பூன் பப்பாளி விதை தினமும் சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

பப்பாளிப்பழம் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்காதுதான். ஆனால் சிலர் ஆரோக்கிய நன்மைகள் கருதி சாப்பிட ஆரம்பிப்பார்கள். சிலர் பப்பாளியைப் பார்த்தாலே எரிச்சலடைய ஆரம்பித்துவிடுவார்கள்.

இதற்குக் காரணம் நமக்கு அது பிடிக்காது என்பதைவிட, வேறுவேறு இடங்களில் இருந்து விலையுயர்ந்த பழங்கள் கிடைக்க ஆரம்பித்ததும் கௌரவத்திற்காக நாம் அதை சாப்பிடப் பழகிவிட்டோம். அதனால் விலை மலிவான, அதேசமயம் ஆரோக்கியம் நிறைந்த நம்முடைய நாட்டுப் பழங்களை சீ… என ஒதுக்கிவிடுகிறோம்.

#1
ஆனால் உண்மை என்னவென்றால் நம்முடைய நாட்டுப்பழங்களில் தான் ஆரோக்கியம் அதிகம். குறிப்பாக, பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. என்ன பப்பாளியிலா இவ்வளவு நன்மைகள் இருக்கின்றனஎன்று நம்மை ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு அதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகக் கொட்டிக் கிடக்கின்றன.

வறட்சி தாங்கும் பப்பாளி
பப்பாளி மரம் வளர நிறைய தண்ணீர் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. எந்த மாதிரியான வறட்சியான இடத்திலும்கூட பப்பாளியை மிக எளிதாக விளைவிக்க முடியும்.அதற்கு செயற்கையான கெமிக்கல் கலந்தோ உரங்களோ அல்லது அதிக தண்ணீரோ தேவையில்லை. அதனால் பூச்சிக்கொல்லிகள் பயமின்றி பப்பாளியை சாப்பிடலாம்.

பப்பாளி விதை
ஒருவழியாக நாம் ஆரோக்கியத்தை மனதில் வைத்துக்கொண்டு பப்பாளியை சாப்பிட்டாலும் முதலில் அதன் விதைகளை வழித்துத் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் பப்பாளிப்பழத்தை சாப்பிடுவதைவிட அதன் விதைகளில் தான் சத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. நாம் ஏன் கட்டாயம் பப்பாளி விதையைச் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?… இதோ அதுபற்றிய ஒரு தொகுப்பு

உங்களுக்காக…

வயிற்றுப்புழுக்கள் ஒழிய
நைஜீரியாவில் 2007 ஆம் ஆண்டு பப்பாளி விதையின் பலன்கள் பற்றி ஆராயப்பட்டது. குறிப்பாக, குழந்தைகளுக்கு மருந்தாகக் கொடுக்கப்பட்டன. 60 குழந்தைகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வுக்கு முன் எல்லோருக்கும் மலப்பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வுக்குப் பின் அந்த குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்னை சரியானதோடு வயிற்றில் உள்ள புழுக்களையும் வெளியேற்றியது தெரிய வந்தது.

கல்லீரல்
பப்பாளியில் மிக அதிக அளவில் உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் கல்லீரலில் உள்ள இழைநார்கள் சரியாக வளர்ச்சியடைய பப்பாளி விதை உதவும். கல்லீரல் வீக்கம் போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட அத்தனை வியாதிகளையும் போக்கும் தன்மை கொண்டது.

தினமும் பத்து முதல் 15 பப்பாளி விதைகளை எடுத்து நசுக்கி சாறாகவும் பயன்படுத்தலாம். அல்லது அரைத்து காய்கறிகளுடன் சேர்த்தோ சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய்கள் குணமாகும்.

சிறுநீரகக்கற்கள் கரையும்
சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கவும் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பைத் தடுக்கவும் பப்பாளி விதை மிகவும் உதவியாக இருக்கிறது என்று கராச்சி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமட்டுமின்றி, சிறுநீரக நச்சுக்கள் தொடர்பான நோய்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக பப்பாளி விதை அமைகிறது.

பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளை அழிக்கும்
பப்பாளி விதை இயற்கையாகவே நோய் எதிர்ப்பு ஆற்றல் தென்மை கொண்டது. அதனால் மூட்டுவலி தொடர்புடைய பிரச்னைகள், பக்கவாதம், வீக்கம், வலி, வீக்கத்தால் சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்னைகளை நீக்கும். குறிப்பாக,பாக்டீரியா மற்றும் வைரஸால் உண்டாகும் நோய்க்கிருமிகளைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது.

ஜீரண சக்தியை மேம்படுத்தும்
பப்பாளி காயிலுள்ள விதை மற்றும் பழத்தின்விதை இரண்டிலுமே மிக அதிக அளவில் என்சைம்கள் இருக்கின்றன. குறிப்பாக, அவற்றில் பாபைன் என்னும் என்சைம்அதிகமாக இருக்கிறது. அதனால் இது உணவு மண்டலத்தின் ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. ஆனால் கர்ப்பிணிகளும் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருப்பவர்களும் அந்த குறிப்பிட்ட காலகட்டங்களில் பப்பாளி விதை சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

புற்றுநோயைத் தடுக்கும்
பப்பாளி விதையில் உள்ள மூலப்பொருள்கள் புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகள் வளர்ச்சியடையாமல் தடுக்கும். இதிலுள்ள வேதிப்பொருள் மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், சருமப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து காக்கும் தன்மை கொண்டது.

ஆண்மையை அதிகரிக்கும்
ஆண், பெண் இருவருக்குமே மலட்டுத்தன்மை நீக்கும் ஆற்றல் பப்பாளி விதைக்கு உண்டு. இதில் அதிக அளவு புரோட்டீன் அடங்கியிருக்கிறது. பப்பாளி விதை ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகமாக உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது.

மூன்று வாரம் தொடர்ந்து பப்பாளி விதையை கீழ்வருமாறு சாப்பிட்டு வந்தாலே போதும். உங்கள் உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்கள் உணர்வீர்கள்.

எப்படி சாப்பிடுவது
பொதுவாக பப்பாளி விதை சிறிது கசப்பாகவும் சிறிது காரத்தன்மையுடனும் இருக்கும். அதனால் தான் மிளகுடன் பப்பாளி விதை கலப்படம் செய்கிறார்கள்.

பப்பாளி விதையை சாப்பிடுவதற்கு சில முறைகளை கையாளுங்கள். சாப்பிடுவதும் எளிதாகும். பலன்களும் முழுமையாகக் கிடைக்கும்.

ஆரம்ப நாட்கள்
பப்பாளி விதை சாப்பிட ஆரம்பித்த முதல் இரண்டு நாட்கள் சிறிய சைஸ் பப்பாளியை எடுத்துக்கொண்டு, அதன் சில விதைகளை மட்டும் எடுத்து அப்படியே சாப்பிட ஆரம்பியுங்கள். சிறிய சைஸ் பப்பாளியை எடுத்துக் கொண்டால், நன்கு முற்றாமல் இளம் விதைகளாக இருக்கும். கசப்புத்தன்மையும் குறைவாக இருக்கும்.

மூன்று வாரங்கள்
இரண்டு நாட்கள் சாப்பிட ஆரம்பித்ததும் உங்களுக்குப் பழகிவிடும். அதன்பின் விதையை எடுத்து நன்கு அரைத்து கால் ஸ்பூன் அளவுக்கு சாப்பிட ஆரம்பியுங்கள். அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்துங்கள். இரண்டாவது வாரம் அரை ஸ்பூன் அளவுக்கும் மூன்றாவது வாரத்திலிருந்து ஒரு ஸ்பூன் அளவுக்கும் சாப்பிட வேண்டும்.

மிளகுக்கு மாற்றாக
நீங்கள் மிளகை எந்தெந்த உணவில் பயன்படுத்துகிறீர்களுா அதில் மிளகுக்கு பதிலாக இந்த பப்பாளி விதைகளை நசுக்கிப் பயன்படுத்தலாம். மிளகின் அதே சுவையை இந்த விதைகளும் உங்களுக்குக் கொடுக்கும்.

சாலட், சூப், இறைச்சி ஆகியவற்றுடன் இந்த விதைகளை அரைத்துப் பயன்படுத்தலாம். ஆனால் ஸ்மூத்தி போன்ற இனிப்பான பதார்த்தங்களோடு சேர்க்காதீர்கள். அது கொஞ்சம் கசப்புத்தன்மையைக் கொடுக்கும்.

விதையின் சுவை
பப்பாளியின் விதை பழத்தைப் போல இனிப்பு இருக்காது. லேசான கசப்பு சுவையுடன் தான் இருக்கும். அதனுடைய முழு பலனையும் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அப்படியே பழத்துடன் சேர்த்தோ அல்லது தனியாகவோ சாப்பிடலாம். அதன் சுவை பிடிக்காதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. லேசாக மசித்து சாலட்டுடனோ அல்லது ஜூஸ் போன்றவற்றோடோ சேர்த்து சாப்பிடலாம். அல்லது நன்கு விதைகளை மசித்துக்கொண்டு அதில் சில துளிகள் தேன் மற்றும் ஒரு சிட்டிகை பெப்பர் சேர்த்து அப்படியே சாப்பிடலாம். அதன் சுவை நிச்சயம் உங்களுக்குப் பிடித்துவிடும். அதன்பின் தினமும் நீங்களாகவே அம்மாவிடம் கேட்டு வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிடுவீர்கள்.

cover 1520334743

Related posts

முப்பது வயதுக்கு மேல் ஆண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

nathan

எந்த வயதில் விட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்..?

nathan

மாதவிடாய் காலத்தில் இந்த விஷயங்களை கண்டிப்பா செய்யாதீங்க

nathan

ஆரோக்கியத்தில் ஆண்களை விட பெண்களே வலிமையானவர்கள்

nathan

கொரோனாவில் மீண்டவர்கள் பூஞ்சை தொற்று உருவாகும் அபாயம்.. கண்களில் கவனம்!

nathan

காய்ச்சல் மற்றும் சளியை தவிர்க்க நீங்கள் பின்பற்ற வேண்டியவை!

nathan

irregular periods reason in tamil -மாதவிடாய் முறைகேடுகளுக்கான பொதுவான காரணங்கள்

nathan

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

nathan

உங்களுக்கு தெரியுமா கருத்தரிக்க சரியான நாள் எது? எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது?

nathan