30.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
face02
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள

உங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பராமரித்து வந்தால், சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள முடியும்.

face02

எண்ணெய்ச் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று சருமத்தைப் பல வகைப்படுத்தலாம். இதில் உங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பராமரித்துவந்தால், சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள முடியும்.

பொதுவாக, முகத்தில் உள்ள சருமத்தைப் பாதுகாக்க கிளென்சிங், டோனிங், மாய்ஸ்ச்சரைசிங், சன்ஸ்க்ரீன் ஆகிய நான்கையும் சரிவரச் செய்தால், சருமம் அன்று பூத்த மலராக மென்மையுடன் இருக்கும்.

முகத்தில் உள்ள அழுக்கை அப்புறப்படுத்த, வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யலாம். சருமத்தின் துவாரங்கள் திறந்து தூசுக்கள், அழுக்குகள் நீங்கும். பிறகு, டர்க்கி டவலால் டோனிங் செய்யுங்கள்.

உள்ளங்கையில் ஐந்து சொட்டு டோனரைவிட்டு, பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுக்கவேண்டும்.

சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் போனால், வாடிவிடும். மாய்ஸ்ச்சரைசரைப் போட்டு நன்றாகத் தடவிப் படரவிட வேண்டும்.

தோலில் ஈரப்பசை, எண்ணெய்ப் பசை மிகவும் குறைவாக இருப்பதால், வறண்ட சருமம் ஏற்படுகிறது. இதனால் வெள்ளைத் திட்டுக்கள், அரிப்பு, கரும்புள்ளிகள், வெடிப்புகள், தேமல் போன்றவை ஏற்படலாம்.

வறண்ட சருமத்தினர் கோடையை எண்ணி கலங்கவேண்டியது இல்லை. ஆனால், இத்தகையவர்களுக்கு அதிகம் வியர்க்கும். வியர்வையால் ஏற்படும் பிரச்சனையில் இருந்து சமாளிக்க ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.

குளிக்கும் நீரில் சில சொட்டு தேங்காய் எண்ணெய்விட்டுக் குளிக்கலாம். இது சருமத்தில் எப்போதும் எண்ணெய்ப் பசை இருக்க உதவும்.

தினமும் குளிப்பதற்கு முன்பு தயிரை உடம்பில் தடவி மிதமான வெந்நீரில் குளித்துவந்தால், வறண்ட சருமம் சரியாகிவிடும்.

குளிர் காலத்தில் கடுகு எண்ணெய் பயன்படுத்தி குளிப்பதன்மூலம் சருமம் மினுமினுக்கும். குளிருக்கு இதமாகவும் இருக்கும்.

ஒரு பாத்டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு டம்ளர் வினிகர் சேர்த்து 15 நிமிடம் உடம்பை ஊறவைத்துக் குளிக்கவும். இதனால் அரிப்பு குணமாகும். சருமம் மென்மையாகும்.

வேகவைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் பூசினால், சருமம் பளிச்சென இருக்கும்.

4 பாதாம் பருப்பு அரைத்த விழுதுடன், தேன், பால் ஒரு டீஸ்பூன் சேர்த்து சருமத்தில் பூசி ஐந்து நிமிடம் கழித்துக் கழுவலாம்.

வாழைப்பழக் கூழுடன், பட்டர் ஃப்ரூட் இரண்டைக் கலந்து சருமத்தில் பூசி ஊறவைத்துக் கழுவுவதன் மூலம் சருமம் மிருதுவாகும்.

நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்போது இந்த எண்ணெயை உடலில் தடவிக் கொள்ளுங்கள்.

சந்தன பவுடர், பச்சைப் பயறு மாவு, கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, முல்தானி மட்டி பவுடர், ரோஜா இதழ்தூள் இவற்றைக் கலந்துவைத்து, சருமத்தில் தேய்த்துக் குளித்துவர, வறட்சி நீங்கி, தோல் பளபளக்கும்.

கொழுப்பு உள்ள சோப்புகளைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

Related posts

திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்-அதிர்ச்சியில் ஆழ்த்திய காட்சி!

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் கொத்தமல்லி

nathan

குழந்தையின் சருமம் போல உங்கள் சருமமும் ஆக வேண்டுமா? இத ட்ரைப் பண்ணுங்க…

nathan

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்

nathan

பாலாஜி மனைவி வெளியிட்ட வீடியோ! நீயெல்லாம் அம்மாவாக இருக்க தகுதியே இல்லை!

nathan

என்ன ​கொடுமை இது? கண்ணாடி முன் படு கிளாமர் உடையில் கஸ்தூரி எடுத்த செல்பி.

nathan

வெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்(Video)?

nathan

63 வயதில் 6 வது முறையாக மனைவியை கர்ப்பமாக்கிய நடிகர்!

nathan

சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அன்றாட விஷயங்கள்!!!

nathan