26.7 C
Chennai
Tuesday, Feb 18, 2025
cra01
அசைவ வகைகள்அறுசுவை

சூப்பர் நண்டு வறுவல்

தேவையான பொருட்கள் :
நண்டு – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 2
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவுcra01

வதக்கி அரைக்க:
பூண்டு பல் – 10
மிளகு – 2 டீஸ்பூன்

தாளிக்க:
நல்லெண்ணெய் – தேவையான அளவு
சோம்பு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வதக்கி ஆறவைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம் போட்டு சிவக்க வதக்குங்கள்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த மசாலா, மிளகாய்த் தூள்,  மஞ்சள் தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.

அடுத்து அதில் நண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நண்டு வெந்து, மசாலா கெட்டியாகி நண்டுடன் சேர்ந்ததும் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

சூப்பரான நண்டு வறுவல் ரெடி.

Related posts

கேரட் – பாதாம் ஜூஸ்

nathan

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் எளிதாக எப்படி செய்வது

nathan

குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் விரும்பும் சிக்கன் பிரைட் ரைஸ்

nathan

பட்டர் சிக்கன் செய்யலாம் வாங்க…

nathan

பெப்பர் மட்டன் வறுவல்

nathan

தீபாவளிக்கு என்ன மட்டனா? இதை ட்ரை பண்ணலாமே!

nathan

ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன்

nathan

மட்டன் மிளகு வறுவல் எப்படிச் செய்வது?

nathan

பாதாம் சிக்கன்

nathan