25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
herbal 17 1476683921
மருத்துவ குறிப்பு

காலையில் இந்த மூலிகை நீரை குடிச்சா சர்க்கரைவியாதி புற்று நோயை தடுக்கலாம் என தெரியுமா? அப்ப இத படிங்க!

புற்று நோய் சர்க்கரைவியாதி இரண்டும் பற்றியதான விழிப்புணர்வு நம்மிடையே இன்னும் அதிகரிக்க வேண்டும்.

இவற்றின் தீவிரம் பற்றி தெரிந்து வைத்திருக்கோமே தவிர எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம்.

பெருகும் துரித மசாலா உணவுக் கடைகளே எடுத்துக் காட்டு. நாம் அவற்றை உண்பதை குறைத்துவிட்டால் இந்த கடைகளின் என்ணிக்கையும் குறையும்

நம் நாட்டில் எண்ணெற்ற மூலிகை பயன் கொண்ட காய் மற்றும் கீரை வகைகள் உள்ளன. அவற்றின் நன்மைகள் எளிதில் கூறி சுருக்கிட முடியாது. அவ்வளவு பயன்களை தருபவை. அப்படி ஒன்றுதான் முருங்கைக் கீரை.

முருங்கைக் கீரை : முருங்கைக் கீரையில் அதிக இரும்பு சத்து, கால்சியம் மற்றும் முக்கியமான ஃபைடோ சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே புற்று நோயை எதிர்க்கக் கூடியவை. அதோடு தினமும் அதனை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறையும் என்பது உறுதி. முருங்கைக் கீரையை உபயோகப்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம்.

எவ்வாறு தயாரிக்கலாம் தேவையானவை : நீர் – 2 கப் முருங்கைக் கீரை – அரைக் கப்.

செய்முறை : நீரை கொதிக்க வையுங்கள். அதில் நன்றாக கழுவிய முருங்கைக் கீரை அரை கப் எடுத்து போட்டு சில நிமிடம் கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து நீரை ஆற வையுங்கள். அதன் பின் வடிகட்டி, அந்த நீரை தினமும் காலையில் சிற்றுண்டி சாப்பிடும் முன் குடியுங்கள். அந்த வெந்த கீரையை சமைக்க எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்தால் எந்த நோயும் உங்களை நெருங்காது. சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும். புற்று நோயை தடுக்கலாம். ரத்த சோகை இருப்பவரகள் அல்லது பலஹீனமாக இருப்பவரகளுக்கு ஒருவாரத்தில் குணமாகும்.herbal 17 1476683921

Related posts

சூப்பர் டிப்ஸ்! தாங்கமுடியாத தலைவலியை போக்க வேண்டுமா?

nathan

இதோ எளிய நிவாரணம்! நீராவி பிடிப்பதால் நுரையீரலில் உள்ள சளியை நீக்க முடியுமா…?

nathan

நிபுணரின் அட்வைஸ் பயப்படாதீங்க ராய்டு குறைபாடு…

nathan

வீட்டில் தொந்தரவு தரும் எலி, பல்லி, கரப்பான் பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்!!!

nathan

சளியால் உங்க மூக்கு ரொம்ப ஒழுகுதா? இதோ எளிய நிவாரணம்!

nathan

தோள்பட்டை வலி அதிகமா இருக்கா? இதோ எளிய நிவாரணம்

nathan

உங்களுக்கு தெரியுமா காலையில் இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும்…. அந்த நோய்கள் பறந்து போகும்.!!

nathan

பெண்கள் தாம்பத்தியத்திற்கு மெனோபாஸ் முற்றுப்புள்ளியா?

nathan

கர்ப்ப காலத்தில் ஆன்டி பயாடிக் மருந்துகளை சாப்பிடலாமா?

nathan