28.3 C
Chennai
Tuesday, Jul 15, 2025
00 35
எடை குறைய

உங்களுக்கு எட்டே வாரங்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா?

உணவருந்திய பிறகு வெற்றிலை போடும் பழக்கம் உள்ளது. பொதுவான இந்த பழக்கத்தால் பல உடல்நல் பயன்கள் அடங்கியிருக்கிறது. ஆனால் வெற்றிலையை மெல்லுவதால் உடல் எடையும் குறையும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனை மிளகுடன் கலக்கும் போது, இந்த கலவை உடல் எடையை குறைக்கும் சிறந்த கருவியாக செயல்படும்

இந்த செயலை செய்து வந்தால், எண்ணி 8 வாரங்களில் நல்ல பலனை காண்பீர்கள். இப்போது அது எப்படி வேலை செய்கிறது என்பதையும், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் பார்க்கலாமா…?

அசிடிட்டியைத் தடுக்கும் வெற்றிலைகளில் இரைப்பைக் குடல் வலி நீக்கி குணங்கள் அடங்கியுள்ளது. அதே போல் சரியான செரிமானத்திற்கும் உதவிடும். வெற்றிலையை மெல்லுவதால் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, வயிற்றில் சளி உடைய பொருளை அதிகரிக்கும். இதனால் அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கப்படும். இதனால் காஸ்ட்ரிக் அமிலத்தின் தீய தாக்கங்களில் இருந்து வயிற்றின் உட்பூச்சு பாதுகாக்கப்படும் என ஒரு ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

செரிமானம் மற்றும் மலச்சிக்கல் நீங்கும் இதுப்போக, வெற்றிலையை மெல்ல ஆரம்பித்த உடனேயே வாயில் எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நீங்கள் உண்ட உணவை செரிக்க சொல்லி வயிற்றுக்கு சிக்னல் அனுப்பும் உங்கள் வாய். இதனால் செரிமானம் சிறப்பாக செயல்பட தொடங்கும். வயிற்றில் இருந்து நச்சுக்களை (இதனை ஆயுர்வேதத்தில் அமா என கூறுகின்றனர்) நீக்கவும் இது உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் நீங்குகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து.

கொழுப்புக்களை கரைக்கும் ஆயுர்வேதத்தின் படி, வெற்றிலையும், மிளகும் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும் கூட உதவுகிறது. இதனால் உடல் எடையை குறைக்கும் செயல்முறை துரிதப்படும்.வெற்றிலையுடன் மிளகு மறுபுறம், மிளகில் ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மற்றும் பெப்பரின் இருப்பதால், அவைகள் கொழுப்பை உடைக்க உதவும். மேலும் நீங்கள் உண்ணும் உணவில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உட்கிரகித்து கொள்ள உதவும்.

மேலும் கருப்பு மிளகில் உள்ள பெப்பரைன் செரிமானத்திற்கு சிறப்பாக உதவிடும். அதிகமாக ஹைட்ரோக்ளோரிக் அமிலம் உற்பத்தியாவதற்கு வயிற்றுக்கு சுவை மொட்டுகள் சிக்னல் அனுப்ப இது ஊக்குவிக்கும். ஹைட்ரோக்ளோரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாவதால், உங்கள் வயிறு புரதம் மற்றும் பிற உணவுகளை செரிக்க வைக்க உதவும். உட்கொண்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் வாய்வு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி உண்டாகும். இதுப்போக, வியர்த்தல் மற்றும் சிறுநீர் உற்பத்தியையும் இது மேம்படுத்தும். இதன் மூலம் உடலில் உள்ள அளவுக்கு அதிகமான நீரும் நச்சுப்பொருட்களும் வெளியேறும்.

எப்படி பயன்படுத்துவது?
பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு கொழுந்து வெற்றிலை ஒன்றை எடுத்து அதனுடன் 5 மிளகு உருண்டைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனை மடித்து வாயில் போட்டு மெல்லத் தொடங்குங்கள். முதலில் மிளகு சற்று காட்டமாக தான் இருக்கும். ஆனாலும் அதை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் உங்கள் வயிற்றுக்கு அதிலுள்ள ஊட்டச்சத்துக்களை எச்சில் அனுப்பி வைக்கும். இதனை காலையில் முதல் வேலையாக வெறும் வயிற்றில் உண்ணுங்கள். இதனை தொடர்ச்சியாக 8 வாரங்கள் கடைப்பிடிக்கவும்.

எச்சரிக்கை நற்பதமான மற்றும் கொழுந்து வெற்றிலையை வாங்கி உண்ணுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். சற்று வயதான இல்லை அல்லது மஞ்சள் நிறத்திலான இலைகள் அதன் மருத்துவ குணங்களை இழக்கத் தொடங்கி விடும். அதே போல் அழுகிய நிலையில் (கருப்பு நிறத்திற்கு மேரி கொண்டிருக்கும்) இருக்கும் இலைகளையும் தவிர்க்கவும். இது உங்களுக்கு வயிற்று போக்கை ஏற்படுத்தி விடலாம்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்00 35

Related posts

திடீரென உடல் எடை குறைவதற்கான 15 காரணங்கள்

nathan

இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்கும் பூண்டு

nathan

உங்களுக்கு தெரியுமா 10 நாட்களில் உடல் எடையை குறைக்க உதவும் வாட்டர் டயட் முறை

nathan

அறுவை சிகிச்சை செய்த பிறகு எடை லாபத்திற்கான 5 முக்கிய காரணங்கள்

nathan

எடை குறைக்க இனிய வழி!

nathan

18 மாதத்தில் 108 கிலோ எடையை ஆனந்த் அம்பானி எப்படி குறைத்தார் என்று தெரியுமா?

nathan

சிக் உடலுக்கு ஜி.எம் டயட்

nathan

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா ரெண்டே வாரத்தில் 10 கிலோ எடையை குறைக்கும் செலவில்லாத பானம்…

nathan