29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
sinus 1520334980
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை தீவிரமாக இருப்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!

இன்று ஏராளமானோருக்கு சைனஸ் பிரச்சனை உள்ளது. ஆனால் பலருக்கும் நமக்கு இருப்பது சைனஸ் என்று சரியாக தெரிவதில்லை. பொதுவாக சைனஸ் பிரச்சனையை, சாதாரண சளி, இருமலுடன் சரியாக கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். சிலர் சாதாரண சளி, இருமலுக்கு உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் சைனஸ் பிரச்சனை பொதுவாக சந்திக்கும் சளி பிரச்சனையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஒவ்வொரு வருடமும் சைனஸ் பிரச்சனையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்.

சைனஸ் பிரச்சனையானது சைனஸ் சுரப்பி அல்லது சுவாச பாதையில் அழற்சி மற்றும் வீக்கமடைந்து, அன்றாடம் சுவாசிப்பதில் சிக்கலை உண்டாக்கும் ஒருவர் தங்களுக்கு இருக்கும் சைனஸ் பிரச்சனையை சரிசெய்யாமல் விட்டுவிட்டால், அதனால் உடல் ஆரோக்கியம் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகும். சில சமயங்களில் சைனஸ் பிரச்சனையால் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டலாம் மற்றும் சில சமயங்களில் பார்வை பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

ஒருவருக்கு சாதாரண சளி என்றால் ஒரு வாரத்தில் குணமாகிவிடும். ஆனால் ஒரு வாரம் ஆகியும் சளி சரியாகாவிட்டால், அவர்களுக்கு சைனஸ் சுரப்பியில் அழற்சி ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இக்கட்டுரையில் சைனஸ் பிரச்சனை ஒருவருக்கு தீவிரமாக இருந்தால் வெளிப்படும் சில அறிகுறிகள் மற்றும் அதை சரிசெய்யும் சில வைத்தியங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்போம் வாருங்கள்…

முகத்தில் வலி ஒருவருக்கு சைனஸ் பிரச்சனை இருந்தால், முகத்தில் வலியை சந்திக்க நேரிடும். அதுவும் மூக்கைச் சுற்றியுள்ள பகுதியில் தான் வலியை அனுபவிக்கக்கூடும். அதோடு மேல் தாடை மற்றும் தாடைகள் இணையும் பகுதிகளிலும் வலியை சந்திக்க நேரிடும். அதோடு தேவையில்லாத அழுத்தம் அல்லது பாரம் முகத்தில் கொடுப்பது போன்ற உணர்வு எழும். ஒருவேளை சளி பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்தாலும், இந்த வலியில் இருந்து விடுபட முடியாது. இன்னும் சில சமயங்களில் தலையை திருப்பினால் கூட வலி மற்றும் அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும். இம்மாதிரியான நேரத்தில் உடனே மருத்துவரை அணுக வேண்டியது இவசியம்.

மஞ்சள் நிற சளி வெளியேற்றம் சாதாரண சளி பிடித்திருந்தால், மூக்கில் இருந்து நிறமற்ற சளி வெளியேறும். ஆதுவே சைனஸ் பிரச்சனையாக இருப்பின், மூக்கில் இருந்து சளி மஞ்சள் நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலேயோ வெளியேறும். இதேப் போன்று வாயின் வழியாகவும் சளி வெளியேறும். இதற்கு காரணம் சைனஸ் வைரஸ் தான். அதோடு சுவாசிக்கும் போது, நாசித் துளைகளில் சற்று வலியையும் சந்திக்கக்கூடும். எனவே இம்மாதிரியான தருத்திச் உடளே மருத்துவரை அணுக வேண்டும்.

கடுமையான இருமல் இருமலானது நீண்ட நேரம் கடுமையாக இருந்தால், சைனஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். குறிப்பாக இரவு நேரத்தில் இருமல் வருவதோடு, தூங்கும் நிலையும் சைனஸை பாதிக்கும். அதுவும் ஒருவர் மல்லாக்க படுக்கும் போது, நாசித்துளையில் உள்ள சளி அப்படியே மீண்டும் தொண்டைக்கு சென்றுவிடும். இதனால் தான் இரவு நேரத்தில் கடுமையான வறட்டு இருமலை சந்திக்க நேரிடுகிறது. இம்மாதிரியான நிலையில் தலையை சற்று உயரமாக வைத்துக் கொண்டு ஒரு பக்கமாக தூங்குங்கள். முக்கியமாக இந்த மாதிரியான சூழ்நிலையில் தவறாமல் மருத்துவரை அணுகுங்கள்.

வாய் துர்நாற்றம் உங்களால் இதை நம்ப முடியாது. ஆனால் ஒருவருக்கு சைனஸ் தொற்றுக்கள் இருந்தால், அவரது வாய் கடுமையான துர்நாற்றத்துடன் இருக்கும். பொதுவாக வாய் துர்நாற்றத்திற்கான பாக்டீரியாக்கள் உள்நாகில் வளர்ச்சி பெறுகிறது. இதனால் தான் வாயினுள் துர்நாற்றம் வீசுகிறது. சைனஸ் இருக்கும் போது, மூக்கைச் சுற்றி பாக்டீரியாக்கள் நிறைந்த சளி தேங்குவதால், அது கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்குகிறது. இதற்கு என்ன தான் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள பற்களைத் துலக்கினாலும் அந்த துர்நாற்றம் நீங்காது. இத்தகையவர்கள் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க மருத்துவரைத் தான் அணுக வேண்டும்.

காது அடைப்பு காதுகளுக்கும், சைனஸ் பிரச்சனைக்கும் தொடர் உள்ளது. சைனஸ் பிரச்சனை உள்ளவர்களு காது பிரச்சனைகள் வரும் அபாயம் அதிகரிக்கும். அதுவும் காது மடல் இருந்து வலி ஆரம்பித்து, பின் காதுகளுக்குள் வலியானது தீவிரமாக இருக்கும். ஆகவே உக்ளுக்கு காதுகளில் திடீரென்று அடைப்பு ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி, உங்களது சைனஸ் பிரச்சனையைப் போக்குங்கள்.

பல் வலி சைனஸ் பிரச்சனைக்கும், பல் வலிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் சைனஸ் இருந்தால், அடிக்கடி பல் வலியை சந்திக்கக்கூடும். சைனஸ் சுரப்பியில் அழுத்தம் அதிகம் கொடுக்கப்படும் போது, தாடையின் மேல் பகுதியில் அழுத்தம் அதிகம் கொடுக்கப்படும். இம்மாதிரியான தருணத்தில் உங்கள் மருத்துவரிடம் நீங்கள் சந்திக்கும் பிரச்சனையைக் கூறி, சைனஸில் இருந்து விடுபடுங்கள். சைனஸ் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஏராளமான இயற்கை வைத்தியங்கள் உள்ளன. இங்கு அவற்றில் சில எளிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சைனஸ் பிரச்சனைகளில் இருந்து விடுக்கும் சில இயற்கை வழிகள்! சுடுநீர் ஒத்தடம் கொதிக்க வைத்த சுடுநீரில் ஒரு துணியை நனைத்து அதிகப்படியான நீரைப் பிழிந்து, அந்த துணியை நெற்றி, மூக்கு, கண்கள் போன்ற இடங்களில் வைக்க வேண்டும். இப்படி 15 நிமிடத்திற்க ஒரு முறை என ஒரு நாளைக்கு மூன்று தடவை செய்தால், மூக்கு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சைனஸ் சுரப்பியில் உள்ள அடைப்புக்களைத் திறந்து நிவாரணம் அளிக்கும்.

யூகலிப்டஸ் ஆயில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயிலை நேரடியாக நெற்றி மற்றும் மூக்கு பகுதிகளில் தடவ வேண்டும். இதனால் அந்த எண்ணெயில் உள்ள சளியை இளகச் செய்யும் பண்புகள், சைனஸால் முகத்தில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும்.

ஆவி பிடிக்கவும் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வையுங்கள். பின் அதில் சிறிது வேப்பிலை அல்லது வெந்தயத்தைப் போட்டு ஆசி பிடியுங்கள். இச்செயலால் சைனஸால் ஏற்படும் தலைவலி, மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடியாக விடுபடலாம். மேலும் இந்த செயலால சளி இளகி எளிதில் வெளியே வந்துவிடும். அதோடு, இந்த நீரில் வேப்பிலை, வெந்தயம் போன்றவற்றை சேர்ப்பதால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியா பண்புகள், சைனஸ் சுரப்பிகளில் உள்ள தொற்றுக்களை அழிக்க உதவும்.

பூண்டு பூண்டு சைனஸ் தொற்றுக்களில் இருந்து விடுவிக்கும் ஓர் அற்புத பொருளாகும். பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே சைனஸ் பிரச்சனை உள்ள ஒருவர் பூண்டு பற்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரைக் குடிக்கலாம் அல்லது பூண்டு கேப்ஸ்யூலை சாப்பிடலாம். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

லெமன் பாம் மூலிகை லெமன் பாம் இலைகளை நீரில் போட்டு கொரிக்க வைத்து, அந்நீரில் ஆவி பிடிக்க வேண்டும். இதனால் அதில் உள்ள மருத்துவ பண்புகள், சைனஸ் சுரப்பிகளில் உள்ள தொற்றுக்களை அழித்து, சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதோடு லெமன் பாம் இலை போட்டு கொதிக்க வைத்த நீரால், தினமும் 2 முறை வாயைக் கொப்பளித்தாலும், சைனஸில் இருந்து விடுபடலாம்.

sinus 1520334980

Related posts

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஜாதிக்காய்…!

nathan

மருத்துவப் பயன் நிறைந்த வெந்தயம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளிடம் பேசினால் மூளை வளரும்

nathan

உங்களுக்கு தெரியுமா பூண்டை காதில் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ?

nathan

சூப்பர் டிப்ஸ்! தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…

nathan

இதய நோய் இருந்தால் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

nathan

சூப்பர் டிப்ஸ்..இந்த யூக்கலிப்டஸ் தைலத்தை தடவிறீங்களே… இது நுரையீரல்ல போய் என்னல்லாம் செய்யும்னு தெரியுமா?…

nathan

மாதக்கடைசியில் பணம் இல்லாமல் அவதியா? இதோ ஐடியா

nathan

காசநோய் பிரச்னைக்கு புதிய தீர்வை கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்!

nathan