ஒருவரின் உடல் ஆரோக்கியம், குடல் எவ்வளவு சுத்தமாக உள்ளது என்பதைப் பொறுத்து அமையும். குடல் சுத்தமாக இருந்தால் தான், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது குடலால் உறிஞ்சப்படும். ஆனால் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளால், அவை குடலில் தங்கி, மலச்சிக்கல் ஏற்பட்டு, அதனால் வேறு சில பிரச்சனைகளாலும் அவஸ்தைப்பட நேரிடுகிறது. கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் 15 உணவுகள்!!!
எனவே குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு உணவுகள் தான் உதவி புரியும். ஆகவே குடலை சுத்தப்படுத்தி, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை அடிக்கடி உட்கொண்டு வர வேண்டும். மூன்றே நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?
கீழே குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை முடிந்தால் அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள். முக்கியமாக குடல் சுத்தமாக இருந்தால், உடல் எடை வேகமாக குறையும். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 சக்தி வாய்ந்த உணவுகள்!!!
கற்றாழை
கற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக கொண்ட ஓர் செடி. இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே கற்றாழை ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமான பாதை மற்றும் குடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, செரிமான பாதை சுத்தமாகிவிடும். மேலும் இது அல்சரால் வயிற்றில் ஏற்படும் இரத்தக்கசிவுகளை நிறுத்தும்.
நார்ச்சத்துள்ள உணவுகள்
நார்ச்சத்துள்ள உணவுகளான ஓட்ஸ், முழு தானியங்கள், பார்லி, கோதுமை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்து வந்தால், குடல் சுத்தமாகும். அதுமட்டுமின்றி நார்ச்சத்துள்ள உணவுகள், குடலில் உள்ள நீரால் மலத்தை மென்மையாக்கி, எளிதில் வெளியேற உதவும்.
ஆப்பிள்
ஆப்பிள் மற்றொரு சிறப்பான குடலை சுத்தம் செய்யும் உணவுப் பொருள். நீங்கள் மலச்சிக்கலால் கஷ்டப்பட்டால், ஆப்பிளை சாப்பிடுங்கள். இதனால் உங்கள் குடல் சுத்தமாகி, கழிவுகள் எளிதில் வெளியேற்றப்பட்டு, குடலியக்கம் சீராக்கப்படும். மேலும் ஆப்பிளில் பெக்டின், நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை உள்ளதால், அவை குடலில் நீரை தேக்கி வைத்து, குடலியக்கம் சீராக நடைபெற உதவும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளதோடு, குடலைச் சுத்தம் செய்யும் தன்மையும் வாழைப்பழத்திற்கு உள்ளது. எனவே உங்கள் குடல் சுத்தமாக, எவ்வித பிரச்சனையும் இல்லாமல் செயல்பட வேண்டுமானால், தினமும் ஒரு வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிடுங்கள்.
தயிர்
தயிர் கூட குடலை சுத்தம் செய்யும். மேலும் தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளதால், இது செரிமானத்தை சீராக்கவும், உணவில் உள்ள சத்துக்களை குடல் எளிதில் உறிஞ்சவும் உதவும். எனவே தினமும் ஒரு கப் தயிரை உட்கொண்டு, உங்கள் குடலை தினமும் சுத்தம் செய்து வாருங்கள்.
பால்
பால் குடலில் உள்ள செரிக்கப்படாத உணவுகளை எளிதில் செரித்து, டாக்ஸின்களை வெளியேற்றும். எனவே இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடித்து வாந்தால், குடல் சுத்தமாகும். மேலும் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.
வெண்ணெய் பழம் (Butter Fruit)
அவகேடோ என்னும் வெண்ணெய் பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் புரோட்டீன்களும், இதர சத்துக்கள் வளமாக உள்ளதால், இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். வெண்ணெய் பழம் குடலில் நீரைத் தக்க வைத்து, குடலியக்கத்தை சீராக்கும். எனவே அடிக்கடி வெண்ணெய் பழ மில்க் ஷேக் குடித்து உங்கள் குடலை சுத்தப்படுத்துங்கள்.
பூண்டு
பூண்டு சாப்பிடுவதால், உடலில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு, உடல் சுத்தமாகும். குறிப்பாக பூண்டு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும். அதற்கு பூண்டு பற்களை பச்சையாகவோ அல்லது பாலுடன் சேர்த்தோ எடுத்து வரலாம்.
– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.