aavaram poo
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கூந்தலும் வளர்ச்சிக்கும் பல வித நோய்களை குணபடுத்தி ஆயுளை கூட்டும் ஆவாரம் பூ!!

ஆவாரம் பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம். ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது. கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் ஆவாரம் பூ.

ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.

ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி பளபளப்பாகும்.

ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.aavaram poo

Related posts

உடல் உஷ்ணத்தை தணிக்கும் கோவைக்காய்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! காய்ச்சல் மற்றும் சளியில் இருந்து விலகி இருக்க அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan

உங்களுக்கு அடிக்கடி இங்க வலிக்குதா? கண்டிப்பாக வாசியுங்க….

nathan

உங்களுக்கு தெரியுமா மாதவிடாய் தாமதமாக காரணம் என்ன?

nathan

மலேரியாவை கட்டுப்படுத்தும் மர சூரிய காந்தி

nathan

தெரிஞ்சிக்கங்க…பித்தக்கற்களை இயற்கை வழியில் கரைப்பது எப்படி?

nathan

மன அழுத்தம் போக்கும் ரெஃப்ளெக்ஸாலஜி!

nathan

மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்துவது சரிதானா?

nathan

ஒற்றைத்தலைவலியைப் போக்க உதவும் 10 இயற்கை வழிமுறைகள்!

nathan