29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
20180226 195114
மருத்துவ குறிப்பு

இரும்புச் சத்துக்காக மாத்திரைகள் சாப்பிடலாமா?கண்டிப்பாக வாசியுங்க….

இரும்புச் சத்துக்காக மாத்திரைகள் சாப்பிடலாமா? – ஒரு அலர்ட்!

இரும்புச் சத்து… உடல் இயக்கத்துக்கு மிகவும் இன்றியமையாத சத்து. தினமும் குறிப்பிட்ட அளவுக்கு இரும்புச்சத்து நமது உடல் இயக்கத்துக்கு அவசியம். நம் முன்னோர், அதையெல்லாம் கணக்கிட்டுத்தான் நமக்கான உணவுகளை வடிவமைத்தார்கள்.

ஆனால், இளம் தலைமுறை, அவசர உணவுகளையும் ரெடிமேடு உணவுகளையுமே விரும்பி ஓடுகிறது. சத்துக்குறைபாடு ஏற்பட்டால் இருக்கவே இருக்கிறது மாத்திரைகள். சத்து மாத்திரை சாப்பிடுவது பேஷன்போல மாறிவிட்டது.

உடலுக்குத் தேவையான சத்துகளை மாத்திரைகளாகச் சாப்பிடலாமா? குறிப்பாக இரும்புச் சத்து மாத்திரைகள்? ஊட்டச்சத்து நிபுணர் கற்பகத்திடம் கேட்டோம்.

“இரும்புச் சத்து உடல் நலத்துக்குத் தேவையான ஓர் ஊட்டச்சத்து. மிகவும் அவசியமான இந்தச் சத்தை இயற்கையாகவே நாம் பெற முடியும். தேவை ஏற்பட்டாலே ஒழிய மாத்திரைகள் சாப்பிடலாம்.

இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதில், ஹீம் (Heme), நான்-ஹீம் (Non-Heme) என இரண்டு வகை உள்ளன. காய்கறிகள்மூலம் நாம் பெறுவது ஹீம். இறைச்சிகளில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுவது நான்-ஹீம்.

பேரீச்சம்பழம், எள், அத்திப்பழம், மீன், முட்டை, கோழி, கீரை வகைகள் மற்றும் பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள், மாம்பழம், அன்னாசி, பப்பாளி போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

இரும்புச்சத்தை உடல் முழுமையாக உறிஞ்சிக்கொள்ள…

இரும்புச்சத்துக்குத் தேவையான காய், பழங்களோடு சேர்த்து வைட்டமின் சி அதிகம் இருக்கும் ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம் போன்ற சிலவற்றை சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது, உடல் இரும்புச்சத்தை இன்னும் வேகமாக உறிஞ்சிக்கொள்ளும்.

உணவு வகைகள் மூலமாக எடுத்துக்கொள்ளும் இரும்புச்சத்தைப் பொறுத்தவரையில் மீன், முட்டை, கோழி போன்ற இறைச்சி வகைகளில் இருந்து கிடைக்கப்பெறும் இரும்புச்சத்து, காய்கறிகளை விடவும் எளிதில் உறிஞ்சிக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

டீ காபியில் இருக்கும் கஃபைன் சத்து, இரும்புச் சத்தை உடல் எடுத்துக்கொள்வதைக் குறைக்கும் என்பதால் இரும்புச் சத்துள்ள உணவு உட்கொண்டபிறகு, காபி, டீ அருந்துவதைத் தவிர்க்கவேண்டும்.

யாருக்கு இரும்புச் சத்து அதிகம் தேவை?

மாதவிடாய்க் காலம், கர்ப்பக் காலம், பிரசவம், மெனோபாஸ் என வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒருவகையில் பெண்களுக்கு ரத்தப்போக்கு ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம்ஏற்படுகிறது.

பக்கவிளைவுகளைத் தவிர்க்க…

இரும்புச் சத்துக்காக மாத்திரைகள் சாப்பிடுவதன்மூலம் கறை படிந்த பற்கள் உருவாகக்கூடும். ஆகவே, கூடுதலாக பழச்சாறுகள், தண்ணீர் என திரவ உணவுகளை உட்கொள்வது, தூங்கும் முன் பல் விளக்குவது போன்றவற்றால் பற்களில் கறை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

காய்கறிகள்

* சத்து மாத்திரைகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாதவை: பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள், காபி, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள்.

* சத்து மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், மற்ற நேரங்களைக் காட்டிலும், காலை நேரத்தில் உணவுக்கு முன்னர் அவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. இது இரும்புச்சத்தை உடல் எளிதில் கிரகித்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றார் அவர்.

இரும்புச் சத்து மாத்திரை

உடலுக்குத் தேவையான சத்துகளை மாத்திரைகளாகச் சாப்பிடலாமா? குறிப்பாக இரும்புச் சத்து மாத்திரைகள்? ஊட்டச்சத்து நிபுணர் கற்பகத்திடம் கேட்டோம்.

“இரும்புச் சத்து உடல் நலத்துக்குத் தேவையான ஓர் ஊட்டச்சத்து. மிகவும் அவசியமான இந்தச் சத்தை இயற்கையாகவே நாம் பெற முடியும். தேவை ஏற்பட்டாலே ஒழிய மாத்திரைகள் சாப்பிடலாம். இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதில், ஹீம் (Heme), நான்-ஹீம் (Non-Heme) என இரண்டு வகை உள்ளன.

காய்கறிகள்மூலம் நாம் பெறுவது ஹீம். இறைச்சிகளில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுவது நான்-ஹீம். பேரீச்சம்பழம், எள், அத்திப்பழம், மீன், முட்டை, கோழி, கீரை வகைகள் மற்றும் பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள், மாம்பழம், அன்னாசி, பப்பாளி போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

டீ காபியில் இருக்கும் கஃபைன் சத்து, இரும்புச் சத்தை உடல் எடுத்துக்கொள்வதைக் குறைக்கும் என்பதால் இரும்புச் சத்துள்ள உணவு உட்கொண்டபிறகு, காபி, டீ அருந்துவதைத் தவிர்க்கவேண்டும்.

யாருக்கு இரும்புச் சத்து அதிகம் தேவை?

மாதவிடாய்க் காலம், கர்ப்பக் காலம், பிரசவம், மெனோபாஸ் என வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒருவகையில் பெண்களுக்கு ரத்தப்போக்கு ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம்ஏற்படுகிறது. ஆகவே, பெண்களுக்குத்தான் இதற்கான தேவை அதிகம் இருக்கிறது.

* இரும்புச் சத்துக்காக மாத்திரைகள் சாப்பிடுவதன்மூலம் கறை படிந்த பற்கள் உருவாகக்கூடும்.

இரும்புச் சத்து மாத்திரைகள் பற்றி பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. இதுபற்றி ரத்தவியல் நிபுணர் ரேவதிராஜிடம் கேட்டோம்.

“இன்றைய தேதியில், ரத்தச்சோகை என்பது மிகவும் பொதுவான நோய்க்குறைபாடாக மாறி இருக்கிறது. உணவுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே, இதற்கு முக்கியக் காரணம். அதேபோல் குழந்தைகள் சத்து மாத்திரை சாப்பிடுவதில் பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் இருக்கின்றன.

உண்மையில், சத்து மாத்திரைகள் ஆரோக்கியமானவையே. அதில் பக்கவிளைவுகள் இருக்கும் என்றாலும், எவ்வித உடல்நலக் குறைபாடுகளையும் அது ஏற்படுத்தாது. அப்படியே பக்கவிளைவு ஏற்பட்டாலும் அவற்றை சரிசெய்வது எளிது.

உதாரணமாக, இரவில் இரும்புச்சத்து மருந்து சாப்பிட்டதும், பல் விளக்கிவிட்டு தூங்கினால் கறைபடிதல் பிரச்னையைத் தவிர்க்கலாம். அதேபோல இரும்புச் சத்து மாத்திரைகளைச் சாப்பிடும்போது, முதல் இரு வாரங்களுக்கு செரிமானக் கோளாறுகள், மலச்சிக்கல் ஏற்படலாம்.

பல்

பழகப்பழக, உடலானது இரும்புச் சத்துகளை ஏற்றுக்கொள்ளப் பழக்கப்பட்டுவிடும். அதன்பிறகு பிரச்னைகள் தொடராது. பொதுவாக அனைத்துவிதமான உடல் செயல்பாட்டுக்கும் இரும்புச் சத்து தேவை. இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் பலவிதமான பிரச்னைகள் உருவாகும். ரத்தச்சோகை, கவனச்சிதறல், மாதவிடாய்ச் சிக்கல்கள், கர்ப்பக்கால சிக்கல்கள், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் எனப் பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

உணவுமுறையில் மாற்றம் ஏற்படுத்துவதைப்போல, சத்து மாத்திரைகள் மூலம் மாற்றம் ஏற்படுத்துவதும், நல்லதுதான். மாத்திரைகள் பற்றிய பயத்தை விட்டொழிப்பதன்மூலம் ரத்தச்சோகை பிரச்னையை மிகவும்எளிதாகத் தவிர்க்கலாம்” என்றார்.

ரத்தச்சோகை அறிகுறிகள்:

* சோர்வாகவே இருப்பது,

* பலவீனமாக உணர்வது,

* அடிக்கடி தலைச்சுற்றல் ஏற்படுவது,

* கவனச்சிதறல்கள் ஏற்படுவது,

* தோல் மற்றும் முடி வறண்டு காணப்படுவது,

* மூச்சுத்திணறல்.

* தகவலை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தயவுசெய்து அதிகமாகப் பகிருங்கள்……20180226 195114 1024x668

Related posts

கல்லீரலில் பிரச்சனை எதுவும் வரக்கூடாதா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இந்த 10 அறிகுறிகளையும் சாதாரணமாக எடுத்துக்காதீங்க!பெண்களே அவசியம் படிக்க..!

nathan

பெண்களே மிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா?இதை முயன்று பாருங்கள்…

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த வேலை செய்யும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வரும் வாய்ப்புள்ளது எனத் தெரியுமா?

nathan

மகப்பேறு மருத்துவர் செக்கப்பில் என்ன செய்வார்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் நின்ற பெண்களின் உடல் பிரச்சனையும்… டான்ஸ் தெரபியும்…

nathan

தெரிந்துகொள்வோமா? பற்களை வெண்மையாக்க சில வழிமுறைகள்

nathan

மூலிகை மந்திரம்: முருங்கை

nathan

பெண்களே ஏன் கருத்தரிக்க முடியவில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan