25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 1471864733 3 applejuice
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது குடிக்கக்கூடாத ஜூஸ்கள்!

இன்றைய காலத்தில் உடலில் நோய்களின்றி இருப்போர் மிகவும் குறைவு. ஒவ்வொருவரும் உடலில் ஏதேனும் ஒரு சிறு பிரச்சனையால் கஷ்டப்பட்டு தான் வருகிறார்கள். மேலும் ஒருசில பிரச்சனைகளுக்கு தினமும் மருந்து மாத்திரைகளை எடுத்து வர வேண்டியிருக்கும். அப்படி மருந்து மாத்திரைகளை எடுப்போரில் பலர் நீரை பயன்படுத்தினாலும், இன்னும் சிலர் டீ, காபி அல்லது ஜூஸ்களைக் கொண்டும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அப்படி ஒருசில ஜூஸ்களுடன் மாத்திரைகளை எடுத்தால், அதனால் பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இங்கு மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது குடிக்கக்கூடாத ஜூஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைத் தவிர்த்திடுங்கள்.

பப்பளிமாஸ் ஜூஸ் உயர் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் அல்லது ஏற்றத்தாழ்வுள்ள இதய துடிப்பு பிரச்சனை உள்ளவர்கள், பப்பாளிமாஸ் ஜூஸை அதிகாலையிலோ அல்லது மாத்திரையுடனோ எடுக்க வேண்டாம். ஆய்வுகளில் இப்பிரச்சனைக்கான மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, பப்பாளிமாஸ் ஜூஸைக் குடித்தால், அது எதிர்விளைவை உண்டாக்குவதாக தெரிய வந்துள்ளது.

கிரான்பெர்ரி ஜூஸ் இதய பிரச்சனைகளுக்கு மாத்திரைகளை எடுப்பவர்கள், கிரான்பெர்ரி ஜூஸ் உடன் எடுக்காதீர்கள். இது எதிர்வினைப் புரிந்து, அது நிலைமையை மோசமாக்கும். ஆய்வுகளிலும், கிரான்பெர்ரி ஜூஸில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மற்றும் உட்பொருட்கள், மாத்திரையில் உள்ள இரத்தம் உறையும் பண்பைத் தாக்குவது தெரிய வந்துள்ளது.

ஆப்பிள் ஜூஸ் ஆப்பிள் ஜூஸும் மாத்திரைகளின் சக்தியைப் பாதிப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே மாத்திரைகளை ஆப்பிள் ஜூஸ் உடன் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

அன்னாசி ஜூஸ் இரத்தத்தை மெலிய வைக்கும் மாத்திரைகளை எடுப்பவர்கள், அன்னாசி ஜூஸ் உடன் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அன்னாசியில் உள்ள புரோமெலைன் இரத்தம் உறையும் பண்பைப் பாதிக்கும். மேலும் புரோமெலைன் ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் மயக்க மருந்து பண்பையும் தாக்கும். எனவே மன இறுக்கத்திற்கு மாத்திரைகளை எடுப்பவர்கள், அன்னாசி ஜூஸ் உடன் எடுக்காதீர்கள்.

ஆரஞ்சு ஜூஸ் காலையில் மாத்திரைகளை எடுப்பவர்கள், காலை உணவுடன் ஆரஞ்சு ஜூஸ் குடிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் ஆரஞ்சு ஜூஸில் உள்ள சிட்ரஸ் அமிலம், மருந்துகளின் தன்மையைப் பாதித்து, அதனால் எதிர்விளைவை உண்டாக்குவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

22 1471864733 3 applejuice

Related posts

ஸ்கேன் படங்கள்! கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் பற்றி மக்களிடையே நிலவும் சில தவறான எண்ணங்கள்!

nathan

மூலநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

nathan

தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள். கடுக்காய்தான் அது!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல்நலம் காக்கும் நல்லெண்ணெய்யின் பயன்கள்…!

nathan

கற்பக தருவான கல்யாண முருங்கை

nathan

வெள்ளரி…உள்ளே வெளியே !

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு டயப்பர் எரிச்சலா? இதோ 12 சூப்பர் மருந்துகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களை விட ஆண்களுக்கு கணைய புற்றுநோய் அதிகம் ஏற்பட காரணங்கள்

nathan