25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
body 29 1503983284
மருத்துவ குறிப்பு

உங்க உடல் உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்த நீங்கள் சாப்பிட வேண்டிய 5 பொருட்கள்!!

நாம் பயன்படுத்தும் கார், பைக் போன்ற வாகனங்களை மற்றும் வீடு உபயோக பொருட்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஒரு ஜெனரல் சர்வீஸ் செய்கிறோம். அதாவது, அதை வாட்டர் வாஷ் செய்து, துடைத்து, ஆயில் போட்டு, ஸ்க்ரூ போட்டு அதற்கு ஒரு புத்துயிர் கொடுக்கிறோம். இதனை செய்வதால் இன்னும் சில பல ஆண்டுகள் அவை நமக்கு உபயோகமாக உள்ளன. நமது உடலுக்கு இதை எப்போதாவது செய்ததுண்டா? இல்லை என்பது தான் பலரின் விடையாக இருக்கும். நாம் இந்த ரீவைடலிஸ் என்ற மறு உயிர்ப்பு முறையை நிச்சயம் பின்பற்ற வேண்டும். இது நமது உடலை புத்துணர்ச்சி அடைய உதவுகிறது. இதன் மூலம் மனதின் அழுத்தங்கள் குறைகிறது. இயற்கை முறையில் உடலை மறு உயிர்ப்பு செய்வது சிறந்த செயலாகும்.

பழங்காலத்தில் கூட நமது முன்னோர்கள் பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களினால் உடலை ரீவைடலிஸ் செய்திருந்தனர். நம் உடலை சுத்தகரிக்க பயன்படுத்தப்படும் 5 பொருட்களையும் அவற்றின்யும் இப்போது காண்போம்.

எலுமிச்சை: மனித உடலுக்கு எலுமிச்சை பல விதமான நன்மைகளை செய்கிறது. குளிர்ந்த அல்லது சூடான நீரில் இந்த எலுமிச்சை சாறை கலந்து பருகும் போது நமது உடலில் உள்ள இரத்தம் புத்துணர்ச்சி அடைகிறது . உடலும் சீராக இயங்குகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மற்றும் பயோபிளாவனாய்டுகள் ஆகியவை உள்ளன. அவை நுண்ணுயிர் எதிர்ப்பிகள், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. கல்லீரலும் சிறுநீரையும் சுத்திகரிப்பதற்கு எலுமிச்சை சிறந்த தீர்வாகும். .

தேங்காய் நீர்: நீர்சத்துக்கு ஒரு மிக பெரிய ஆதாரம் தேங்காய் நீர் அல்லது இளநீர். இது பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் எலெக்ட்ரோலைட் ஆகியவற்றை கொண்டதாகும். பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் ஹைப்பர் டென்ஷன் குறைகிறது. தசை வலிகளை குணமாக்குகிறது. பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றில் இருந்து நரம்பு மண்டலத்தை அமைதி படுத்துவது வைட்டமின் பியின் பணியாகும். தேங்காய் நீரில் இருக்கும் எலெக்ட்ரோலைட்கள் உடலின் ஆற்றலை மீட்டெடுக்க உதவுகிறது அதன்மூலம் மனமும் மூளையும் புத்துணர்ச்சி அடைகிறது.

கொம்புச்சா : கொம்புச்சா என்பது இயற்கை முறையில் புளிக்க வைத்த ஒரு தேநீர் வகையாகும். உடலை புத்துணர்ச்சி அடைய செய்யும் அற்புதமான செயல்பாடு இந்த பானத்திற்கு உண்டு. பல நூற்றாண்டுகளாக இதன் பயன்பாடு உலக அளவில் இருந்து வருகிறது.

கொம்புச்சா சிறிது புளிப்பு சிறிது கசப்பு கலந்த ஒரு பானமாகும் . இதில் அதிக அளவிலான ப்ரோ பையோட்டிக்குகள் உள்ளன. ஆகையால் செரிமானத்தை அதிகரிக்கிறது. இதன்மூலம் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.

பதற்றம் மற்றும் அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் பி சத்து இதில் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆற்றலை அதிகரிக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் இந்த தேநீரில் அதிகம் உள்ளது.

சியா விதைகள்: ஊட்டச்சத்துகள் மூலமாக உடலை புத்துணர்ச்சி அடைய விரும்பினால் நீங்கள் கண்டிப்பாக சியா விதைகளை எடுத்து கொள்ளலாம்.

1 கிராம் சியா விதைகளில், சால்மன் மீனை விட 8 மடங்கு அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உண்டு.

பாலை விட 6 மடங்கு அதிக கால்சியம் உண்டு கீரைகளை விட 3 மடங்கு இரும்பு சத்து உண்டு. ப்ரோக்கோலியை விட 15 மடங்கு அதிகமான மெக்னீசியம் உண்டு.

ப்ரோக்கோலியை விட 15 மடங்கு அதிகமான மெக்னீசியம் உண்டு. புரத சத்தின் ஒரு மிக பெரிய ஆதாரம் இந்த சியா விதைகள் ஆகும். உடல், முடி, நகம், தசைகள், சிவப்பு அணுக்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இந்த புரத சத்து இன்றியமையாதது. அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை சிறந்த இரத்த ஓட்டத்திற்கும் ஆரோக்கியமான இதயத்திற்கும், உடலை சம நிலையில் வைக்கவும் உதவுகின்றன. இரத்த சர்க்கரை அளவை சியா விதைகள் கட்டுக்குள் வைக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல செய்தியாகும்.

தர்பூசணி: தர்பூசணி உடல் புத்துணர்ச்சிக்கு ஏற்ற உணவு பொருள். இது முழுவதும் தண்ணீரால் நிரப்பப்பட்டது மட்டுமல்ல, பல்லூட்டச்சத்துகள் , வைட்டமின் ஏ , வைட்டமின் சி,வைட்டமின் பியில் சில, ஆன்டிஆக்ஸிடன்ட், பீட்டா கரோடின் ,அமினோ அமிலங்கள் ஆகியவையும் தர்பூசணியில் அதிகம் உள்ளன.

தர்பூசணியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இயற்கையாகவே மன அழுத்தத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாட்டுக்கு பொட்டாசியம் துணை புரிகிறது. பதற்றத்தை குறைக்கிறது.

இளநீரை போல் தர்பூசணியும் நீர்சத்து நிறைந்த உணவு பொருள். இதனை உண்ணும் போது உடல் மற்றும் மனம் இரண்டுமே புத்துணர்ச்சி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இயற்கையான முறையில் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்போம்!body 29 1503983284

Related posts

நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு ஜோடிகள் கவனிக்க வேண்டியவை… தவிர்க்க வேண்டியவை!

nathan

கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியவை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆண்கள் ஏன் மனைவியிடம் பொய் சொல்றாங்க தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா டான்சில் பிரச்னையை தவிர்ப்பது எப்படி?!

nathan

தூதுவளை மருத்துவ பயன்கள்! ~ தெரிந்துகொள்வோமா?

nathan

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

nathan

படிப்பதை மறக்காமல் இருக்க டிப்ஸ்! – தெரிந்துகொள்வோம்!

nathan

எக்ஸிமா ( Eczema ) தோல் பராமரிப்பு.

nathan

ஃபேமிலி டாக்டர் சரி. .. ஃபினான்ஷியல் டாக்டர் தெரியுமா?

nathan