27.9 C
Chennai
Sunday, Jun 23, 2024
1503925447
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா காலையில் இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும்…. அந்த நோய்கள் பறந்து போகும்.!!

சீரகம் = சீர்+அகம். தமிழ்ச் சித்தர்கள் எதையும் காரணப் பெயர் கொண்டே அழைப்பர்.சிலவற்றைச் சூட்சமப் பெயர் (அவர்களுக்கே விளங்கும் குறிச்சொல்/ மறைபொருள்/ பரிபாசை) கொண்டும் அழைப்பர். இங்கே அகத்தைச் சீர் செய்வதால் தமிழ்ச்சித்தர்களால் சீரகம் என அழைக்கப்பட்டது.நற்சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், பிலப்பு சீரகம், நட்சத்திர சீரகம், செஞ்சீரகம் என சீராக வகையில் ஏழு வகை உண்டு.சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது.சரி., சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்..

சீரகத்தை வாயில் போட்டு, தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.அகத்திக்கீரையுடன், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும்.

இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும். சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும். சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரத்த மூலம் தீரும்.

சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும். சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம், மந்தம் நீங்கும்.1503925447

Related posts

தூதுவளை மருத்துவ பயன்கள்! ~ தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு வயசு கூட ஆகாத குழந்தைக்கு மறந்தும் இந்த உணவுகளை கொடுத்துடாதீங்க…

nathan

போலியோ சொட்டுமருந்து கட்டாயம் அளிப்போம்!

nathan

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 10 கண்ணியமான மற்றும் நல்ல ஒழுக்க பண்புகள்!

nathan

நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பைத் தடுக்கும்

nathan

ஆஸ்துமா பிரச்னையுள்ள கர்ப்பிணிகள் இன்ஹேலர் உபயோகிப்பது பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

குழந்தைகளுக்கு விக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும்

nathan

தெரிந்துகொள்வோமா? ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் வியக்கத்தகு ஆரோக்கிய நன்மைகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதத்தில் கவனிக்க வேண்டியவை!!

nathan