25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
486621764
மருத்துவ குறிப்பு

25 வயதை அடைந்த பெண்களா நீங்கள்..??அப்ப நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை!!

உங்களுக்கு 25 வயது ஆகிவிட்டதா? இந்த வயதில் சில விடயங்களை செய்யாமல் தவறிவிட்டீர்களா? பின்பு எதிர்காலத்தில் இதை நாம் செய்யவே இல்லையே என்று கவலைப்படுவீர்கள். அதனால் இதுதான் சரியான நேரம். வாழ்க்கை மிகவும் சிறியது, அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாமல் இருப்பது தான் சுவராஸ்யமே. அதில் இந்த 10 விடயங்களை செய்திருக்கிறீர்களா என்று பாருங்கள்.

தொழில்
இந்த காலத்துல பெண்களுக்கு வேலை ரொம்ப அவசியம். சில பேருக்கு வேலைக்கு போகணும்னு கட்டாயம் இருக்கும். ஆனா சில பேருக்கு அப்படி இல்ல. பணத்தேவைக்காக மட்டும்தான் வேலைக்கு போகணும்ங்கிற‌ கட்டாயம் இல்லை. உங்களுக்கு பிடிச்ச துறையை தேர்ந்தெடுத்து வேலைக்கு போங்க , சம்பளம் குறைவா இருந்தாலும் பரவாயில்லை. இது ஒரு புது அனுபவமா இருக்கும். உங்க திறமையை காட்ட அங்க இருக்குற வாய்ப்புகளை பயன்படுத்திக்கோங்க.

சுதந்திரமாக முடிவு எடுக்கிறீர்களா?
இது உங்க வாழ்க்கை. உங்களுக்கு என்ன தேவைனு உங்களவிட யாருக்குத் தெரியும்? படிப்போ வேலையோ, எதுவானாலும் உங்க மனசு என்ன சொல்லுதோ அதை ஃபாலோ பண்ணுங்க கேர்ள்ஸ் . அதேசமயம் சுதந்திரமான முடிவுனு சில முடிவுகள் எடுத்து பிரச்னைகளிலும் மாட்டிக்காதீங்க. முடிவெடுக்கறதுக்கு முன்னாடி இன்னொரு முறை யோசிங்க.

நண்பர்கள்
எல்லோரிடமும் சகஜமாக பழகுங்கள். உங்களுக்கு 10 நண்பர்கள் இருக்கணும்னு அவசியம் இல்லை , ஒருத்தர் இருந்தாலும் உங்க சுக துக்கங்களை மனசார பகிர்ந்துகொள்கிற துணையாக இருக்க வேண்டும் . பெண்ணுக்கு, பெண் தோழிதான் இருக்கணும் அவசியம் இல்லை கேர்ள்ஸ். ஆண் நண்பர் கூட இருக்கலாம், கண்டிப்பா எல்லாருக்கும் ஶ்ரீதர் பட சித்தார்த் மாதிரி ஒரு நட்பு தேவை பாஸ். நட்புக்கில்லை எல்லை.

வங்கி கணக்கு
ஒரு பொண்ணுக்கு எப்பவுமே பக்க பலமா அம்மா அப்பா, சொந்தக்காரங்கனு நிறையப் பேர் இருப்பாங்க. ஆனாலும் உங்களுக்கு ஒரு பேங்க் அக்கவுன்ட் நிச்சயம் தேவை. அப்போதான் ஒரு தன்னம்பிக்கையும், பணத்தை பொறுப்பா செலவழிக்கிற, சேமிக்கிற பொறுப்பும் கிடைக்கும்.

பயணம்
25 வயசுல குறைஞ்சது 20 ஊருக்காவது போயிருக்கணும் பாஸ். கையில ஒரு புத்தகம், கூலர்ஸ் , ட்ராவல் கைடு , கேமிரானு ஒரு பேக்கில் போட்டுக்கிட்டு கிளம்பிடுங்க. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை இருக்கும். அதை தெரிஞ்சுக்கோங்க. அதை எஞ்சாய் பண்ணுங்க. எல்லாமே என்சைக்ளோபீடியாவில் இருக்காது. சில விஷயம் அனுபவத்தால் மட்டுமே கிடைக்கும். கல்யாணம், குழந்தைங்கன்னு ஆயிடுச்சுன்னா. அதுக்கு அப்புறம் எங்கயும் போக நேரமிருக்காது. அதுக்குள்ள உலகம் சுற்றும் வாலிபியா இருக்க பாருங்க.

சமயல் அரசி
ஒரு முறையாவது பிரியாணி சமைச்சிருக்கீங்களா ? சீனியர் ஸ்டார் ஹோட்டல் செஃப் அளவுக்கு சமைக்க தெரியலைனாலும் பரவாயில்லை, நமக்கு தெரிஞ்சதை வெச்சு நாமும் கெத்து செஃப்னு காமிக்கணும். சமைக்க தெரியாம சமைச்சு அப்பாக்கோ இல்லை நண்பர்களுக்கோ கொடுத்து, அவங்க முகத்துல வர மரண பீதிய பார்த்தாலும், கண் கலங்காம யூ-ட்யூப் பார்த்தாவது சமைச்சு அசத்தி சூப்பர் சாப்பாடுணு பேர் வாங்கி வச்சுக்கோங்க கேர்ள்ஸ்.

ஈர்ப்பு
வாழ்க்கைல எல்லா பொண்ணுங்களுக்குமே, தனக்கு வரப்போற பையன் இது மாதிரிதான் இருக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த மாதிரி ஒரு பையன் இருந்தா, அவன் மேல க்ரஷ் இருக்கதான் செய்யும். விடிவி சிம்பு மாதிரி தைரியமான பையன்னு ஆரம்பிச்சு, இதயம் முரளி மாதிரி பையன் வரைக்கும் பொண்ணுங்கள டிஸ்டர்ப் பண்ணாத ஒரு சீக்ரெட் க்ரஷ் இருக்கும். அது உங்கள கிரியேட்டிவா யோசிக்க வைக்கும். இதுக்காக நீங்க தேடி அலைய வேணாம். உங்கள தேடி வருவதுதான் சீக்ரெட் க்ரெஷ்.

திருமணம்
கல்யாணம் ஒரு போரான விஷயமா இருக்க கூடாது. உங்களுக்கு பிடிச்ச மாதிரி. அப்பா, அம்மா யாரையும் கஷ்டப்படுத்தாத, அதேசமயம் உங்களோட எதிர்காலத்த மதிக்குற ஒரு பையனா இருந்தா, தைரியமா டிக் அடிங்க. அது அரேஞ் மேரேஜோ இல்ல லவ் மேரேஜோ. லெட்ஸ் டும் டும்.

ஆளுமை
நைட் சென்னைல ஒரு ஸ்கூட்டி ட்ரைவ், தியேட்டர்ல கேங்கா ஒரு படத்துல விசில் அடிச்சு படம், சேப்பாக்கத்துல ஒரு மேட்ச். இதெல்லாம் மிஸ் பண்ணாதீங்க. சென்னை மட்டுமில்ல எந்த ஊர்ல இருந்தாலும் இப்படி ஹைப்பர் ஹாப்பி மோட்ல வாழ்ந்து பாருங்க. லைஃப் நல்லா இருக்கும்.

உரிமை
‘நீ ஒரு பொண்ணு. இதுக்கு நீ சரிபட்டு வரமாட்ட. ஒரு பையன் இத செய்யட்டும்.’ னு உங்க ஆபீஸோ, இல்ல வேற யாராவதோ சொன்னா, அவங்களுக்கு முன்னாடி உங்களால எதையும் செய்ய முடியும்ங்கிற ஆட்டிட்யூட்ட காமிங்க. பையனும், பொண்ணும் இங்க சரி சமம்னு ஃப்ரூப் பண்ணுங்க. உங்க உரிமைய யாருக்காகவும் விட்டு கொடுக்காதீங்க.இவையெல்லாம் செய்திருக்கிறீர்களா?’486621764

Related posts

காயத்தால் ஏற்படும் தழும்புகள் மறைய இயற்கை மருத்துவம்

nathan

மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?

nathan

உங்க உடலில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா? கரைக்க இதோ சூப்பர் டிப்ஸ்!

nathan

அதிமதுரம் கஷாயம் குடிப்பதன் நன்மைகள்!

nathan

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை மஞ்சளை வைத்து எப்படி போக்குவது என தெரியுமா?

nathan

மரபு மருத்துவம்: கொசுக் கடி – தப்பிக்க இயற்கை வழி

nathan

கொழுப்பு நல்லதா? கெட்டதா? தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பகப் புற்றுநோய் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

nathan

ரத்த கசிவை தடுக்கும் தேக்கு இலைகள்

nathan