25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
06 1
மருத்துவ குறிப்பு

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இதெல்லாம் பண்ணிருக்கீங்களா ?அப்ப இத படிங்க!

நீங்கள் என்னதான் உங்கள் மனைவி மீது அன்பு, அக்கறை வைத்திருந்தாலும் கூட, கர்ப்பமாக இருக்கும் போது கொஞ்சம் அதிக அன்பையும், அக்கறையையும் செலுத்த வேண்டும். ஏனெனில், அவரது வயிற்றில் வளர்வது உங்கள் கரு.

கர்ப்பமான பிறகு பெண்கள் மனதில் அதிகரிக்கும் சந்தோசத்தை விட அதிகமாக அச்சமும் இருக்கும். கர்ப்ப காலம் கரு ஆரோக்கியமாக வளருமா, எந்த பிரச்சனையும் வந்துவிட கூடாது என மனதில் ஒரு குழப்பம் இருந்துக் கொண்டே இருக்கும்

வெளியே…
வேலைக்கு செல்லும் பெண்ணாகவே இருந்தாலும் கூட, கர்ப்பம் அடைந்த பிறகு சில மாதங்களுக்கு பிறகு வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, நீங்கள் ஃப்ரீயாக இருக்கும் போதுமட்டும் இல்லாமல், அவரை இலகுவாக உணர செய்ய, எங்கேனும் அழைத்து செல்லுங்கள்.

ஷாப்பிங்!
இருவரும் சேர்ந்து ஒன்றாக பிறக்கவிருக்கும் குழந்தைக்கு தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்து வர சென்று வரலாம். இது அழகான தருணமாக மட்டுமில்லாமல், நீங்காத நினைவாகவும் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்…

நேரம்…
அவருடன் தனிமையில், அமைதியான பொழுதில் நேரம் செலவழிக்க மறக்க வேண்டாம். அவர் மனதும், உடலும் இலகுவாக உணர உடன் இருந்து உதவுங்கள். உங்கள் உயிரை சுமந்துக் கொண்டிருக்கும் அவரை அழகாக உணர செய்யுங்கள். பிரசவம் குறித்த அச்சம் இருக்கும், அதை போக்கி, ஊக்கமளியுங்கள்.

காத்தாட…
பிரசவ நேரத்தில் அவர்கள் சோர்வாக தான் உணர்வார்கள். அதை போக்க தினமும் காலை, மாலை வாக்கிங் சென்றுவர கூறுவார்கள். அவர்களை வாக்கிங் சென்றுவா என அனுப்பாமல், உடன் நீங்களும் சென்று வாருங்கள். இதனால் அவரும் வலிமையாக இருப்பார்கள், உங்கள் உறவும் ஆரோக்கியமாக இருக்கும்.

 

பழக்கம்!
ஒருவேளை உங்களுக்கு குடி, புகை இருந்தால், குறைந்தபட்சம் அவர் கர்ப்பமாக இருக்கும் காலத்திலாவது நிறுத்திக் கொள்ளலாம். இது அவர் மனம் நிம்மதியாக இருக்க செய்யும். தேவையற்ற மனவேதனை அளிக்காது.

06 1

ஆரோக்கியம்!
கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமணா டயட் முக்கியம். அவர் என்ன உணவு உண்கிறார், எதை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும், எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

07 34

பேசுங்க…
கருவில் வளரும் குழந்தையுடன் பேசுங்க. வயிற்றை தடவி கொண்டுங்கள்., முதல் முதையை முகத்தை வைத்தும் உணரலாம், வளரும் போதே முத்தங்கள் இட்டு உங்கள் அன்பை செலுத்தலாம்.

08

மருத்துவரிடம்…
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது, நீங்கள் ஒருபோதும் செய்துவிடக் கூடாத தவறு… மருத்துவரிடம் செல்லும் போது, அம்மாக் கூட போயிட்டு வந்திடு என கூறி அனுப்புவது. எல்லா முறையும் நீங்களே உடன் சென்று வாருங்கள்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தூக்கமே வரலன்னு புலம்பிட்டே இருக்கீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

மாணவர்களுக்கு ஆற்றலை அதிகரிக்கும் பகல் நேர குட்டித் தூக்கம்

nathan

உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்று ஆசையா? சித்தர்கள் கூறும் ரகசியத்தை கடைபிடிங்க

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீண்ட நேர பிரசவ வலியில் இருந்து தப்பித்து எளிதில் பிரசவம் நடைபெற மேற்கொள்ளும் வழிகள்!!!

nathan

இயற்கை வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம்

nathan

மூக்கடைப்பிலிருந்து மாத்திரையின்றி எளிதில் நிவாரணம் பெற !இதை படிங்க…

nathan

சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது!

sangika

உங்க குழந்தை பிறந்த அப்போ என்ன கலர்ல இருந்தாங்க?

nathan

உங்களுக்கு தெரியுமா கற்றாழையை கொண்டு முடியை கருமையாக்கி முடி உதிர்வதை தடுக்கும் நாட்டு வைத்தியம்

nathan