23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ld2268
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா ஒரு நாளைக்கு 2 முறை இதை பூசினால் காணாமல் போகும் கருவளையம்..!

கண்ணுக்குக் கீழே உண்டாகிற கருவளையம் சருமத்தின் இயற்கையான நிறத்தையும் முகப்பொலிவையும் முற்றிலுமாகக் கெடுத்துவிடும்.கண்ணைச் சுற்றி அது வளையம்போலவோ அல்லது ஷேடோவைப் போன்றோ இருக்கும். கருவளையம் என்பது அவ்வளவு மோசமான சருமப் பிரச்னை என்று கிடையாது. ஆனால் பார்ப்பதற்கு ஆரோக்கியம் இல்லாமல் நோய் வாய்ப்பட்டது போலவும் மிகவும் சோம்பலாகவும் வெளியில் காட்டும்.

மிக எளிதாக கருவளையத்தை சரிசெய்து கொள்ள முடியும். அதுவும் வீட்டிலேயே உள்ள பொருள்களைக் கொண்டு முகத்தைப் பொலிவாக்கிக் கொள்ள முடியும்.கருவளையத்தை சரிசெய்யும் மிக சிறந்த தீர்வாக தக்காளி இருக்கும். எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் தக்காளி ஜூஸ் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் அப்ளை செய்து, 10 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை முகத்தில் அப்ளை செய்து வந்தால், கருவளையம் குறையத் தொடங்கும். தக்காளி சாறுடன் புதினா இலைச்சாறும் சேர்த்துக் கொள்ளலாம்.
கண்ணைச் சுற்றி பாதாம் ஆயில் அப்ளை செய்து சிறிதுநேரம் மசாஜ் செய்து வர வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் கண்ணைச் சுற்றி பாதாம் ஆயிலை அப்ளை செய்துவிட்டு மறுநாள் காலை குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கண்கள் மிகத் தெளிவாக கருவளையம் குறையும்.

கருவளையத்துக்கு மிகச்சிறந்த தீர்வாக அமைவது வெள்ளரிக்காய் என்பது நமக்குத் தெரியும். வெள்ளரிக்காயை பேஸ்ட்டாக்கி அல்லது அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்திருந்து எடுத்து, பத்து நிமிடங்கள் வரை கண்ணின் மேல் வைத்திருக்க வேண்டும். பின் சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். கண்ணுக்கு கீழே உள்ள கருவளையம் மறைவதோடு, முகமும் பொலிவுடன் இருக்கும்.

உருளைக்கிழங்கை தோலுடன் ஜூஸ் எடுத்து அதை காட்டனில் நனைத்து கண்களை மூடிக்கொண்டு கண்ணுக்கு மேல் வைத்திருக்க வேண்டும். 15 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும். அதோடு இரவில் உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி கண்ணுக்கு மேல் வைத்திருந்து எடுத்தாலும் கருவளையம் மறையும்.

அதேபோல குளிர்ந்த பாலை பஞ்சில் நனைத்து கண்ணுக்குமேல் 10 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவலாம். இதை தினமும் செய்து வரலாம்ld2268

Related posts

அழகு பல …….. பேஷியல் டிப்ஸ் (beauty tips in Tamil)

nathan

எண்ணெய் வழியிற முகம் மட்டுமே என்று அலட்டிக் கொள்பவரா நீங்கள்? கவலைய விடுங்க.

nathan

முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவது குறைய

nathan

வீட்டிலேயே கவனமாக ஒரு ஃபேசியல் எவ்வாறு செய்து கொள்வது

nathan

உங்க முடி பளபளன்னு அடர்த்தியா வளர… மாம்பழ ஹேர் பேக்குகளை யூஸ் பண்ணுன்னா போதுமாம்!

nathan

பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்க பூண்டை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

சோப் போட்டு குளித்தால் முகம் வறண்டு போகிறதா

nathan

ஆண்களின் தாடியை வளர செய்யும் 12 உணவு வகைகள்..!சூப்பர் டிப்ஸ்..

nathan

உங்க முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிந்து கருப்பா காட்டுதா? சூப்பர் டிப்ஸ்

nathan